மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான வழி!
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, , 16-30 SEPTEMBER 2022


நமக்குரிய ரிஸ்க்(வாழ்வாதாரம்) இருப்பது அல்லாஹ்வின் கையில். அவனே ரஸ்ஸாக் (வாழ்வாதாரம் அளிப்பவன்). அரசர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரும் வெறும் அப்துர் ரஸ்ஸாக்குகள் ரஸ்ஸாக்கின் அடிமைகளே என்ற உண்மையை நாம் உணரவேண்டும். நமக்குரிய ரிஸ்க் அடிப் படையில் பூமியிலன்றி வானத்திலேயே இருக்கின்றது.

அதனை அங்கிருந்து வரவழைத்து தம் வயப்படுத்துவது அதன் சொந்தக்காரனான ரஸ்ஸாக்குடனான நமது ஆரோக்கியமான உறவிலேயே தங்கியிருக்கின்றது என்ற உண்மையையும் நாம் புரிய வேண்டும். திருக்குர்ஆன் கூறுகின்றது: "வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!' (திருக்குர்ஆன் 51:22) அல்லாஹ் தஆலாவின் அழகுத் திருநாமங்களில் முதன்மையைப் பெறுகின்ற ஒரு நாமம் இருக்கின்றது.

அதுதான் அர்ரஸ்ஸாக் என்ற திருநாமம். "அர்ரஸ்ஸாக்' அனைத்தையும் வழங்குபவன், ஆகாரம், உணவு அளிப்பவன், வாழ்வாதாரம் அளிப்பவன், அனைவருக்கும், அனைத்துக்குமான வாழ்வாதாரத்திற்குப் பொறுப்பாக இருப்பவன் முதலான கருத்துகளைத் தருகின்றது. திருக்குர்ஆன் அல்லாஹ்வை ரஸ்ஸாக் என்றும் ஹைரூர் ராஸிகீன் (வாழ்வாதாராம் அளிப்பவர்களில் சிறந்தவன்) என்றும் வர்ணிக்கிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள். "நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுøடயவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 51:58)

"மேலும் எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! ஆகாரம் வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!' (திருக்குர்ஆன் 5:114) "மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 62:11) அர்ரஸ்ஸாக் என்ற வார்த்தை அர்ரிஸ்க் என்ற பதத்திலிருந்து பிறந்தது. ரிஸ்க் என்ற வார்த்தை பரந்த கருத்துகளைக் கொண்டது. அடிப்படையில் ரிஸ்க் என்ற பதம் நாள் தோறும் அல்லது ஆண்டுதோறும் அல்லது ஆயுள் முழுவதும் ஒருவருக்கு அளக்கப் பட்டுள்ள வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.

ரிஸ்க் இருவகைப்படும்: முதலாவது: புறவயமானது. இதற்கு உதாரணமாக உண்ணும் உணவு, குடிக்கும் பானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவது: அகவயமானது. ஒருவரின் ஈமான், பெற்றிருக்கும் அறிவு முதலானவை இதற்கு உதாரணங்களாகும். மேலும் ரிஸ்க் என்பது உலகில் கிடைக்கும் வாழ்வாதாரத்தை மாத்திரமன்றி நாளை மறுமையில் ஒருவருக்குக் கிடைக்கும் வெகுமதிகளையும் குறிக்கும்.

ரஸ்ஸாக் என்ற நாமம் நமக்குச் சொல்லும் செ#திகள் பல உண்டு:

1. அல்லாஹ் மாத்திரமே ரிஸ்க் அளிப் பவன். அவனல்லாத வேறு யாராலும் எவரா லும் வாழ்வாதாரத்தை வழங்க முடியாது. ""(நபியே!) இவர்களிடம் கேளும்: "வானங்கள், பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?' கூறும்: அல்லாஹ்தானே!'' (திருக்குர்ஆன் 34:24) "கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக் கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்ப தைச் சொல்லுங்கள் பார்ப்போம்!' (திருக்குர்ஆன் 67:21)

2. மனிதர்களுக்கு மட்டுமின்றி வானங்கள், பூமியிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் தேவை யான ரிஸ்கை வழங்குபவன் அல்லாஹ்தான். "உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.' (திருக்குர்ஆன் 11:6) "எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான். உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான்.' (திருக்குர்ஆன் 29:60)

3. அனைவருக்குமான ரிஸ்க் ரஸ்ஸாக்கான அல்லாஹ்வினால் ஏற்கனவே அளக்கப் பட்டும் நிர்ணயிக்கப்பட்டும் உள்ளது. ஒருவர் அளவுக்கதிகமாக அலட்டிக் கொள்வதால் அவருக்குரிய ரிஸ்க் அதிகரிக்கப் போவதும் இல்லை. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால் குறையப் போவதும் இல்லை.

4. முஸ்லிம், இறைநிராகரிப்பாளன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடுகள் எதனையும் பார்க்காமல் அனைவருக்கும் அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குபவனாக இருக்கின்றான். இது அவனுடைய அன்பின், அருளின் வெளிப்பாடு.

5. அல்லாஹ் சிலருக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகக் கொடுப்பான்; சிலருக்கு அள வோடு கொடுப்பான். இன்னும் சிலருக்குக் குறைவாகக் கொடுப்பான். இது அவனது ஞானத்துடன் தொடர்புடைய விஷயமாகும். இதுபற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: "திண்ணமாக உம் இறைவன் தான் நாடுவோருக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான்.' (திருக்குர்ஆன் 17:30)

6. ஒருவர் அதிகமான வாழ்வாதாரத்தை, சொத்து, செல்வங்களைப் பெற்றிருப்பது அல்லாஹ் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றான் என்பதைக் காட்டும் என்று சொல்வதற்கில்லை. ஒருவர் குறைவான வாழ்வாதாரத்தைப் பெற்றிருப்பதை வைத்து அவரை அல்லாஹ் விரும்பவில்லை என்றும் சொல்ல முடியாது. "நாம் அவர்களுக்கு பொருளையும் மக்களையும் அளித்து உதவி புரிந்து கொண்டிருக்கின்றோமெனில், நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதிவேகமா# இருக்கின்றோம் என்று கருதுகின்றார்களா? (இல்லை, உண்மை நிலவரத்தை) அவர்கள் அறிவதில்லை.' (திருக்குர்ஆன் 23:55,56)

7. அல்லாஹ் ஒருவருக்குச் சொத்து செல்வங்களைக் கொடுப்பதால் அவரைக் கௌரவிக்கிறான் என்பதோ மற்றொரு வருக்குக் கொடுக்காமல் இருக்கின்றான் என்பதõல் அவரைக் கேவலப்படுத்துகிறான் என்பதோ பொருளல்ல. "ஆனால் மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனைக் கண்ணியப்படுத்தி அருட்கொடைகளையும் வழங்கினால், என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று கூறுகின்றான். மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்துவிட்டால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகின்றான்' (திருக்குர்ஆன் 89:15,16)

8. இந்த உலக வாழ்வில் மனிதர்கள் தமக்குரிய ரிஸ்கைப் பெற்றுக் கொள்வதற்கான வழி ஈமானும் தக்வாவும் ஆகும். பாவங்கள் வாழ்வாதாரத்தைத்  தடுக்கக்கூடியவை; குறைக்கக்கூடியவை. "ஆனால், அவ்வூர்களில் மக்கள் இறை நம்பிக்கை கொண்டு இøறயச்சமுள்ள நடத்தையை மேற்கொண்டிருப்பார்களே யானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம்.

ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொ# யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களில் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம்.' (திருக்குர்ஆன் 7:96) "மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான்.' (திருக்குர்ஆன் 65:2,3)

9. நாளை மறுமையில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்க இருக்கின்ற மிகப் பெரும் ரிஸ்க் சுவர்க்கமாகும். "யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் சுவனங்களில் நுøழவிப்பான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மக்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் இத்தகை யவருக்கு மிக அழகிய வாழ்வாதாரத்தை வைத்திருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 65:11) ஆகவே, உறவுகளே! பௌதீகக் காரணிகளைக் கவனத்தில் கொண்டு உழைப்பிலும் பொருளாதார முயற்சிகளிலும் ஈடுபடுகின்ற அதேவேளை ரஸ்ஸாகுடனான நமது உறவைச் சீர்செ#து கொள்வதன் மூலமாக நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து விடுபட முனைப்புடன் செயல்படுவோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்