மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

சிறுவர் உலகம்

அன்பும் பண்பும் செழிக்கட்டும்
செய்யது சுல்தான் , , 16-31 ஜனவரி 2023


நடப்பதெல்லாம் நடக்கட்டும்
கடந்த காலம் கடக்கட்டும்
காயம் நெஞ்சில் மறையட்டும்
பாரம் கொஞ்சம் குறையட்டும்


வீதியில் எல்லாம் மின்மினிகள்
விளக்கைப் போல ஒளிரட்டும்
விண்மீன்கள் எல்லாம் விண்ணிலிருந்து
பூக்கள் போல மலரட்டும்


சமத்துவமாக மனிதன் வாழ
அமைதிப் புறா பறக்கட்டும்
சாதிசனம் வேற்றுமை எல்லாம்
மண்ணில் புதைந்து இறக்கட்டும்


ஏற்றம் குற்றம் எதுவுமின்றி
மனிதனை மனிதன் மதிக்கட்டும்
மதவெறி பிடிக்கும் மனிதர்கள்
இனிமேலாவது திருந்தட்டும்

பிறர் வாழ்வில் துயர் நீக்கும்
புதிய மனிதன் பிறக்கட்டும்
உழைத்து வாழும் உழவருக்கும்
உரிய ஊதியம் கிடைக்கட்டும்


பஞ்சமில்லா பசுமை மாறா
புதுமை உலகு பிறக்கட்டும்
தூய்மை கொண்டும் வாய்மை கொண்டும்
எளிய வாழ்க்கை கிடைக்கட்டும்


சிறுமை வாழ்வில் அருமை அறிய
அன்பும் பண்பும் வளரட்டும்
நேசம் கொள்ளும் தேசமெல்லாம்
காதல் பூக்கள் மலரட்டும்

-N.செய்யது சுல்தான்
ஜாமிஆ அல்ஹுதா அரபிக்
கல்லூரி மாணவர், அடையாறு


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்