மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை சிறுவர் உலகம்

தொலைந்த செருப்பும் கிடைத்த ஃபலூடாவும்..!
ஷபியா, 16-31 மே 2023


பள்ளித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கிய மகிழ்ச்சியில் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த ஆமிரும் உமரும் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியிலிருந்த பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் சத்தம் கேட்க ஆமிர் "உமர், வாடா பள்ளிக்குப் போ# லுஹர் தொழுதுட்டு போகலாம்' என்று சொல்லவே அவர்கள் இருவரும் பள்ளிக் குச் சென்று தொழுதனர்.

தொழுது முடிந்து வெளியே வரும்பொழுது தன்னுடைய செருப்பைக் காணவில்லை என அறிந்த ஆமீரின் கண்களிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கோடை விடுமுறையின் மகிழ்ச்சிக் கனவுகள் கண்ணீரில் கரையத் தொடங்கின. நண்பனின் சோகத்தைக் கண்ட உமர், "அழாதடா அல்லாஹ் உனக்கு புது செருப்பு தருவான், நீ வேணா பாறேன்!' என்று சொல்ல "இல்லடா என்னோட அம்மா கஷ்டப்பட்டு வேலைக்கு போ# போன வாரம் தான் இந்த புது செருப்ப வாங்கி தந்தாங்க.

வீட்டில சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு, இப்ப தொலைந்த செருப்பும் கிடைத்த ஃபலூடாவும்..! ஷபியா போ# புது செருப்பு வாங்கி தாங்கன்னு கேட்டா என்ன பண்றது' என்றான் ஆமிர். இருவரும் பேசிக் கொண்டே வந்ததில் அவர்களின் வீடு வந்துவிட்டதால் இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். ஆமிருக்கு நான்கு வயது இருக்கும் போதே அவனுடைய அத்தா ஒரு வாகன விபத்தில் உயிரிழந்து விட்டார். அவனுடைய அம்மா தான் வேலைக்குச் சென்று அவனைப் பராமரிக்கிறார். ஆமிர் வீட்டிற்குள் சென்றதி லிருந்தே செருப்பு வேண்டுமென்று சொல்லி அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ கேட்டுக் கொண்டே இருந்தான்.

சிறிது நேரத்திற்கு பின் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஆமிர் கதவைத் திறந்ததும் தன்னுடைய நண்பன் உமர் கையில் புதுச் செருப்புப் பெட்டியுடன் நின்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து "இது என்ன?' என்று கேட்டான். அதற்கு உமர் "உனக்காக புது செருப்பு வாங்கிட்டு வந்தேன்' என்று சொன்னவுடன் "உன்கிட்ட எப்படி இவ்ளோ காசு?' என்று ஆமிர் கேட்டான். அதற்கு "என்னோட அத்தா, தினமும் எனக்கு கொடுக்கிற காச நான் ஃபலூடா ஐஸ்கிரீம் சாப்பிடணும்னு சேர்த்து வைத்திருந்தேன் அதுதான்' என உமர் சொன்னான்.

"நீ ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டியதுதானே ஏன் எனக்கு செருப்பு வாங்குன?' என ஆமிர் கேட்க "நேத்து மதரஸால ஹஜ்ரத், நாம மத்தவங்களுக்கு உதவி பண்ணா அதுக்கு பதிலா அல்லா நமக்கு உதவி பண்ணு வான்னு சொன்னாருல அதான்! சரி இந்தா, செருப்ப வாங்கிக்கோ. ஒழுங்கா மஃரிப் தொழுகை முடிந்ததும் விளையாட வந்துரு' எனச் சொல்லிச் செருப்பைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

என்னதான் மதரஸால ஹஜ்ரத் சொன்ன பயனைக் கேட்டு உமர் அவனோட நண்பனுக்கு உதவியிருந்தாலும் மனதிற்குள் தான் ஆசைப்பட்ட ஃபலூடாவைச் சாப்பிட முடியவில்லையே எனும் வருத்தத்துடனே வீடு திரும்பினான். அவன் வீட்டிற்குள் நுழைந்தவுடனே அவனுடைய அம்மா "இன்னைக்கு நா கடைவீதிக்கு போனேன் டா. போன வாட்டி நம்ம ரெண்டு பேரும் அங்க போனப்ப ஒரு ஃபலூடா வேணும்னு அடம் புடிச்சியே அத உனக்காக வாங்கி ஃப்ரிட்ஜில வச்சிருக்கேன் போ# எடுத்து சாப்பிடு' எனச் சொல்லவே இறைவனுக்கு நன்றி சொல்லிய படி மகிழ்ச்சியாக உமர் ஃபலூடாவைச் சாப்பிட்டான்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்