மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை பொருளாதாரம்

தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும்!
சேயன் இப்ராகிம், , 16-30 SEPTEMBER 2022


சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமரும், மாநிலத் தலை நகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்களும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். நாடெங்கு முள்ள மத்திய  மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். இவ்வாண்டு, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி ஆகஸ்ட் 13, 14, 15ஆம் தேதிகள் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும், பொதுஇடங்களிலும் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்காக கோடிக்கணக்கான கொடிகள் தயார் செ#யப்பட்டு அவை உள்ளாட்சி அமைப்புகளால் வீடு வீடாகச் சென்று விற்கப்பட்டன. ஒரு கொடியின் விலை ரூ.21 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்த போதிலும், சில இடங்களில் இது ரூ.28க்கும் விற்பனை செ#யப்பட்டது. தேசியக் கொடியை வாங்குவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்திருந்தாலும், விற்பனை செ#ய வந்த உள்ளாட்சிப் பணியாளர்கள் மக்களிடம் நயந்து பேசியும், நிர்ப்பந்தப்படுத்தியும் கொடிகளை விற்றுத் தீர்த்தனர்.

இல்லங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றாவிட்டால், தங்களது நாட்டுப் பற்று ஐயத்திற்கு இடமாகிவிடுமோ என்று மக்கள் கருதி அல்லது அஞ்சி மூன்று நாள்களிலும் கொடி ஏற்றினர். நாடெங்கும் நாட்டுப் பற்று பிரவாகம் எடுத்து ஓடியது. துணியினால் ஆன தேசியக் கொடிகளைத் தவிர, சீனாவில் உற்பத்தி செ#யப்பட்ட பிளாஸ்டிக் கொடிகளும் விற்பனைக்கு வந்தன.

அண்மையில் கனடாவில் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, அந்த மாநாட்டில் தனது இருக்கைக்கு எதிரே வைக்கப் பட்டிருந்த தேசியக் கொடி சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கொடி என்றும், இந்திய மக்களுக்குத் தேவைப்படும் அளவிற்குக் கொடிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் அங்கீகரிக்கப்பட்டு தற்போது புழக்கத்திலிருந்து வரும் மூவர்ணக் கொடியை (நடுவில் அசோகச் சக்கரம்) வடிவமைத்தவர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவி வகித்த பத்ருதீன் தயாப்ஜியின் மனைவியான சுரையா பத்ருதீன். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் மூவர்ண தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பிக்காலி வெங்க#யா என்று செ#தி வெளி யிட்டன.

அவர் வடிவமைத்த கொடியின் நடுவில் நூல் நூற்கும் ராட்டை இருந்தது. தற்போது நாம் ஏற்றுகின்ற கொடியில் அசோகச் சக்கரம் இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை மறைப் பவர்கள் இந்தக் கொடி விஷயத்தில் மட்டும் நியாயமாக நடந்து கொள்வார்களா என்ன? சுதந்திர தினத்தையொட்டி மூன்று நாள்களுக்கு மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டுமென நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் தா# இயக்கமான ஆர்எஸ்எஸ் தேசியக் கொடி விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு என்ன? பார்ப்போம்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்த மூவர்ணக் கொடியை ஒருபோதும் ஏற்றுக் கொண்டது இல்லை. சுதந்திர தினமான 15.8.1947 அன்று நாடெங்கும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது மத்தியில் வாஜ்பா# தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்தபோது ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் (நாக்பூர்) தேசியக் கொடியை ஏற்றினர்.

1947ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பண்டித ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்ச ராகப் பதவி ஏற்றுக்கொண்ட இந்து மகா சபைத் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி அமைச்சரான பிறகும் தனது இல்லத்தில் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றவில்லை. மாறாக, ஆர்எஸ்எஸ்ஸின் காவிக் கொடியையே ஏற்றியிருந்தார். இதனைப் பிரதமர் நேரு சுட்டிக் காட்டி அவருக்குக் கடிதம் எழுதிய பிறகும்கூட அவர் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை. (இந்த சியாம் பிரசாத் முகர்ஜி பின்னர் 1950ஆம் ஆண்டு அமைச்ச ரவையிலிருந்து விலகினார்.

ஜனசங்கத்தைத் தோற்றுவித்தார். அது தனி வரலாறு.) இனி, மூவர்ணத் தேசியக் கொடி குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கொண்டிருந்த, வெளியிட்டிருந்த கருத்துகளைப் பார்ப்போம். டூ 1929ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர தினமாகக் கடைப்பிடிக்கும் படியும், அந்நாளில் மூவர்ணக் கொடியைக் கட்சி அலுவலகங்களிலும், பொதுஇடங்களிலும் ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்த வேண்டுமென்றும் (குச்டூதtஞு) நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

அடுத்த ஆண்டி லிருந்து காங்கிரஸ் கட்சி அந்த நாளை சுதந்திர தினமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவரான ஹெட் கேவார் 21.01.1930 அன்று வெளியிட்ட அறிக்கையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றக்கூடாது எனவும், அதற்குப் பதிலாகக் காவிக் கொடியையே ஏற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காவிக் கொடியையே ஏற்றினர்.

14.6.1947 அன்று ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர், கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்களிடையே உரையாற்றும்போது "காவிக் கொடியே இந்தியப் பண்பாட்டை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. அது கடவுளின் வடிவ மாகும்; முழு நாடும் இந்தக் காவிக் கொடிக்குத் தலைவணங்க வேண்டுமெனவும் குறிப் பிட்டார்.'

நாடு சுதந்திரம் பெற்ற 15.8.1947 அன்று நாட்டு மக்கள் அனைவரும் மூவர்ணக் கொடியை ஏற்றி மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியிருந்தபோது, ஆர்எஸ்எஸ் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைப் புறக்கணித் தது. அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் தனது 14.8.1947 தேசிய இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது. "விதி வசத்தால் இன்று நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் நமது கை களில் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாம். ஆனால் இந்துக்கள் இந்த மூவர்ணக் கொடியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொந்தம் பாராட்ட மாட்டார்கள். மூன்று என்ற வார்த்தையே தீயது. மூன்று வண்ணங்களைக் கொண்ட அந்தக் கொடி நிச்சயமாக மக்களின் உள்ளத்தில் மோசமான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும்.'

இந்திய அரசியல் நிர்ணய சபை மூவர்ணக் கொடியை (நடுவில் அசோகச் சக்கரம்) தேசியக் கொடியாக அங்கீகரித்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது 17.7.1947 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ் கீழ்க்கண்ட வாறு எழுதியிருந்தது. "இந்தக் கொடி அனைத்துத் தரப்பு மக்களாலும் எற்றுக் கொள்ளப்படும் என்பதை முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்தியாவில் இந்துதேசம் என்ற ஒரே ஒரு தேசம்தான் இருக்கிறது. அதைத்தான் தேசியக்கொடி பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். எல்லா சமய மக்களையும் திருப்திபடுத்துகின்ற ஒரு கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒரு சட்டை அல்லது கோட் தைப்பது குறித்து தையல்காரனுக்கு உத்தர விடுவதுபோல், தேசியக் கொடி விஷயத்தில் யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது.'

ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர் எழுதியுள்ள "சிந்தனைக் கொத்து' என்ற நூலில் தேசியக் கொடி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். "நமது தலைவர்கள் நமது நாட்டுக்கு ஒரு புதிய கொடியை உருவாக்கியிருக்கின்றனர். நமது நாடு பாரம்பர்யப் பெருமை கொண்ட ஒரு புராதன நாடு. இதுவரை நமக்கு என்று ஒரு கொடி இல்லாமலா இருந்தது? இந்த ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு ஒரு தேசியச் சின்னம் இல்லாமலா இருந்தது? நிச்சயமாக இருந்தது. பின் ஏன் நமது எண்ணங்களில் இவ்வளவு வெறுமை! இவ்வளவு வெற்றிடம்!

இந்து மகா சபையின் நிறுவனத் தலைவரான சாவர்க்கரும் மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைப் புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் 21.9.1941 அன்று வெளியிட்ட அறிக்கையில் "நமது நாட்டின் பாரம்பர்யத்தை ஓம்  ஸ்வஸ்திக் ஆகிய இந்த இரண்டு சின்னங்கள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவையே இந்து இனத்தின் சின்னங்களாகக் காலம் கால மாக இருந்து வந்துள்ளன. எனவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியப் பண்பாட்டிற்குப் புறம்பான மூவர்ணக் கொடியை ஏற்றக் கூடாது.

கொடியிலுள்ள ராட்டை கதரைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம். ஆனால் அது புராதன பாரம்பர்யப் பெருமைமிக்க இந்துக்களை ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தாது' என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட சான்றுகளிலிருந்து பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் போற்றுகின்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒருபோதும் நாம் ஏற்றுகின்ற மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டதில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடியையே தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்ற திட்டம் அவர்களது மறைமுக அஜண்டாவில் இருக்கிறது. அதனை அவர்கள் விரைவிலேயே செயல்படுத்த முனையலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது, மக்கள் எந்தவிதமான முணுமுணுப்பின்றி அதனை ஏற்றுக் கொள்ளச் செ#வதற்கான ஒத்திகையே இந்த 75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி அவர்கள் செ#த முயற்சிகள் எனலாம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்