மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை அரசியல்

பாஜகவின் தேர்தல் கால முகமூடி
இரா.சாந்தகுமார், , 16-30 SEPTEMBER 2022


உத்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்ட சபை தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய வற்றில் வெற்றி பெறுவதற்கான உத்தியை பாரதிய ஜனதா வகுக்க ஆரம்பித்து விட்டது. அந்த உத்தியின் தலையாய அம்சமே இஸ்லாமியரின் வாக்குகளை முழுமையாகப் பெற வேண்டும் என்பதுதான்.

அதற்காக இந்திய நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளைக் காட்டிலும் பாரதிய ஜனதாவே சிறுபான்மை இஸ்லாமியரின் நலனில் அக்கறை கொண்டது போன்ற முகமூடியை அணிந்து கொள்ள அக்கட்சி தயாராகி விட்டது. காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து இரத்து, தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு, ஷரீஅத் சட்டத்தில் தலையிட்டு தலாக் தடை, பசுவதை தடுப்புச் சட்டம், ஹிஜாப் அணியத் தடை போன்ற நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமியரின் சமய உரிமைகளில் தலையிட்டு, இஸ்லாமிய சமூகத்தின் எதிர்ப்பைப் பொருட்டாகக் கருதாமல் செயல்படும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, இஸ்லாமியருக்குப் பாதகமான செயல்பாடுகளை இஸ்லாமியர்கள் மறந்து விட்டு தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக "இஸ்லாமியரின் நண்பன்' என்ற முகமூடியை அணியத் தொடங்கியுள்ளது.

மாறுவேடப் போட்டியில் பரிசு பெறுவதற்காகப் போடப்பட்ட வேடத்தைப் போட்டி முடிந்ததும் போட்டியில் கலந்து கொண்டவர் கலைத்து விடுவதைப் போல ஜனநாயக மேடையில் நடைபெறும் தேர்தல் போட்டியில் வெற்றியைக் குறிக்கோளாக வைத்து பாரதிய ஜனதா, தான் அணிந்து கொள்ளும் "இஸ்லாமியரின் நண்பன்' என்ற முகமூடியைக் கழற்றி வைத்துக்கொள்ளும். கவனிக்கவும், கழற்றி வீசி விடாமல் வைத்துக் கொள்ளும். ஏனெனில் அடுத்து வரும் தேர்தல்களுக்கு அதே முகமூடியைப் பயன்படுத்த வேண்டுமே! இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 213 மில்லியன். இது ஏறக்குறைய 15.5 விழுக்காடாகும்.

இஸ்லாமியரின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னூற்று மூன்று மக்களவை உறுப்பினர்களில் ஒருவர் கூட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. மாநிலங்களவை உறுப்பினர் களாக இருந்த இஸ்லாமிய சமூகத்தவரான முக்தார் அப்பாஸ் நக்வி, சையத் ஜாஃபர், எம்.ஜே.அக்பர் போன்றோரின் பதவிக்காலம் கடந்த ஜுன், ஜூலை மாதங்களில் முடிவடைந்த நிலையில், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இஸ்லா மிய சமூகத்தைச் சேர்ந்தவர் எவரும் இல்லை.

மத்திய அமைச்சரவையிலும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர் எவருமில்லை. இருபது கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள இந்திய இஸ்லாமியர்களில் ஒருவருக்குக் கூட மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப் பினராகும் தகுதியும், மத்திய அமைச்ரவை யில் அமைச்சராகும் தகுதியும் இல்லையென பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது போலும். சாதி கட்டமைப்பிற்குச் சமாதி கட்ட சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாமியராக வாழும் மக்களிடையே அவர்களின் முந்தைய சாதியை அடையாளமாக வைத்து ஒன்றுபட்ட இஸ்லாமி யரைப் பிளவுபடுத்தும் சதியே "பஸ்மாந்தா'. இஸ்லாமியரிடம் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் நெருக்கம் காட்ட வேண்டும் என்ற அண்மைக்கால அறிவிப்பை நாம் கவனிக்க வேண்டும்.

இஸ்லாம் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. "ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா' என்ற புகழ்மிக்க நாட்டுப்பற்று பாடலை இயற்றிய உருது கவிஞர் அல்லாமா முகம் மது இக்பால் கூறியது போல், "இறைவனைத் தொழும்போது, அரசனும் அடிமையும் அரு கருகே, முதலாளியும் தொழிலாளியும் சமம். பேதங்களை எதனாலும் உருவாக்க இயலாது.'

ஹதீஸ் (Hadith) வாக்கின்படி இஸ்லாமியர் அனைவரும் உடலின் அவயங்களைப் போன்றவர். ஏதேனும் ஓர் உறுப்பிற்கு ஊறு ஏற்படுகையில் அதனால் ஏற்படும் வலியை உடலின் அனைத்து உறுப்புகளுமே உணர்தல் வேண்டும். திருக்குர்ஆனின், அத்தியாயம் அல் ஹுஜுராத்தின் பத்தாவது வசனத்தில், "இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்.

சச்சரவுகள் ஏற்படின் சுமூக தீர்வு காணப்பட வேண்டும்' என்கிறது. இவ்வாறு சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய சமூகத்தில் பிளவிற்கு வழி கோலும் விதமாக பஸ்மானந்தா பிரிவைக் கட்டமைக்கின்றார்கள். பொதுப்பிரிவில்(Other Category) இருந்த இஸ்லாமியர், பிற்பட்டோர்(Other Backard Category) என்பதன் மூலம் கல்வி, வேலை வா#ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு பெற்று முன்னேற பாரதிய ஜனதாவே காரணம் என்ற பரப்புரையை பாஜக தொண்டர்கள் செ#ய வேண்டும்.

மேலும் இந்துக்களாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய அவர்களிடம் இந்து மதப் பெருமைகளைக் கொண்டு சென்று மீண்டும் அவர்களை இந்து மதத்திற்கு திரும்பச் செ#யும் (Ghar vaapasi) பணியோடு அவர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள். முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம், இந்துத்துவா இவற்றையே குறியாகக் கொண்டு "இஸ்லாமியரின் நண்பன்' எனும் தேர்தல் கால முகமூடி அணிந்து வரும் பாஜகவினரின் உண்மை முகத்தை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள பிரித்தாளும் சூழ்ச்சி என்பது அரசியலில் அவ்வப்போது கையாளப்படும் தலையாய தந்திரோபாயம். இஸ்லாமிய சமூகம் அத்தகைய சந்தர்ப்பவாத தந்திரோபாயங்களை வென்று காட்ட வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்