மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

வகைவகையான நாள்கள்
அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மது, 16-31 மே 2023


உலகில் வருடாந்தம் பல நினைவு தினங்கள் நினைவுகூரப்படுகின்றன; கொண்டாடப்படுகின்றன. அன்னையர் தினம், மகளிர் தினம், ஆசிரியர் தினம், உலக சமõதான தினம், எ#ட்ஸ் தினம், புற்று நோயாளர் தினம் என எத்தனை எத்தனை தினங்கள் நினைவுகூரப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றன!

இவற்றோடு பிறந்த தினம், திருமண நாள், இறந்த தினம் போன்றவையும் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை விளக்க வேண்டிய தேவை இல்லை.

அல்லாஹ்வுடைய கலாம் (வார்த்தை) திருக்குர்ஆனும் ஒரு தினத்தைப் பற்றிக் குறிப் பிடுகின்றது; அதிகமாகக் குறிப்பிடுகின்றது. அந்தத் தினத்தை பல பெயர்களில் அழைக்கின்றது. அந்தப் பெயர்களும் அடைமொழிகளும் அந்தத் தினத்தின் முக்கியத்துவத்தை, மகத்துவத்தை, கனதியை நம் மனக்கண்முன்னே கொண்டுவந்து காட்சிப்படுத்தவல்லவை.

அந்தத் தினம்தான் உலக முடிவு தினம்; யுக முடிவு தினம்; இறுதித் தினம்.

குர்ஆன் இந்தத் தினத்தை எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதைப் பாருங்கள்:

எழுப்பப்படும் நாள்

ம ண் ண ø ற க ளி லி ரு ந் து வெளியேறும் நாள்

தீர்ப்பளிக்கும் நாள்

கூலி கொடுக்கும் நாள்

பயங்கர சப்தம்

மாபெரும் அமளி

கைசேதப்படும் நாள்

மூடிக்கொள்வது

நிலையான நாள்

நிகழ்வு

விசாரணை நாள்

நிச்சயமானது

நெருங்கி வருவது

இதயங்களைத் தட்டக் கூடியது

ஒன்று சேர்க்கும் நாள்

சந்திக்கும் நாள் (அதாவது மண்ணுலக வாசிகளும் விண்ணுலக வாசிகளும் சந்திக்கும் நாள்)

ஒருவரையொருவர் அழைக்கும் நாள்

இலாப, நஷ்ட கணக்குப் பார்க்கப்படும் நாள்

எச்சரிக்கை செ#யும் நாள்

வாக்களிக்கப்பட்ட நாள்

கஷ்டமான நாள்

ஒன்று கூட்டப்படும் நாள்

மகத்தான செ#தி

இப்படி இந்தத் தினத்தின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டுகின்ற பல பெயர்கள் உண்டு.

இந்தத் தினத்தைப் பற்றியும் இத்தினத் தில் நடைபெற இருக்கும் பயங்கரங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் மிக விரிவாக, விளக்க மாகப் பேசுகின்றது.

ஓர் இறைநம்பிக்கையாளர் எந்தத் தினத்தை நினைவுகூராவிட்டாலும், மறந் தாலும் இந்தத் தினத்தை நினைக்காமல், நினைவுகூராமல் இருத்தலாகாது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்