பரணில் கிடக்கிறது பரண் எனும் சொல்லும்! பளிங்குக் கற்களால் மிளிர்கின்ற இன்றைய இல்லங்களில் பரணுக்கான வாய்ப்புகள் இல்லை. இந்தச் சொல்லாடலையே புதிதாய்ப் பார்ப்ப வர்கள் உண்டு. பரண் என்பது ஆவணம். பரண் என்பது கரு வூலம். பரணில் கிடப்பது பழம் பொருள்கள் அல்ல! அங்கு வரலாறு புதைந்து கிடக்கிறது
சுட்டெரிக்கும் வெயிலின் வெக்கை தணிக்க, இளைப்பாற மரநிழலில் சற்று தங்கிச்செல்லும் பொழுதுகளில் அந்த மரம் நட்டவரைக் குறித்து ஒரு கணம் சிந்திப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? விதையூன்றி, நீரூற்றி, பாதுகாத்து யாரோ வளர்த்த மரத்தின் நிழலை எந்தவித நன்றி பாராட்டலுமின்றி அனுபவித்துக் கடந்து செல்கிறோம்.