மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

வட்டியை ஒழிப்போம்! வளத்தைப் பெருக்குவோம்!
கதிஜா ஜெஸ்மின், , 16-30 SEPTEMBER 2022


இஸ்லாம் நன்மைகளை பர்ள், ஸுன்னா, நஃபில் என வகைப்படுத்தியுள்ளது. இதில் அதற்குரிய முக்கியத்துவத்திற்கேற்ப நமது செயல்பாடுகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறே பாவங்களிலும் பெரும் பாவங்கள், சிறிய பாவங்கள் என வகைகள் உள்ளது. ஆனால் வா#ப்புக்கேடாக சிறிய பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளும் நாம் சில நேரங்களில் பெரிய பாவங்களைச் சர்வ சாதாரணமாகச் செ#து விடுகிறோம். அதில் முக்கியமானது வட்டி. நபி(ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள்.

மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செ#வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)' என்று கூறினார்கள். (அறிவிப் பாளர் : அபூ ஹுரைரா(ரலி), புஹாரி 6857) வட்டி எந்தளவு மிகப் பெரிய அநீதி, பாவம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு வசனம் போதுமானதாகும் "இறைநம்பிக்கை  கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ் வுக்குப் பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.

அவ்வாறு நீங்கள் செ#யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (திருக்குர்ஆன் 2:278,279) எந்த முஸ்லிமும் அல்லாஹ்விற்கெதிராகவும் அவனது தூதருக்கெதிராகவும் செயல்படவே மாட்டான் என்னும்போது வட்டியை வாங்குவது அல்லாஹ்விற்கெதிராகவும் அவனது தூதருக்கெதிராகவும் செ#யப்படும் போர்ப் பிரகடனம் என்பதைத் தெரிந்த பின் எவ்வாறு இந்தப் பாவத்தில் ஈடுபட முடியும்? நாங்கள் வட்டி கொடுக்கவில்லை, வாங் கத்தான் செ#கிறோம் எனச் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.

அவ்வாறு செ#வதும் இந்தப் போருக்கு மறைமுகமாக உதவி செ#வது போலாகும். வட்டி சம்பந்தமான எதற்கும் நாம் துணைபோ# விடக் கூடாது அது வீடுகளில் மாட்டும் வட்டி நிறுவனத்தின் காலண்டராக இருந்தாலும் சரியே.! திருமணத்திற்காக, வியாபாரத்திற்காக, மருத்துவத்திற்காக , தேவையற்ற செலவுக்காக என வட்டியில் மக்கள் விழுந்து விடுகின்றனர். இந்த உலகம் நிரந்தரமற்ற நீர்க்குமிழி வாழ்வு. நமது நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கை மறுமையில்தான் என்பதை உணர்ந்தவர்கள், ஈமானில் உறுதியானவர்கள் மட்டுமே இந்த பாவத்திலிருந்து விலகிட முடியும்.

நாம் இந்த வட்டியை வாங்கினாலும் நமது கஷ்டங்கள் தீரப் போவதில்லை. அதை விட மோசமான இந்த வட்டி நரகத்திற்கு நிரந்தரமாக அழைத்துச் சென்று அங்கும் கொடுமையை அனுபவிக்கக் காரணமாக அமைந்துவிடும். நாம் யாருடைய நலனுக்காக வட்டியை வாங்கினோமோ அவர்கள் அங்கு வந்து நம்மைக் காப்பாற்றப் போவதில்லை. வட்டியினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவரின் கஷ்டத்தை மூலதனமாகக் கொண்டு சம்பாதிப்பவர்கள் சைத்தானால் தீண்டப்பட்ட பைத்தியமாக மறுமையில் நிற்பார்கள்.

யாரேனும் ஒருவரை அளவுக்கதிகமாக நேசிக்கிறோமோ, அவரை அந்த மனிதரின் பைத்தியம் என்பார்கள். அவ்வாறே வட்டியை யார் வாங்குகிறார்களோ, அவர் சைத்தான் பைத்தியம் என அல்லாஹ் குறிப்பிடுகிறான். "வட்டி உண்பவர்கள் சைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள்.' (திருக்குர்ஆன் 2:275) பாவங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்காமல் இருந்தால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கிறான். "(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருத்திக் கொண்டிருக்கும் நிலையில்  அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.' (திருக்குர்ஆன் 11:117)

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை இந்த வட்டியிலிருந்து பாதுகாக்க ஓர் ஊரிலுள்ள செல்வந்தர்கள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவர்கள் பைத்துல் மால் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி அவர்களையும் தம்மையும் பாதுகாக்க முன் வர வேண்டும். "அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செ#வான்; (தன் கட் டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்ப தில்லை.' (திருக்குர்ஆன் 2:276) எனவே தானதர்மங்களை அதிகரித்து வட்டியை ஒவ்வொரு ஊரிலிருந்தும் விரட்டு வோம். நம்மால் முடியும் என நினைத்து நாம் களமிறங்கினால் அல்லாஹ் நமக்கு உதவுவான். "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செ#வோருடனேயே இருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 29:69)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்