மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

ஃபீல் குட் மூவி போல ஃபீல் குட் நூல் இது!
மருத்துவர் பிரீத்தா நிலா, , 1-15 ஜனவரி 2023


வாழ்வின் நிகழ்வுகளையும், மனித உணர்வுகளையும் நம் கண் முன்னே விவரிக்கும் ஓர் அழகான படைப்பு மற்றவை பிற பின். எந்தவிதப் புனைவும் இல்லாமல், மிகைப்படுத்துதலும் இல்லாமல் எளிய சொல் வழக்கில் உணர்வுகளைப் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு. ஒவ்வொரு வார்த்தையும் உணர்வைத் தொடுவதோடு உயிரையும் தொடுகிறது. வாசிக்கும் ஒவ்வொருவராலும் இதனை உணர முடியும். அத்துணை உயிர்ப்போடு எழுதியிருக்கிறார் ஆசிரியர் வி.எஸ். முஹம்மத் அமீன். வெயிலின் வெப்பத்தைப் போல, மழையின் குளுமையைப் போல இந்நூலின் ஒவ்வொரு எழுத்துகளும் நம் நினைவலைகளை வருடிச் செல்கிறது.

நூலில் பல இடங்களில் ஆசிரியர் கேள்விகளால் நம்மோடு உரையாடுகிறார். ஒவ்வொரு கேள்வியும் நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடியாது. இது அவரது எழுத்தின் பலம்.

"நினைவில் விடியாத இராப் பொழுதுகள்' என்கிற கட்டுரையை வாசிக்கும் யாராயினும் அன்றிரவே இரவைத் தரிசிக்க விருப்பம் கொள்வார்கள். அந்த அளவிற்கு இரவை ஆசிரியர் உணர்வுப்பூர்வமான ஒவியமாக வடிவமைத்திருப்பார். இத்தனை அழகாக இதுவரை யாரும் இரவிற்கு நியாயம் செய்திருக்க முடியாது என்றுதான் சொல்ல முடியும். அதன் தாக்கம் என்னவோ வாசிப்பின் இறுதியில் நம்மை இரவின் மீது பெருங்காதல் கொள்ளச் செய்துவிடுகிறது.

காலம் போன்றதொரு காலம் எனும் கட்டுரையில், "காலத்தின் கோமாளிகளைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கிறது காலம்' என்று ஆசிரியர் எழுதியிருப்பார். வாழ்க்கையின் ஒட்டத்தில் பல்வேறு உணர்வுகளைக் கையாண்டவர்களால் மட்டுமே அந்த வார்த்தைகளில் உள்ள ஆழத்தை உணர முடியும். உணர்வை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு படைப்பைப் பற்றியும் நம்மால் நிறைய எழுத முடியாது. ஏனென்றால் அந்தப் படைப்பு தந்த உணர்வு நம் மனதிற்குள் பரவியிருக்குமே தவிர வார்த்தைகளால் ஒரு கட்டமைப்புக்குள் அதைக் கொண்டு வர முடியாது . ஆசிரியரைப் போலவே நானும் மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்கிறேன். பல இடங்களில் ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அதனால் ஒரு ஞூஞுஞுடூ ஞ்ணிணிஞீ ட்ணிதிடிஞு ஐ போல ஞூஞுஞுடூ ஞ்ணிணிஞீ ஞணிணிடு எனச் சொல்வது சரியானது என்றே நினைக்கிறேன்.

கலையாத சித்திரங்கள் என்கிற கட்டுரையை மிக முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன். ஃப்ரெஞ்ச் பழமொழியைப் போல, நீந்தும்போது அன்னப் பறவை சாந்தமாகக் காணப்பட்டாலும், அதன் கால்கள் படபடவென நீந்துவதைப்போல ஒரு தென்றலுக்குரிய இதமான வார்த்தைகளை ஆசிரியர் தொடுத்திருந்தாலும் மிக தீர்க்கமாக, நுட்பமாக தனது கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

"உங்களுக்குத் துஆச் செய்யத் தான்டா இந்தக் கட்ட இன்னும் கிடக்குது' என்று தன் கண்ணாடி வாப்பா சொல்வதைக் குறிப்பிட்டிருப்பார். வீட்டின் பெரியவர்களின் அன்பை இதை விட எப்படி வெளிப்படுத்த முடியும்? பரபரப்பாக ஒடிக்கொண்டிருப்போம். கையைப் பிடித்து நிறுத்தி, "ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு வேலையைப் பாருய்யா' என்று சொல்லும் அமத்தாவின் வாஞ்சையைப்போல இந்த நூல் என்றால் மிகையில்லை.

ஒரு சமூகத்திற்கு அறிவியலும், அரசியலும், சமூகம் குறித்தான இன்னும் பல பார்வைகள் அடங்கிய புத்தகங்கள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட உணர்வுகள் அருகிவிட்ட இக்காலக்கட்டதில் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட இம்மாதிரியான நூல்கள் வெளிவருவதும் முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

"முகவரிக்காக மட்டுமே தெருக்களை நினைவில் வைத்திருக்கிறோம். தெருக்களுக்கும் நம் குழந்தைகளுக்கும் எந்த உறவும் இப்போது இல்லை' என்று ஆசிரியர் கூறியிருப்பது, நாம் எளிதில் கடந்து போகும் படியான வரிகள் இல்லை. ஒரு வாழ்வியலைப் பிள்ளைகள் தொலைத்திருக்கிறார்கள் என்பதோடு உணர்வுகளைக் கையாளத் தெரியாத பிள்ளைகளாக உருவாவதற்கான பல்வேறு காரணங்களில் மிக முக்கியமான காரணமாக இதைப் பார்க்கிறேன்.

"மற்றவர்களுடன் பேசுவதைக் குறைத்துவிட்டு உங்களோடு நீங்கள் பேசுங்கள்' என்கிற ஒரு விருப்பத்துடன் இந்நூலை நிறைவு செய்திருப்பார் ஆசிரியர். நிச்சயமாக மற்றவை பிற பின் நூலை வாசிப்பவர்கள் தங்கள் உணர்வுகளோடும் நினைவுகளோடும் பேசியிருப்பார்கள். அதுவே இந்நூலின் வெற்றியாக நான் பார்க்கிறேன்.

அழகிய வடிவமைப்பில் கட்டுரைக் கேற்ற ஓவியங்களுடன் வண்ணப் பக்கங்களில், தரமான தாளில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுக்கு அன்பளிப்பதற்கு மிகச் சிறந்த நூல் "மற்றவை பிற பின்.'

-மருத்துவர் பிரீத்தா நிலா


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்