மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

சிறுவர் உலகம்

ஓடுங்கள் மைதானத்திற்கு..
மௌலவி முஹம்மது அலீ ஸலாமி, , 1-15 நவம்பர் 2022


பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் அப்துல்லாஹ். படிப்பில் கெட்டிக்காரன். அது போலவே குடும்பச் சூழலையும் நன்றாக உணர்ந்தவன். தன்னுடைய நண்பர்களிடம் இருக்கும் ஆடம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆசையாக இருந்தாலும் தன்னிடம் உள்ளவற்றை நினைத்து பெருமிதம் கொள்ளும் மனம் அப்துல்லாஹ்விடம் உண்டு.

இருப்பினும் அவ்வப்போது அப்துல்லாஹ்வும் மற்ற மாணவர்களைப் போல இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதும் உண்டு. ஏக்கங்கள் அதிகமான ஒருநாள் சோகத்தில் அப்துல்லாஹ் தனியாக அமர்ந்திருந்தான்.

ஆதில் அன்றைக்கு அப்துல்லாஹ்வை எல்லா இடங்களிலும் தேடித் தேடி அலைகிறான். அப்துல்லாஹ்வின் நெருங்கிய நண்பன் ஆதில். கவனமான சிறுவன் அவன். புத்திசாலியும்கூட.

ஆதிலால் அப்துல்லாஹ்வைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பின்னர்தான் அப்துல்லாஹ் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தடியில் அவன் சோகத்துடன் அமர்ந்திருந்தது ஆதிலின் கண்ணில் பட்டது.

ஆதில் அப்துல்லாஹ்விடம் "என்ன ஆச்சு உனக்கு? இங்க வந்து ஏன் தனியா உக்காந்து இருக்க?' என்று கேட்டான். மௌனம் கலைந்து அப்துல்லாஹ் பேசத் தொடங்கினான். "என் கதை ரொம்ப மோசமானதுடா. அத நினைச்சாலே அழுகதான் வருது.' மௌனமாக இருந்தான் ஆதில். மீண்டும் பேசத் தொடங்கினான் அப்துல்லாஹ். "நான் ஆசைப்படுறது எதுவுமே எனக்கு கிடைக்க மாட்டேங்குது. மத்த பசங்க மாதிரி என்னாலயும் ஜாலியா இருக்க முடியல. எல்லா பசங்களும் நல்லா புதுசு புதுசா சட்டை, ஃபேண்ட் போடுறாங்க. நல்லா செலவு பண்ணுறாங்க.' விஷயத்தைப் புரிந்து கொண்டான் ஆதில்.

இதுதான் உனக்கு பிரச்னையா? என்று கேட்டுவிட்டு, ஆதில் மேலே பேசத் தொடங்குகிறான். "அப்துல்லாஹ்! முதல்ல நீ ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்கோ! பணம், ஆசை இதெல்லாம் அப்பப்போ வரும் போகும்.

நபி(ஸல்) அவர்களிடத்திலகூட பெரிய அளவில செல்வம்லாம் இருந்ததில்லதான், ஆனா அவங்க சந்தோசமாகத்தான் இருந்தாங்க. அதனாலதான் ஒருமுறை "செல்வம் அப்டீங்கறது காசு பணத்துல இல்லை. போதுமென்ற மனசுல இருக்கு'னு சொன்னாங்க. முஹம்மத் நபி(ஸல்) கிட்ட செல்வம் வரும்போதெல்லாம் அத தேவைப்படுறவங்களுக்குக் கொடுத்துருவாங்க.

நீ இப்படி யோசி. அல்லாஹ் எனக்கு நிறைய செல்வத்தக் கொடுத்த பிறகு நான் தப்பு தவறுல ஏதும் ஈடுபட்டுட்டா என்ன செ#ய? அல்லாஹ் "நீங்கள் கெட்டதா நெனக்கிற ஒன்னு உங்களுக்கு நல்லதாகவும், நல்லதா நெனக்கிற ஒன்னு கெட்டதாவும் இருக்கலாம்'னு சொல்த மனசுல நெனச்சுக்கோ, உனக்கு எல்லாம் புரியும்! எப்போதும் உனக்கு மேல இருக்குறவங்கள மட்டும் பாக்காத. உன்னை விட ரொம்ப மோசமான நிலைமைல பலரும் இருக்காங்க, அவங்கள பாரு.'

கவலையால் நிரம்பியிருந்த அப்துல்லாஹ்வின் மனது கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் பெறுகிறது. அப்துல்லாஹ்வின் கையைப் பிடித்துக் கொண்டு ஆதில் வேகமாக ஓடுகிறான் மைதானத்தை நோக்கி..!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்