மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

அது என்ன ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்? ஓர் இனிய உரையாடல்
, 1-15 ஜனவரி 2023


 

சுரேஷ்: "சுல்தான் பாய்! நல்லா இருக்கீங்களா?'

சுல்தான்: "ஓ..! சுரேஷ்! நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...?'

சுரேஷ்: "நல்லா இருக்கேன் பாய்.! நம்ம காதர் இல்ல, அவரு...'

சுல்தான்: "ஆமா.. சொல்லுங்க, என்ன விஷயம் சுரேஷ்?'

சுரேஷ்: "ஏதோ ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்ன்னு ஓர் அமைப்பு இருக்காமே! அந்த அமைப்போட 75 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிக்கு, வர்ற ஞாயிறு அன்னக்கி என்னை அவசியம் வரணும்ன்னு கூப்பிட்டாரு..!'

சுல்தான்: "அப்படியா சுரேஷ்?'

சுரேஷ்: "ஆமாங்க.. பாய்! புதுசா இருக்குங்களே..பாய்! அது என்ன இந்து, முஸ்லிம் அமைப்பா?'

சுல்தான்: "இல்ல, இல்ல சுரேஷ்! அது ஓர் அகில இந்திய இஸ்லாமிய இயக்கம். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்ன்னா, இதுல இருக்கிற ஹிந்த்ங்கிறதுக்கு இந்தியான்னு அர்த்தம்!'

சுரேஷ்: "அப்படீங்களா பாய்.... அப்ப சரி! ஆனா..'

சுல்தான்: "என்ன சுரேஷ், என்ன ஆனான்னு தயங்குறீங்க?'

சுரேஷ்: "அது... ஒன்னும் இல்லைங்க பாய், பொதுவா முஸ்லீம்ஸ் எல்லாம் அவங்க ஆளுகளுக்காகத்தானே அமைப்பு, கட்சி எல்லாம் வச்சுக்குவாங்க! இதுல ஹிந்த்ன்னு இருக்கவும்தான் டவுட் வந்துச்சு. அதான் கேட்டேன்.'

சுல்தான்: "இஸ்லாமிய இயக்கம் முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் செயல்படுவதில்லை. இந்த மண்ணின் நலனுக்காகவும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுவதுதான் இஸ்லாமிய இயக்கம். ஜமாஅத்தே இஸ்லாமியும் எல்லா மக்களுக்காகவும் பணியாற்றுகிறது. இஸ்லாமும் அதைத்தானே சொல்கிறது'

சுரேஷ்: "இஸ்லாம் முஸ்லிம்களுக்கான மதம்தானே பாய்..!'

சுல்தான்: "இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழச் சொல்கிறது இஸ்லாம். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டுமான கடவுள் அல்ல. அவன் அகில உலகின் இரட்சகன்'

சுரேஷ்: "அப்ப.. முஹம்மத் நபி?'

சுல்தான்: "இறைவனால் மனிதகுலத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர். எல்லாருக்குமான வழிகாட்டி'

சுரேஷ்: "அப்டீன்னா திருக்குர்ஆனும் எல்லாருக்குமான வேதம்னு சொல்லவர்றீங்க..!'

சுல்தான்: "சரியா புரிஞ்சுக்கிட்டீங்க சுரேஷ். ஆமாம்! எல்லாருக்குமான இறைவனால் எல்லாருக்குமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனைக் கொண்டு எல்லாருக்குமாக வழிகாட்டியவர்கள்தான் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். இதைத்தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் சொல்கிறது.'

சுரேஷ்: "அதனாலதான் எங்களையும் அழைச்சிருக்காங்க.. ரொம்ப மகிழ்ச்சி. இஸ்லாம் பத்தி எனக்கு நிறைய ஐயம் இருக்கு சுல்தான் பாய்..! அந்த நிகழ்ச்சில வந்து கேட்டுக்கலாமா?'

சுல்தான்: "அதையெல்லாம் நீங்க அங்கு வந்துதான் கேட்கணும்னு இல்லை. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய தகவல் மையத்தை அதற்காகவே வைத்துள்ளது. ரொம்ப சிம்பிள் 1800 572 3000 என்ற டோல்ஃப்ரீ நம்பருக்கு அழைச்சு எப்ப வேணும்னாலும், என்ன ஐயம் வேண்டுமானாலும் கேட்டுத் தெளிவு பெறலாம்'

சுரேஷ்: "புத்தகங்கள் எதுவும் தேவைப் பட்டுச்சுன்னா தருவாங்களா?'

சுல்தான்: "அதுக்காகத்தானே இஸ்லாமிக் அகாடமி இருக்குது. அது ஒரு போஸ்டல் லைப்ரரி. இலவசமாகவே உங்களுக்கு இஸ்லாமிய நூல்கள் வரும். படித்துவிட்டு அனுப்பினால் அடுத்ததடுத்த புத்தகங்கள் அனுப்புவாங்க!'

சுரேஷ்: "அதுக்கும் நம்பர் எதுவும் இருக்குங்களா?'

சுல்தான்: "நோட் பண்ணிக்குங்க. 8925216126. இந்த எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் மெஸேஜ் அனுப்புங்க. நூல்கள் வீடு தேடி வரும்'

சுரேஷ்: "விலைக்கு நூல்கள் வாங்கணும்னா.. அங்கேயே கிடைக்குமா?'

சுல்தான்: "அதுக்குத்தான் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) இருக்கே! திருக்குர்ஆன் தமிழாக்கம், நபிமொழித் தொகுப்புகள், இஸ்லாமிய நூல்கள் எல்லாமே கிடைக்கும். சென்னை பெரம்பூர் ஜமாலியாவுல இருக்கு. 8668057596 என்ற நம்பருக்கு போன் செய்துவிட்டுப் போங்க.'

சுரேஷ்: "ஐ.எஃப்.டி. எங்கோ கேட்ட மாதிரியே இருக்கு.. ஏதோ வேன்ல பார்த்திருக்கேன்'

சுல்தான்: "ஓ...! அதுவா சுரேஷ். அது நடமாடும் புத்தக வனம். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கின்ற பணியைச் செய்கிறது. மட்டுமில்ல எல்லா புத்தகக் காட்சியிலும் ஐ.எஃப்.டி ஸ்டால்களைப் பார்க்கலாம். உங்களைப் போன்ற இதர மத அன்பர்களுக்காக திருக்குர்ஆன் சலுகை விலையிலும் அங்கு கிடைக்கும்'

சுரேஷ்: "நாம இவ்ளோ பழகுறோம். எனக்கே இப்பதான் பல செய்திகள் கிடைச்சிருக்கு. என் நண்பர்களையும் அழைச்சிட்டு வாரேன்'

சுல்தான்: "தாராளமா! உங்களுக்காகத்தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வாராந்திர திருக்குர்ஆன் வகுப்புகளை நடத்துகிறது. இஃப்தார், ஈத் மிலன், இதயங்களை இணைக்கும் நிறைய நிகழ்வுகளை நடத்துகிறது. நமக்குள்ள இந்த உரையாடல்தான் நல்ல புரிதலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும் இல்லையா சுரேஷ்!'

சுரேஷ்: "கண்டிப்பா பாய்! ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எங்கெல்லாம் இருக்கு?'

சுல்தான்: "நான்தான் சொன்னேனே! இது ஓர் அகில இந்திய இயக்கம். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் எல்லாப் பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிகழ்வுகளில் நேரடியா பங்கெடுக்க முடியாவிட்டாலும் Manudavasantham என்ற Youtube சேனலில் போய் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. எல்லா நிகழ்வுகளையும் பார்க்கலாம்.'

சுரேஷ்: "ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெரியளவில் மதப்பணிகளைச் செய்கிறது. ரொம்ப புதிய தகவலா இருக்கு!'

சுல்தான்: "மதம் என்பது வெறும் வழிபாடு மட்டுமில்ல சுரேஷ். வாழ்வு முழுவதுமே வழிபாடுதான். இஸ்லாம் அப்படித்தான் போதிக்கிறது. ஜமாஅத்தே இஸ்லாமியும் அதனால்தான் எல்லா தளங்களிலும் பாடுபடுகிறது'

சுரேஷ்: "எல்லா தளங்களிலும்னா..?'

சுல்தான்: "மக்கள் சேவைப் பணிகள், கல்விப் பணிகள், சமய நல்லிணக்கப் பணிகள், வட்டி இல்லா கடன் உதவி நிதியங்கள், கிராமங்களில் இலவச மருத்துவ சேவைப் பணிகள் என்று ஜமாஅத் எல்லா தளங்களிலும் செயல்படுகிறது'

சுரேஷ்: "அதுவும் முஸ்லிம்களுக்காக மட்டும் இல்லைதானே!'

சுல்தான்: "ஆமாம் சுரேஷ். வெள்ளம், புயல், நிலநடுக்கம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலெல்லாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் களத்தில் நின்று பணியாற்றுகிறது. அங்கு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை! சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகூர் தெத்தி பகுதியில் ஜமாஅத் 100 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. அதில் இதரமதச் சகோதரர்களும் அடங்குவர். ஒருபிடி அரிசித் திட்டம், கல்வி உதவி என்று ஜமாஅத் செய்யும் மக்கள் சேவைப் பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.' சுரேஷ்: "ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பாய்! மக்கள் சேவை போல சமய நல்லிணக்கப் பணிகளும் ரொம்ப முக்கியம்.'

சுல்தான்: "நாட்டில் பல்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்கள் எல்லோருமே அமைதியை விரும்புபவர்கள்தான். அவர்களில் ஆன்மிகவாதிகள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்கப் பேரவை போன்ற அமைப்பின் மூலமாகவும் ஜமாஅத் செயல்படுகிறது'

சுரேஷ்: "இவ்ளோ பணிகள் செய்றீங்க. ஒரு பத்திரிகையும் நடத்தலாம் இல்லியா?'

சுல்தான்: "ஜமாஅத் எல்லா மாநிலங்களிலும் மாத, வார இதழ்களை நடத்தி வருகிறது. தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் இருமுறை வெளிவரும் சமரசம் இதழையும் நடத்திவருகிறது.

சுரேஷ்: "சமரசம் அருமையான இதழாச்சே! நான்கூட அதில் எழுதியிருக்கின்றேனே! சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க..'

சுல்தான்: "சொல்லுங்க சுரேஷ்..!'

சுரேஷ்: "75 ஆண்டுகளா நாட்டுக்கும், முஸ்லிம்களுக்காகவும், எல்லா மதத்தினருக்காகவும் எவ்வளவோ பணிகள் செய்றாங்க! ஆனா.. எதுவுமே எங்களைப் போன்றவங்களுக்குத் தெரியவே இல்லையே!'

சுல்தான்: "உண்மைதான் சுரேஷ்! ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இறைவனுக்காகவும், மறுமை வெற்றியை முன்னிறுத்தியும் செயல்படுவதினால பெரியளவில் விளம்பரங்கள் செய்வதில்லை. அதனால் நிறையச் செய்திகள் உங்களைப் போன்ற நல்ல நண்பர்களுக்குக்கூட தெரியவில்லை. எனவே இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய இயக்கங்கள் குறித்தும் ரொம்பவும் தவறான செய்திகளை பரப்பிட்டு இருக்காங்க. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து ஜமாஅத்தைக் குறித்த அறிதலுக்கும் புரிதலுக்குமாகத்தான் 75 ஆண்டுகால நிறைவையொட்டி பரப்புரையை 16 டிசம்பர் 2022 தொடங்கி 16 மார்ச் 2023 வரை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அந்த நிகழ்ச்சிக்காகத்தான் உங்களையும் அழைச்சிருக்காங்க!

சுரேஷ்: "அருமை! அவசியம் நிகழ்வில் கலந்து கொள்கிறேன். பாய்.. ஜமாஅத் இணையதள முகவரியைச் சொல்லுங்க.. இப்பவே போய் மேலதிகத் தகவல்களைப் பார்க்கிறேன்'

சுல்தான்: 'www.jihtn.org'

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ALHAMDULILLAH Superb.....

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்