மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை சிறுவர் உலகம்

மழையே! மழையே!
அபூ அய்மன், , 16-30 SEPTEMBER 2022


பள்ளிவாசலில் இருந்து முஅத்தினின் பாங்கோசை ஒவ்வொரு வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் வழியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் செவியறைகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலைத் தொழுகைக்கு குடும்பத் தலைவரான நஸீர் தம் மகன் அப்துர் ரஹீமை எழுப்புவது வழக்கம். அன்று அப்துர் ரஹீமை எழுப்புவது அவருக்கு இருமனதாக இருந்தது. வெளியில் மழை பெ#து கொண்டிருந்ததுதான் அதற்கான காரணம்.

சிறிதுநேர ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, தன் பிள்ளைக்கு ஆன்மிகப் பயிற்சி கொடுப்பதுதான் ஒரு தந்தையின் மிக முக்கியமான பொறுப்பு. மற்றெல்லாக் காரணங்களும் இதற்குப் பின்னால்தான் என்ற சிந்தனையோடு மகன் அப்துர் ரஹீமை எழுப்பத் தொடங்கினார். காற்றின் குளுமையின் இனிமையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அப்துர் ரஹீம். தந்தையின் நீண்ட தொந்தரவுக்குப் பிறகு எழுந்து அமர்ந்தான். பிறகு தொழுகைக்குத் தயார் ஆனான். ஒரு குடையில் இருவராக தந்தையும் தனயனும் நடக்க ஆரம்பித்தனர்.

பள்ளிவாசல் வழி நெடுகிலும் பள்ளிக்கூடம் விடுமுறை குறித்த எண்ணவோட்டத்தில் நடந்து சென்றான் ரஹீம். இமாமின் இனிமையான குரலில் குர்ஆன் வசனங்களில் உள்ளம் நனைந்தவர்களாக வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். அதிகாலைத் தொழுகை முடிந்ததும் வீட்டில் குர்ஆன் வகுப்பு நடப்பது வழக்கம். அன்றைய குர்ஆன் வகுப்பில் ரஹீமின் தந்தை அத்தியாயம் லுக்மானின் இறுதி வசனமான "அவனே மழையைப் பொழிவிக்கின்றான்' என்ற வசனம் பற்றிய பாடங்களையும் படிப்பினைகளையும் சொல்லிக் கொடுத்தார்.

மழையை அல்லாஹ் பொழிவிக்கிறான் என்ற வார்த்தைகள் அப்துர் ரஹீமுக்கு வியப்பை ஏற் படுத்தின. அவன் இதுநாள் வரை பாடப்புத்தகத்தில் படித்த மழைக்குக் காரணம் இயற்கைதான் என்ற எண்ணத்தில் இருந்தான். உடனே தன் தந்தையிடம் "அப்பா! மழையைப் பொழியச் செ#வதும் அதன் அளவை முடிவு செ#வதும் அல்லாஹ்தானா? இயற்கை இல்லையா?' எனக் கேட்டான்.

அவனது தந்தை கூறினார் : "எனது அன்பு மகனே! உலகத்தில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு. அதில் தான் நாடியதை அவன் செ#கின்றான். எங்கு எப் போது எவ்வளவு மழை பொழிய வேண்டும் என்பதை அவன்தான் முடிவு செ#கின்றான். இயற்கை என்பது அவன் கட்டளையை நிறைவேற்றும் சாதாரண படைப்பு.' குர்ஆன் வகுப்புக்குப் பிறகு வீட்டின் முற்றத்தில் மழையை ரசித்தவனாக இருந்த அப்துர் ரஹீமின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி.

காற்று மேகங்களைக் கொண்டு வருவது போல, பூக்களின் வண்ணமும் வாசமும் வண்டைக் கொண்டு வருவது போல தொடர் மழைகள் பள்ளி விடுமுறையைக் கொண்டு வருகின்றன என்பதுதான் ரஹீமின் மகிழ்ச்சிக்குக் காரணம். அந்த நாளின் மீதான ஆர்வம் மற்ற நாளைப் போலல்ல! "சோ!' என்று பெ#யும் மழை. அதனால் எழும் மண் வாசனை, தவளையின் சத்தம், ஜில்லென வீசும் குளுமையான காற்று.

ஒரு விதமான புத்துணர்வை உடலில் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இடையிடையில் விடுமுறை குறித்து பள்ளியிலிருந்து எந்தவொரு குறுஞ்öச#தியும் வராதா? என்ற எண்ணத் தில் அப்துர் ரஹீம் அலைப்பேசியைப் பார்த்த வண்ணமிருந்தான். அன்று பள்ளிக் குச் செல்ல அவனுக்கு மனமில்லை. தன் தாயிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான். தன் தாயின் கவனத்தைத் திருப்ப முயற்சி செ#தான்.

"அம்மா! மழை பெ# கிறதே, பள்ளி விடுமுறை விடுவார்களா?' என்றான் ரஹீம். ஒரு சின்னப் புன்னகை பூத்தவளாக எதுவும் பேசாமல் தன் வேலை யில் கவனம் செலுத்தினாள் அவன் அம்மா. எந்த பதிலும் வராததால் மீண்டும் வீட்டின் முற்றத்தை நோக்கி ஓடினான் ரஹீம். மழையின் வேகத்தைக் கணிப்பது தான் விடுமுறையை உறுதி செ#யும் என்பது ரஹீமின் நம்பிக்கை. ஆனாலும் அவன் எதிர்பார்த்த மழை அங்கில்லை.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்