மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பரண் 2


சுட்டெரிக்கும் வெயிலின் வெக்கை தணிக்க, இளைப்பாற மரநிழலில் சற்று தங்கிச்செல்லும் பொழுதுகளில் அந்த மரம் நட்டவரைக் குறித்து ஒரு கணம் சிந்திப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? விதையூன்றி, நீரூற்றி, பாதுகாத்து யாரோ வளர்த்த மரத்தின் நிழலை எந்தவித நன்றி பாராட்டலுமின்றி அனுபவித்துக் கடந்து செல்கிறோம். இந்தப் பரண் விதையூன்றியவர்கள் குறித்த நினைவுப் பகிர்தல். எம்.ஏ. ஜமீல் அஹமத் அவர்கள் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் முதுகெலும்பாய் இருந்தவர். திருக்குர்ஆன், நபிமொழிகளை அழகு தமிழில் தருவதற்கு அரும்பாடுபட்டவர். இஸ்லாமிய இயக்க நூல்களைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்தவர். சமரசம் இதழின் வேராய் இருந்தவர். களைப்பில்லாத உழைப்பாளி. அவருடைய ஒவ்வொரு பணியிலும் செய்நேர்த்தி மிளிரும். ஒரு வார்த்தை கூடப் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாள் கணக்கில் பயணித்துத் தேடும் தேடல் அவருடையது. இத்தனைக்கும் உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

அவருடைய தேடல் எத்தகையது? தேடலுடன் மட்டும் நின்றுவிடாமல் அதனைச் செயல்படுத்துவதில் அவரது அதீதக் கவனம் எல்லாவற்றையும் 1980 ஆகஸ்டு 115 சமரசம் இதழில் ஷிஹாப் எனும் பெயரில் அவர் எழுதிய கட்டுரை எடுத்தியம்புகிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே நமக்கு பிரமிப்பு மேலிடுகிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளை விவரிக்கும் தமிழ்ச் சொற்களைத் தேடி அலைகிறார் ஜமீல் அஹமது அவர்கள். கிடைக்கவில்லை. நேராகச் சென்னையிலுள்ள மிகப் பெரிய நூலகத்திற் குச் சென்று தேடுகிறார். அங்கும் இல்லை. நூலகரைச் சந்திக்கின்றார். அந்த நூலகர் இவரின் தேடலைத் தூண்டிவிடுகிறார். நூலகங்களுக்கு இஸ்லாமிய நூல்களைக் கொண்டு சேர்ப்பது எனும் முடிவுடன் திரும்புகிறார். அந்த நூல்களைத் தாமே வாங்கி வைக்காமல் மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார். இதற்காக ஜகாத் தொகையைக்கூட செலவழிக்கலாம் எனும் மார்க்க அறிஞரான யூசுஃபுல் கர்ளாவியின் விளக்கத்தைத் துø ணக்கு அழைத்துக் கொண்டு அழைப்பு விடுக்கின்றார். அத்துடன் தன் பணி முடிந்துவிட்டது என்றில்லாமல் இஸ்லõமிய அறக்கட்டளையின் நூலகத்திற்கான சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்கின்றார். எங்களுக்குப் பணம் அனுப்பினால் நாங்களே வாங்கி நூலகத்தில் சேர்த்துவிடுகிறோம் என்ற அறிவிப்புடன் அவர் நிற்கவில்லை. அதற்கான முழுமுயற்சியையும் மேற்கொண்டு நூல்களைத் திரட்டி நூலகங்களில் இஸ்லாமிய நூல்களை இடம் பெறச் செய்கிறார். இன்று பெரும்பாலான நூலகங்களில் இஸ்லாமிய நூல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றால் அன்று சமரசத்தின் வாயிலாக அவர் மேற்கொண்ட அரிய முயற்சி அன்றி வேறு என்ன?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர பரண்

மேலும் தேடல்