மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

இஸ்லாம் ஒரு குடும்பவியல் அரண்
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி, , 16-30 SEPTEMBER 2022


ஒட்டுமொத்த மனிதச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியாக இருக்கட்டும், படைப் பினங்களிலே சிறந்த படைப்பாகிய மனிதனின் நாகரிகத் தோற்றமாக இருக்கட்டும், இன்னும் எண்ணற்ற அவனுக்கே உரிய பல்வேறு சிறப்புகளாக இருக்கட்டும், அனைத்தும் ஒரே ஒரு முதல் மனிதன் மூலமாக வந்துள்ளன. ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒரு குடும்பத்திலிருந்துதான் மனித இனம் தொடங்கியது. அந்த முதல் குடும்பத்திலிருந்துதான்  பல்வேறுபட்ட சமூக பண்பாடுகள், நாகரிகங்கள், இனக் குழுக்கள் தோன்றின. அரச நாகரிகங்கள் செழித்தன.

மற்றொரு புறம் ஒழுக்க வியல், சமூகவியல், என எண்ணிலடங்கா இயல்களும் அக்குடும்பவியலில் இருந்தே உருவானது. மனிதத் தோற்றத்திற்கு குடும்பம் எவ்வாறு முன்னோடியாக உள்ளதோ, அதுபோல அந் தக் குடும்பவியலின் சாரம், அஸ்திவாரம் ஆரம்ப காலம் தொட்டு உலகம் அழியும் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் காலத்திற்கேற்ப சமூகக் கட்டிடங்களைச் சீராக அதன் மீது எழுப்பிட இயலும். அந்த நிரந்தர அஸ்திவாரம்தான் "தக்வா எனும் இறையச்சம்'. இறையச்சம் குடும்பவியலின் அஸ்திவாரமாக இருக்கும் காலமெல்லாம், அதன் மீது எழுப்பப்படும் சமூக அமைப்பு களும் ஒழுங்குகளும் ஒருபோதும் சிதைந் திடாது.

"மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மா விலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்கøளயும் பரவச் செ#தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோரு கின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)

இஸ்லாமும் குடும்பவியலும் சாதாரணமாகச்  சொல்லிவிடலாம் குடும்பவியலின் அஸ்திவாரம் இறையச்சம் தான் என்று. ஆனால் அதன் செயல்வடிவங் களுக்கான ஆதாரங்கள் எங்குள்ளது? அதன் வாழ்வியல் முன்மாதிரி யாரிடம் உள்ளது? அதன் செயல்வடிவ ஆதாரங்களுக்குக் குர்ஆன் போதும். அதன் வாழ்வியல் முன்மாதிரிக்கு இறைத்தூதர்(ஸல்) வாழ்க்கையே போதும். குர்ஆன் குடும்பங்களால் உருவாகிய சமூக முன்னேற்றத்தையும் விளக்குகிறது. அதே குடும்பங்களால் சின்னாபின்னமான சமூகத்தையும் படிப்பினைக்காக நம்மிடம் முன்வைக்கிறது.

நபி இப்ராஹீமும் அவரது மனைவியும் ஒரு குடும்பமாக இறையச்சத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழ்ந்தவர்கள். அவர்கள் மூலம் முன்னேற்றமான சமூகத்தை இறைவன் உருவாக்கினான். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கிணங்க தன் மனைவியையும், தன் கைக்குழந்தையும் பாலைவனத்தில் தன்னந் தனியாக விட்டுச்செல்கிறார்கள். அது ஓர் இறைக்கட்டளை என்பதனால் அவர்களின் மனைவியும் எந்த மறுப்பு வார்த்தையும் கூறவில்லை. பிற்காலத்தில் அக்குழந்தை நபியாக மாறியது. பாலைவனத்தில் சோலைவனம் போல் நீரூற்று பெருக்கெடுத்தது.

அக்குடும்பத்தால் மிகப் பெரும் ஓரிறை படை உதயமானது. இறையில்லம் கட்டப் பட்டது. காரணம் இறையச்சம் தாங்கிய குடும்பம்! அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு குடும் பத்தால் சின்னாபின்னமான சமூகம், அதற்கு உதாரணமாக, லூத்(அலை) சமூகத்தைச் சொல்லலாம். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்கள்  நபி  லூத்(அலை) அவர்கள். ஆனால் அவர்களின் சமூகம் ஒருபால் உறவிலும், அதிகார ஆணவத் திமிரிலும் மேலோங்கி நின்றன. கடைசியாக இறைவன் அச்சமூகத்தை பூமியைத் தலைகீழாக திருப்பிப்போட்டு அழித்தான். குடும்பவியலுக்கான வாழ்வியல் முன் மாதிரியிடம் நம் பார்வையைச் சற்று திருப்பு ÷வாம். கண்மணி நாயகத்திடமே மனித வாழ்விற்கான முன்மாதிரி இருக்கிறது என குர்ஆன் கூறுகிறது.

நபியவர்களின் குடும்ப வியல் முன்மாதிரியை விளக்குவதற்கு பின்வரும் நபிமொழியை விடச் சிறந்தது இருக்க முடியாது. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) கூறியுள்ளார்கள்: "உங்களில் சிறந்தவர், எவர் தன் குடும்பத்திடம் சிறந்தவரோ அவரே. நான் என் குடும்பத்திடம் சிறந்தவனாக இருக்கிறேன்.' (திர்மிதி: 3892) இந்நபிமொழியை வேறு நபித்தோழர் யாரும் அறிவிக்காமல் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருப்பது கூடுதல் கவனிக்கத்தக்கது. நபியவர்களோடு நெருங்கி வாழ்ந்த மனைவிகளில் ஒருவர்தான் ஆயிஷா(ரலி). நபியவர்கள் எந்தளவிற்கு அவர்களோடு இணைந்து நெருங்கி வாழ்ந்திருப்பார்கள்.

அவர்கள் எந்தளவிற்கு குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார்கள் என்பதை இந்நபிமொழியில் நாகரிகமிக்க, ஒழுக்கமான, மிகச் சிறந்த சமூக உருவாக்கத்திற்குக் குடும்ப ஒழுங்கையே அஸ்திவாரமாக நபியவர்கள் முன்வைக்கிறார்கள். சிறந்த சமூகத்தின் சான்று சிறந்த குடும்பத்தின் தொடக்கம் என்கிறது இந்த நபிமொழி. அன்று முதல் இன்று வரை ஒரு தனிநபரையோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கொள்கையையோ சமூகத்திற்கு மத்தியில் பொ#யாக்குவதற்கு அவரின் குடும்பத்தின் மீது இட்டுக்கட்டுவதையே நோக்கமாக சிலர் வைத்திருக்கின்றனர். நபிகளாரை கேவலப்படுத்துவதற்கும் அத்தகைய வழி முறையையே வழமையாகத் தீயோர்கள் வைத்திருக்கின்றார்கள். ஆனால், நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் உயரிய அந்தஸ்த்திலேயே என்றும் நிற்கிறார்கள்.

இத்தகைய இட்டுக்கட்டுபவர்களைக் குறித்து இறைவன் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கிறான். "இந்த அவதூறைப் புனைந்து கொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 24:11)

இவ்வசனம் ஆயிஷா(ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிய ஒருவனைக் குறித்து கூறுகிறது. அவன் அன்றைய மதீனாவைச் சேர்ந்த ஒரு யூத முனாஃபிக் அப்துல்லாஹ் பின் சலூல். இது அவனைக் குறித்தது மட்டுமல்ல. யாரெல்லாம், எப்போதெல்லாம் நபியவர்களின் குடும்பத்தை இட்டுக்கட்டிப் பேசு கிறார்களோ அவர்கள் அனைவருக்குமான எச்சரிக்கை இது! இஸ்லாம் ஒரு குடும்ப அரண் வெற்றி மிக்க சமூகத்தின் வேர் பரிசுத்த மான குடும்பமே. ஒருவன் ஒரு குடும்பத்தைச் சீர்குலைத்துவிட்டாலோ அல்லது சுயமாகவே ஒரு குடும்பம் சீர்குலைந்துவிட்டாலோ சமூகமும் சீர்கெட்டுவிடும். தானாகவே ஒரு குடும்பம் சீர்குலைவதற்கு அடிப்படைக் காரணம், அக்குடும்பத்தின் அஸ்திவாரம் (தக்வா) இறையச்சத்தால் இல் லாமல் இருப்பதுதான்.

அதற்கு அக்குடும்பத்தாரின் இறைப்பற்று முக்கியம். அது குடும்பத்திற்குள்ளேயே சரி செ#யப் பட வேண்டிய விஷயம். ஆனால் குடும்பத்திற்கு வெளியிலிருந்து ஒரு நல்ல குடும்பத்தை இட்டுக்கட்டுவது சமூக விரோதமாகவே மாறிவிடுகிறது. இதில் இஸ்லாம் அதிகப் படியாக கவனம் செலுத்துகிறது. இம்மை, மறுமை இரண்டிலும் அவ்வாறு செ#பவர்களை வேதனைக்குட்படுத்தப்பட வேண்டிய வர்கள் என்கிறது. இஸ்லாத்தின் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக ஒரு பெண்ணின் மீது ஒருவரின் மனைவியின் மீது அவதூறு கூறுவதையும் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.

அத்தோடு இஸ்லாமிய நாடாக இருந்தால் குற்றவியல் தண்டனையின் கீழ், குற்றத்தை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லாத பட்சத்தில், நூறு கசையடிகள் வழங்கும்படி இஸ்லாமிய சட்டம் கூறுகிறது. நபிகளாரின் குடும்பங்களால் விளைந்த நற்பலன்கள் "கதீஜாவின் அன்பு எனக்கு அருளப் பட்டது' ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ள நபிமொழிதான் இது. இஸ்லாத்திற்கு முன்னால் அன்பாலும் இஸ்லாத்திற்கு பின்னால் அன்பாலும், இறையச்சத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஒரே குடும்பம் முஹம்மது (ஸல்)  கதீஜா(ரலி) அவர்களின் குடும்பம் மட்டுமே. இந்தக் குடும்பம் ஏற்படுத்திய தாக்கத்தை வேறெந்தக் குடும்பமும் ஏற்படுத்த இயலாது.

இறைவனின் ஏகத்துவத்தை சத்தியப் படுத்துவதற்கும் நிரூபிப்பதற்கும், தன் கணவரை அழைத்துக்கொண்டு முதலில் வெளியே சென்றவர்கள் கதீஜா(ரலி) அவர்களே. நபியவர்கள் வஹியின் தாக்கத்தால் கா#ச்சலில் படுத்திருந்தபோது அவர்களின் போர்வையாகவும், வஹியின் முதல் செயல் வடிவமாகவும் மாறியவர்கள் கதீஜா(ரலி) அவர்களே. இறைமார்க்கத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் ஒட்டுமொத்த பெண்களுக்குமான முன்மாதிரி கதீஜா(ரலி) அவர்களிடமே உள்ளது. சங்கைமிக்க இந்த அம்மையாரின் பின்புலத்தோடு தான் நபி(ஸல்) அவர்கள் தன் சமூகத்தை நோக்கிய ஏகத்துவப் பரப்புரையை அரங்கேற்றினார்கள்.

பாருங்கள்! ஒரு குடும்பத்தால் ஒரு சமூகத்தையே மாற்ற முடியும் என்பதற்கான சான்று இந்தக் குடும்பத்தில் இருக்கிறது. அடுத்து ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவிகளில் இளம் வயதுடையவர்கள். இன்றைய இஸ்லா மோஃபோபிக்களால் அதிகம் முன்வைக்கப்படுபவர். ஆம்! நபியவர்களின் சமூக சீர்திருத்தம், உலகளாவிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் உடன்படாதவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணத்தைப் பற்றி பேசாத நாள்கள் இல்லை. ஆனால், உண்மை யில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும், இஸ் லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய சுன்னாவுக்கும் பெரும் பங்காற்றியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்கள்.

சிறுவயது முதலே நபியவர்களோடு பயணித்த அறிவு முதிர்ச்சி மிக்க பெண்மணி ஆயிஷா(ரலி) அவர்கள். அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நபித்தோழர்களில் அதிகமான நபிமொழிகளை அறிவித்த ஒரு பெண் என்றால், அது ஆயிஷா(ரலி) அவர்கள்தான். இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கையை கூறும்போது 2210 நபிமொழிகள் என்கிறார். நபி(ஸல்) அவர்களின் மனைவி யாக மட்டும் வாழவில்லை. அவர்களின் மாணவியாகவும் வாழ்ந்தார்கள் அன்னை ஆயிஷா(ரலி).

குடும்பவியல் குறித்த விளக்கங்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்களைவிடச் சிறந்த ஆசிரியை யாரும் இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நபியவர்களின் மரணத்திற்குப் பின் அரசியல், வாழ்வியல், சமூகவியல் என அனைத்து விளக்கங்களைக் குறித்தும் இவர்களிடமே பெரும் பெரும் நபித்தோழர்கள்கூட வினவி தெளிவு பெற்றுள்ளனர். எனவே, முஹம்மது(ஸல்)  ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பம் இஸ்லாமிய சமூகத்தின் கல்வித் தளத்திற்கான முன்மாதிரியாக திகழ்கிறது. இன்னும் எத்தனை எத்தனையோ சமூகப் பயன்கள் நபியவர்களின் குடும்பங்களி லிருந்தே அறிமுகமாகியுள்ளன. அடிமைத்துவம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் அடிமைப் பெண்களைத் திருமணம் செ#வதன் மூலம் அடிமை விலங்கை உடைத்து எறிந்தார்கள் நபியவர்கள்.

அத்தகைய முன்மாதிரியை தன்னிடமிருந்து தொடங்கி வைத்தார்கள். அவ்வாறுதான் ஸஃபி#யா (ரலி) அவர்களை நபிகளார் திருமணம் செ#தார்கள். அபூபுர்தா தன் தந்தை அறிவிப்பதாக அறிவிக்கிறார். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அழகிய முறையில் கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து பிறகு அவளுக்கு விடுதலை யளித்து, பின் அவளையே திருமணம் செ#து கொள்பவருக்கு இரு கூலிகள் வழங்கப்படும்' (ஸஹீஹ் புஹாரி : 5083) ஆகவே, நபி(ஸல்) அவர்கள் தன் நேரிய பாதைக்கான அஸ்திவாரங்களாக, இறையச்சமிக்க தனது குடும்பங்களையும், சொந்தங்களையும் ஆக்கிக் கொண் டார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளர். உங்களில் ஒவ்வொருவரும் கேள்வி கேட்கப்படுவீர். தலைவர் பொறுப்பாளர். அவர் கேள்வி கேட்கப்படுவார். ஓர் ஆண் தன் குடும்பத்தின் மீது பொறுப்பாளன். அவன் தன் குடும்பத்தைக் குறித்து கேள்வி கேட்கப்படுவான். ஒரு பெண் தன் கணவனின் வீட்டின் மீது பொறுப்பாளி. அவளும் கேள்வி கேட்கப்படுவாள். ஓர் அடிமை தன் தலைவனின் சொத்தின் மீது பொறுப்பாளன். அவனும் கேள்வி கேட்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். உங்களில் ஒவ்வொருவரும் கேள்வி கேட்கப்படுவீர்!' (ஸஹீஹ் புஹாரி : 5188)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்