ரமளான்
மாதங்களில் புனிதமானது
மன்னிப்பதில் இனிதானது
பசியைக் கொடுப்பது அல்ல
பசியை உணர்த்தும் மாதமிது
ஷைத்தானை விலங்கிட்டு
பூட்டி வைத்து
புவியெங்கும் அருள்மழை
பொழியும் மாதமிது
நன்மைகளைப் பன்மடங்கு
அதிகம் கொடுத்து
உடல்நிலை சமன்படுத்தி
நலத்தைக் கொடுக்கும் மாதமிது
நம்மை நேர்வழிப்படுத்த
படைத்தவனால் இறக்கப்பட்ட
புனிதத் திருமறை
வந்துதித்த மாதமிது
ரய்யான் வாயில் திறக்கப்பட்டு
காத்திருக்கும் மாதமிது
வானவர்கள் நமைத்தேடி
வந்திறங்கும் மாதமிது
வல்லோன் நன்மைகளை
வாரி வழங்கும் மாதமிது
சலுகைகள் பற்பல கொடுக்கும்
மாண்புயர் மாதமிது
இச்சைகளை ஒத்தி வைத்து
திருமறையோடு மனதை ஒன்ற வைத்து
பாவம் போக்கிட
தூய்மையாகும் மாதமிது