மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

வழித்துணைச் சாதனங்களாய் மூன்று பண்புகள்
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி, , 16-30 SEPTEMBER 2022


இந்த மூன்று நாள் முகாமை சோகமான தருணங்களோடு நிறைவு செ#து கொண்டிருக்கின்றோம். முகாமை முடிக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் நமக்கு மிகப் பெரும் உண்மையை உணர்த்தி இருக்கின்றான். அல்லாஹ்வின்  நல்லடியார்களைப் பொறுத்தவரை அவர்கள் மரணிக்கின்ற போது அந்தப் பயணம் வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதாக, அல்லாஹ்வைச் சந்திப்பதற்கான பயணமாக, அல்லாஹ்வின் அவையில் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான, சுவனத் தோட்டங்களில் நுழைவதற்கான பயணமாகத்தான் இருக்கும்.

எஞ்சியிருக்கின்ற நம்மைப் போன்றவர்களுக்கான இந்த மரணம் ஓர் அழகிய நிøனவூட்டலாகும். நேசத்துக்குரிய சொந் தங்களின் மரணத்தின் மூலமாக இறைவன் நம்மை எச்சரிக்கின்றான். மரணத்திற்கு முன்பு நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த மரணச் செ#திகள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனா# இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமை நாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப் பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப்படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான். இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அருமைச் சகோதரர் ஜி.அப்துர் ரஹீம் சாஹிப் தம்முடைய வாழ்வை முழுமைப் படுத்திவிட்டு இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் ஒட்டுமொத்த வாழ்வையும் இறைவழியில் அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்க ஊழியரின் ஏக்கமாக ஆசையாக இருக்கும். இறுதி மூச்சு வரை இறைவழியில் ஓயாமல் ஒழியாமல் இயங்க வேண்டும் என்பதுதான் நம்மில் ஒவ்வொருவருடைய அழகான விருப்பமாகும். இயக்கத் தோழர்கள் புடை சூழ, இயக்கத்தின் முக்கியமான நிகழ்வு ஒன்றில் இவ்வாறு மறுமைக்கான பயணத்தைத் தொடங்கி யிருக்கின்றார் அப்துர் ரஹீம் அவர்கள். இன்றைய இந்த அமர்வில் சகோதர, சகோதரிகள் பலரும் அவரைக் குறித்து பகிர்ந்து கொண்ட நினைவலைகளையும் உணர்வுகளையும் சகோதரர் டி.யூஸுஃப் பாஷா மொழிபெயர்த்துச் சொல்லக் கேட்டேன்.

அவற்றிலிருந்து என்னைக் கவர்ந்த அப்துர் ரஹீம் அவர்களின் மூன்று சிறப்புகளையே இப்போது இந்த முகாமின் நிறைவுரையாக, இங்கிருந்து நாம் அனைவரும் கொண்டு செல்ல வேண்டிய வழித்துணைச் சாதனங்களாகப் பகிர்ந்து கொள்ள விரும்பு கின்றேன்.

1. அழைப்புப் பணியில் அதீத ஆர்வம் அப்துர் ரஹீம் அவர்களின் வாழ்விலிருந்தும்  செயல்பாடுகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கின்ற முதன்மையான, முக்கியமான சிறப்பியல்பு அழைப்புப் பணியில் அவருக்கு இருந்த மிகப் பெரும் ஈடுபாடும் தணியாத தாகமும்தாம். அவர் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வை தாம் பெற்றுக் கொண்ட இறைவழிகாட்டுதலை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதிலும், மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதிலும், இஸ்லாத்தின் செ#தியைச் சொல்வதிலும்தாம் அர்ப்பணித்தார். உண்மையில் சொல்லப் போனால் இதுதான் இன்றைய காலத்தில் நீங்களும் நானும் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரும் பணியாகும்.

நம்முடைய வாழ்வுக்கான தவணையும் ஒருநாள் முடிந்துவிடும். அதற்கு முன் நமக்குக் கிடைத்துள்ள அவகாசத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் உங்கள் மீதும் நம் அனைவர்மீதும் இருக்கின்ற பொறுப்பாகும். அழைப்புப் பணி என்றாலே நம்மு டைய கவனமும் ஈடுபாடும் பெரும் பெரும் நிகழ்வுகளிலும், ஆ#வரங்குகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், பெருநாள் சந்திப்பு விழாக்கள் போன்றவற்றை நடத்துவதிலும்தான் குவிந்து விடுகின்றது. கூட்டாக மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள்தாம் நம்முடைய மனத்தில் தோன்றுகின்றன.

ஆனால் தனிப்பட்ட முறையில் நம்மு டைய செயல்களால், பழகும் விதத்தால், நடத்தையால் இஸ்லாத்தைப் பிரதிபலிக்கின்ற நடமாடும் இஸ்லாமாக வாழ்ந்து காட்டுவது தான் சிறப்பானதாகும். ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் இதில்தான் கவனம் செலுத்தினார். மக்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவதிலும் தனிப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்துவதிலும், அவர்களின் விழாக்களிலும் சுகதுக்கங்களிலும் பங்கேற்று மனங் களைக் கொள்ளை கொள்வதிலும், குடும்பத் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினார்.

நம்முடைய செயல் பாடுகளும் அவ்வாறே அமைய வேண்டும். நம்முடைய கவனமெல்லாம் நமக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு 24 மணி நேரங் களிலும் எத்தனை நெஞ்சங்களை இளகச் செ#தோம் என்பதிலும், எத்தனை பேருக்கு செ#தியை எடுத்துரைத்தோம் என்பதிலும், எத்தனை பேருக்கு அழைப்பு விடுத்தோம் என்பதிலும் குவிந்திருக்க வேண்டும். இன்றைய நாட்டுச் சூழல் குறித்து பலரும் தம்முடைய கவலையை வெளிப்படுத்தினார்கள். குமுறினார்கள். ஆனால் ஒன்றை நம்முடைய மனங்களில் இருத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே நிலைமைகள் குறித்துப் புலம்புவதால் எந்தப் பயனும் இருக்காது.

ஒப்பாரியாலும் அழுகையாலும் கவலைப்படுவதாலும் நம்மால் எந்தவொரு பிரச்னையையும் தீர்க்கவே முடியாது. அதற்குப் பதிலாக நிலைமையை மாற்றுவதற்காக ஓயாமல் ஒழியாமல் உழைக்க வேண்டும். பாடுபட வேண்டும். கடுமையாக முயல வேண்டும். நம்முடைய பங்களிப்பும் பங்கேற்பும் என்னவாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் யோசிக்க வேண்டும்.

இதுதான் இன்று நாம் செ#ய வேண்டிய முதல் பணியாகும். ஒவ்வொரு தல ஜமாஅத்தும் தத்தமது இடங்களில் இந்தப் பணியில் தம்முடைய கவனத்தைக் குவிக்க வேண்டும். இந்த வேலையைச் செ#வதற்காகத்தான் செப்டம்பர் 4, 2022இன் இந்தப் புத்தம் புதிய காலை புலர்ந்தது. இந்த செப்டம்பர் நான்காம் தேதி நம்முடைய வாழ்வில் முதல் முறையாக கிடைத்துள்ளது.

இந்த நாள் நமக்குக் கிடைப்பது இதுவே கடைசி முறை யும்கூட. இந்த நாள் முடிந்த பிறகு மீண்டும் ஒருபோதும் நமக்கு 2022 செப்டம்பர் நான்காம் நாள் கிடைக்காது. நம்முடைய வாழ்வில் நமக்கு ஒரு நாள் கிடைக்கின்றது எனில் அதற்கு என்ன அர்த்தம்? அழைப்புப் பணி செ#வதற்கான வா#ப்புகளும் சந்தர்ப்பங்களும் நமக்குக் கிடைக்கின்றன என்றே அதற்குப் பொருள். செப்டம்பர் நான்காம் நாள் நமக்குச் சுளையாக கிடைத்திருக்க நாம் அதற்கான உரிமையை முழுமையாக  நிறைவேற்றுகின்றோமா என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.

இனி நம்முடைய வாழ்வில் எஞ்சி யிருக்கின்ற ஒவ்வொரு நாளையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்றும் இறைவன் நம் மீது விதித்துள்ள பொறுப்புகளை செம்மையாக நிறைவேற்று வோம் என்றும் சபதமேற்போம்.

2. இயக்கத்தை வலுப்படுத்துவதில் தனிக் கவனமும் அதிக அக்கறையும்...! ஜனாப் ஜி.அப்துர் ரஹீம் அவர்களிடம் இருந்த இரண்டாவது சிறப்பு என்னவெனில்! அவர் எந்நேரமும் எல்லாச் சந்தர்ப்பங் களிலும் இயக்கத்தைப் பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலுமே அதிகமான அக்கறை கொண்டவராக இருந்தார். நாம் ஒரு மகத்தான இலட்சியத்தை ஏற்றுக்கொண்டு இயக்கமாக ஒன்றிணைந் திருக்கின்றோம். மக்கள் கருத்தை வார்த்தெடுப்பதன் மூலமாகத்தான் நாம் விரும்பு கின்ற மாற்றத்தைக் கொண்டு வரவே நாம் விரும்புகின்றோம். இதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. ஆனால் மக்கள் கருத்தை செதுக்குவது சாதாரணமான, லேசான பணி அல்ல. நம்முடைய நாட்டில் 130 கோடி பேர் வாழ்கின்றார்கள்.

அவர்களின் கருத்தை செம்மைப்படுத்துவது மிகப் பெரும் பணியாகும். நம்முடைய இயக்கத்தின் செ#தியை அதிக அளவில் பரப்பி, அதனைவிட அதிகமான அளவில் மக்களை நம் பக்கம் கொண்டு வந்தால்தான் நம்முடைய அமைப்பு வலுப்படும். நம்முடைய இயக்கம் வலுப்பெற்றால்தான் மக்கள் கருத்தைச் செதுக்குகின்ற பணியை முடுக்கிவிட முடியும். இயக்கம் வலுப்பெற வேண்டுமானால் நாள்தோறும் அதற்குப் புது இளைஞர்கள் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். புதிய இரத்தம் பா#ச்சப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

புதிய புதிய திறமைசாலிகளும் ஆற்றல் வா#ந்த மக்களும் நம்முடன் சேர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஜனாப் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் இந்த விஷயத்தில்தான் மிக அதிகமாகக் கவலை கொண்டிருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மு டைய வாழ்நாளில் நாம் எத்தனை பேரை சத்திய மார்க்கத்தின் பக்கம் கொண்டு வந்தோம்? அறுபதாண்டு காலம், எழுபதாண்டு காலம், எண்பதாண்டு காலம் வாழ்ந்து முடிந்த பிறகும் நம்முடைய மனைவி மக்கள் நம்முடைய இலட்சியப் பணியில் சேரவில்லையெனில், நம்முடைய அண்டை வீட்டாரும் நம்முடைய முஹல்லாவாசிகளும் நம்முடைய குறிக்கோளை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், இத்தனை ஆண்டுகால இயக்க வாழ்வின் பயன்தான் என்ன? நம்முடைய அமைப்புச் சட்டத்தின் பிரிவு 8இல் உறுப்பினர்களுக்கான பொறுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

எட்டுப் பண்பு களில் ஏழு விஷயங்கள் தனிமனிதரின் நடத்தையைச் சார்ந்தவை. அதாவது ஃபர்ளான கடமைகளைப் பேணி நடத்தல், பெரும் பாவங்களிலிருந்து முற்றாக விலகி இருத்தல், ஹராமான வருமானத்துக்கான அத்தனை வாயில்களையும் அடைத்துவிடுதல் என்கிற ரீதியில் தனிப்பட்ட பொறுப்புகள் விவரிக்கப் பட்டிருக்கும். ஆனால் எட்டாவதாகச் சொல்லப்பட்டுள்ள பொறுப்பு நம்முடைய பொது வாழ்வோடு தொடர்புடையதாகும். அதாவது நாம் ஏற்றுக் கொண்டுள்ள குறிக்கோளின் பக்கமும் கோட் பாட்டின் பக்கமும் மக்களுக்கு அழைப்பு விடுத்தல். அவர்களையும் நம்முடைய கோட் பாட்டையும் குறிக்கோளையும் தம்முடைய தாக ஆக்கிக் கொள்ளச் செ#தல். அவர்களை நம்முடைய இலட்சியத்தின் மீது அபிமானம் கொண்டவர்களாக ஆக்குதல். ஊழியர்களாக ஆக்குதல்.

உண்மையில் இதுதான் அசல் வேலை யாகும். இந்த அசல் வேலையில் நம்முடைய கவனமும் அக்கறையும் குவிந்திருக்கவில்லை யெனில் நாம் இந்த இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டுக்கு ஓர் உறுப்பினரைக் கொண்டு வருவாரே யõனால் அதிவேகமான வளர்ச்சி விகிதத்தை எட்டிவிடும். நம்முடைய வீட்டிலிருந்து, நம்முடைய குடும்பத்திலிருந்து, நம்முடைய அண்டை வீட்டாரிலிருந்து, நாம் பணி செ#கின்ற, தொழில் நடத்துகின்ற, வணிகம் செ#கின்ற பணியிடத்து தொடர்புகளிலிருந்து என்று புதுப் புது நபர்களை நாம் இயக்கத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்று விட்டோமெனில் சில ஆண்டுகளுக்குள்ளாகவே ஆயிரக்கணக் கானோர் இந்த இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்டவர்களாக இருப் பார்கள்.

எனவே இயக்கத்தின் செ#தியைப் பரப்பு வதிலும், புதுப் புது ஆளுமைகளை ஈர்ப் பதிலும், புதிய இரத்தத்தைப் பா#ச்சுவதி லும் நாம் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும். இன்னும் கூடுதல் விவேகத் துடன் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். ஜனாப் ஜி.அப்துர் ரஹீம் அவர்களின் வாழ்வு தருகின்ற இரண்டாவது செ#தி இது தான். 3. புதிய புதிய திறமைகளைக் கற்றுக் கொள்வதில் சிறப்புக் கவனம்...! தஸ்கியா, தர்பியத் போன்றவைதான் நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளின் உயிரோட்டமாக இருத்தல் வேண்டும். தஸ்கியா என்பது இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று இறைவனுடனான தொடர்பை வளர்த்துக் கொள்வதிலும் இறைநெருக்கத்தைப் பெறுவதிலும் எந்நேரமும் விழிப்புடன் இருத்தல்.

இறைவன் நம்முடன் இருக்கின்றான்; எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றான் என்கிற விழிப்பு உணர்வுடன் இருத்தல். இறைத்தொடர்பை வளர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான, சிறப்பான வழி பின்னிரவு நேரத் தொழுகைகள்தாம். அவற்றின் மூலமாகத்தான் நமக்கு நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளிலும் இறைவனின் நுஸ்ரத் எனும் பேருதவி கிடைக்கும். தஸ்கியாவின் இரண்டாவது பரிமாணம் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதாகும். நம்முடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்வதாகும்.

புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பதாகும். என்னைக் கேட்டால் பொறுப்பு அதிகமாக அதிகமாக புதியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் பொறுப்பும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று அறுதியிட்டுச் சொல்வேன். இன்று நம்முடைய நிலைமை என்ன? நாம் இயக்கத்தின் வாசலில் நிற்கின்ற போது, ஊழியர்களாக இருக்கின்றபோது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதிலும் வளர்த்துக் கொள்வதிலும் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றோம். புதிய புதிய நூல்களை மா#ந்து மா#ந்து வாசிக் கின்றோம். இயக்கத்தின் இலட்சியப் பணியை புரிந்து கொள்வதில் தீவிரக் கவனம் செலுத்துகின்றோம்.

ஆனால் உறுப்பினராக, ஆலோசனைக் குழு உறுப்பினராக, கிளைத் தலைவராக நம்முடைய பொறுப்பும் பதவியும் உயர்ந்துகொண்டே போகின்றபோது இந்த தவிப்பும் தாகமும் தணிந்து போகின்றது. ஒரு விநோதமான மனநிலைக்கு ஆளாகி விடுகின்றோம். நம்மை நாமே இலக்கை அடைந்துவிட்டவர்களாக நினைத்துக் கொள் கின்றோம். இனி நம்முடைய வேலை மற்றவர்களைப் பயிற்றுவிப்பதுதான் என்கிற எண்ணத்துக்குப் பலியாகிவிடுகின்றோம்.

இது முழுக்க முழுக்க தவறான மனநிலை. தவறான கருத்து. அதற்குப் பதிலாக பொறுப்புகள் கூடிக் கொண்டே போகின்றபோது புதியதைக் கற்றுக் கொள்கின்ற, வாசிக்கின்ற தேவைகளும் சம அளவில் அதிகரித்துக் கொண்டே போகும் என்பதுதான் யதார்த்தம். அமீரே ஜமாஅத் என்கிற முறையில் உங்கள் எல்லோரை விடவும் புதியவற்றைக் கற்றுக் கொள்கின்ற தேøவயும் அவசியமும் எனக்குத்தான் அதிகம். ஜனாப் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் இந்த விஷயத்தில் நம் எல்லோருக்கும் தெம்பளிக்கின்ற முன்னுதாரணமாக வாழ்ந்து சென்றிருக்கின்றார்.

இறக்கின்ற வரை புதிய வற்றைக் கற்றுக் கொள்வதில் முனைப்பு காட்டியிருக்கின்றார். உர்து மொழியைக் கற்றுக்கொண்டிருக் கின்றார். அரபி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கின்றார். மொழி இலக்கணத்தைக் கற்றுக் கொண்டிருக்கின்றார். இலக்கியங் களை மொழிபெயர்க்கின்ற அளவுக்கு மொழி அறிவை வளர்த்துக் கொண்டிருக்கின்றார். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அவர் இவற்றையெல்லாம் தம்முடைய இளம் வயதில் செ#யவில்லை. நடுத்தர வயதில், முதிய வயதில் புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் முனைப்புக் காட்டி யிருக்கின்றார்.

சாதித்திருக்கின்றார். ஆக, கற்றுக் கொள்வதற்கும் புதியவற்றில் தேர்ச்சி பெறுவதற்கும் வயது ஒருபோதும் தடை யாகாது. மனதில் உறுதி இருந்தால், எண்ணத்தில் தூ#மை இருந்தால், புதியவற்றைக் கற்கின்ற பேரார்வமும் தணியாத தாகமும் தவிப்பும் இருந்தால் எந்த வயதிலும் எதøனயும் கற்றுக்கொள்ளலாம். எழுபது வயதிலும் எண்பது வயதிலும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். இறைத்தொடர்பையும்  இறையச்சத்தையும் வளர்த்துக் கொள்வதில் காட்டுகின்ற அதே அக்கறையையும் ஈடுபாட்டையும் புதியவற்றைக் கற்றுக் கொள்வதிலும் புதிய வற்றுக்கான பயிற்சியைப் பெறுவதிலும் வல்லமையை ஈட்டிக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாப் ஜி.அப்துர் ரஹீம் அவர்களின் வாழ்வு தருகின்ற மூன்றாவது பாடமும் இது தான். அழைப்புப் பணியில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக, எங்கேயும் எப்போதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதே கவலை யுடன் அதே சிந்தனையுடன் இயங்குபவர்களாக மாறுவோம். நம்முடைய இயக்கத்தின் செ#தியை இளம் தலைமுறைக்குக் கொண்டு செல்வதிலும் புதிய புதிய தோழர்களிடம் இயக்கத்தைக் கொண்டு செல்வதிலும் கட்டுக்கடங்காத ஆர்வத்துடனும் முனைப் புடனும் செயலாற்றுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதிலும் வாழ்நாள் முழுவதும் புதுப்புது திறமைகளையும் அறிவாற்றல்களையும் வளர்த்துக்கொள்வதில் தொடர் கவனம் செலுத்துவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்