மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

மக்களுக்குச் சான்று வழங்குங்கள்
, 16-30 SEPTEMBER 2022


முஸ்லிம் சமுதாயத்தைச் சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. "இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள், தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 3:110) நன்மையை ஏவி, தீமையை விலக்குவதினாலேயே இந்தச் சிறப்பை அருளியதாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

நாம் இதைச் செ#துள்ளோமா? உலக மக்களுக்குச் சான்று பகரும் சமூகம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். "மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் "உம்மத்தன் வஸத்தன்' சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக.' (திருக்குர்ஆன் 2:143) சான்று பகரும் சமுதாயம் என்று இறைவன் கூறுகின்றான்.

நாம் சொல்லாலும் செயலாலும் இறைமார்க்கத்திற்குச் சான்று பகர்கின்றோமா? உலகில் நீதியை நிலைநாட்டுங்கள் என்கிறான் இறைவன். "இறைநம்பிக்கை  கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவர்களாகவும் அல்லாஹ்வுக்காகச் சான்று வழங்குபவர்களா கவும் திகழுங்கள்.' (திருக்குர்ஆன் 4:135) நாம் இவற்றைச் செ#துள்ளோமா? முன்மாதிரி சமூகமாக வாழவேண்டிய நாம் அந்தக் கடமையை முழுமையாக நிறைவு செ#யவில்லை. நம்மிடம் ஆன்மிக, ஒழுக்க, ஈமானிய வலிமை குறைந்து காணப்படுகிறது.

எனவே நம்மால் பொதுச் சமூகத்தில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை. நாம் இஸ்லாத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாத்தைப் பற்றிய தவறான சித்திரத்தை நம்முடைய செயல்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம். விளைவு, இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள், பகை, வெறுப்பு, துவேஷம் எழுந்துள்ளன. கல்வி, பொருளாதாரம், வேலைவா#ப்பு, தொழில்துறை, நீதித்துறை ஆகியவற்றிலும் பின்தங்கியுள்ளோம். உலகுக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு சமூகம் இவற்றில் பின்தங்கி யிருக்கலாமா?

இந்த நிலை மாறவேண்டும். இதற்கு இறைவனும் இறைத்தூதரும் சொல்லித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். இஸ்லாத்தை முழுமையாகக் கடைப் பிடித்தால் உயர்வு நிச்சயம் என்கிறான் இறைவன். "நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள். கவலையும் கொள்ளதீர்கள். நீங்கள் இறைநம் பிக்கையுடையோராயின் நீங்களே மேலோங் குவீர்கள்.' (திருக்குர்ஆன் 3:139)

"உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான் (கலீஃபா); அவர்களுக்கு முன்சென்று போன மக்களைப் பிரதிநிதிகள் ஆக்கியதைப் போன்று! மேலும் அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும் அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்ச நிலையை அமைதி நிலையா# மாற்றித் தருவான்.' (திருக்குர்ஆன் 24:55)

நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவரே வெற்றியாளர் என்கிறான் இறைவன். "நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.' (திருக் குர்ஆன் 3:104) இறைவனுக்கு நீங்கள் உதவினால் அவனும் உங்களுக்கு உதவுவான் என்று குர்ஆனில் பல இடங்களில் இறைவன் வாக்களித்துள்ளான்.

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும் உங்களின் பாதங்களை உறுதிப் படுத்துவான்.' (திருக்குர்ஆன் 47:7) இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதிலும் உலக மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை விலக்குவதிலும்தான் நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வுகள் உள்ளன. இந்தப் பணியைச் செ#ய நமக்கு அறிவு பலம், பொருளாதார பலம், ஒற்றுமை, கடின உழைப்பு, திட்டமிடுதல், தொலைநோக்குடன் செயல்படுதல், அனைத்து சமூகங்களு டனும் இணக்கமாக வாழ்தல், நாட்டு மக்க ளுக்கு மார்க்க சேவையாற்றுதல், நாட்டுப் பணிகளில் பங்கேற்றல் எனப் பலவற்றையும் செ#யவேண்டும். ஆவேசப் பேச்சுகளும் எழுத்துகளும் செயல்பாடுகளும் எதிர் மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே நாம் நமது சிந்தனையை விரிவாக்கு வோம்.

இஸ்லாம் ஒரு மதம் என்பதிலிருந்து மார்க்கம் என்பதற்கு

கிளை அம்சங்களைப் பேசுவதிலிருந்து அடிப்படைக்கு

உணர்வைத் தூண்டுவதிலிருந்து அறி வைத் தூண்டுவதற்கு

முஸ்லிம்களிடையே மட்டும் பணியாற்றுவதிலிருந்து உலக மக்களுக்கு

வாதம் புரிவதிலிருந்து உரையாடுவதற்கு

இயக்க நலனிலிருந்து உம்மத்தின் நல னுக்கு

பழி சுமத்துவதிலிருந்து பொறுப்பேற் பதற்கு

பிளவுகளிலிருந்து ஒற்றுமைக்கு

சோம்பேறித்தனத்திலிருந்து கடின உழைப் புக்கு

அவநம்பிக்கையிலிருந்து தன்னம்பிக்கைக்கு நாமும் உயர்வதுடன், நம் சமு தாயத்தையும் உயர்த்தப் பாடுபடு வோம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்