இவர்களிடம் கூறும்: 'உங்கள் மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!2 ,21
22 அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலைகுனிந்தவர் களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) 'எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது!'
அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா திருவசனங்கள்: 11 - 12
21. உங்களுடைய 'நாம்' இந்த மண்ணோடு மண்ணாகக் கலந்து விடாது. அதற்கு மாறாக அது செயல்படுவதற்கான கால அவகாசம் தீர்ந்துவிடுகின்ற அந்த நொடியிலேயே இறைவனிடமிருந்து மரணத்தின் தூதர் வந்துவிடுவார். அந்த 'நாம்'-ஐ உடலிலிருந்து அப்புறப்படுத்தி முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். அதிலிருந்து இம்மியளவு பகுதி கூட உடலோடு மண்ணில் சேர்க்கப்படாது. மேலும் அந்த 'நாம்' முழுமையாக வானவர்களின் கிடுக்கிப்பிடியில் (Custody) வைத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு தம்முடைய அதிபதியின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படும்.
இந்த இரத்தினச் சுருக்கமான வசனத்தில் ஏராளமான உண்மைகள் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளன. இவற்றை அப்படியே மேம்போக்காக வாசித்துக் கடந்துவிடக் கூடாது. விவரம் வருமாறு:
(1) இயங்கிக் கொண்டிருந்த கடிகாரத் தின் மின்கலம் தீர்ந்து போகின்ற போது திடீரென்று அதன் முட்களும் இயந்திரமும் இயங்குவது நின்றுவிடுவதைப் போன்று மரணமும் தற்செயலாகத் திடீரென்று நிகழ்ந்து விடுவதில்லை. அதற்கு மாறாக மரணத்தை நிகழ்த்துவதற்காக வல்லோன் அல்லாஹ் ஒரு தனிச் சிறப்புமிக்க வானவரை நியமித்திருக்கின்றான். ஓர் அரசாங்க அதிகாரி (Official Receiver) ஏதேனுமோர் பொருளை அரசாங்கத்துக்கு உரியதாய் ஆக்கிக் கொள்வதைப் போன்று அந்த வானவர் முறையாக வந்து அதனைக் கறாராகக் கைப்பற்றிக் கொள்கின்றார்.
இது தொடர்பாக திருக்குர்ஆனில் பிற அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கருத்தில் கொள்கின்ற போது, அந்த மரணத்துக்குப் பொறுப்பேற்றுள்ள வானவரின் கீழ் மிகப் பெரும் எண்ணிக்கையில் வானவர்களின் பட்டாளம் ஒன்றே மரணத்தை நிகழ்த்துவதற்காகவும், ஆன்மாவை மனிதனின் உடலிலிருந்து அப்புறப்படுத்தி, கைப் பற்றி முழுமையாகத் தம் வசம் ஆக்கிக் கொள்வதற்காக வெவ்வேறு வகையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வருகின்றது.
மேலும் வானவர்களின் இந்தப் பட்டாளம் குற்றவாளி ஒருவரின் ஆன்மாவைக் கைப் பற்றுகின்ற போது ஒரு விதமாகவும், இறைவன் மீது நம்பிக்கை கொண்ட, உத்தம மான நடத்தையைக் கொண்ட நல்லவர்களின் ஆன்மாவைக் கைப்பற்றுகின்ற போது முற்றிலும் மாறுபட்ட விதத்திலும் நடந்து கொள்வார்கள் என்கிற விவரமும் தெரிய வருகின்றது. (இதனைப் பற்றிய விவரங் களை அத்தியாயம் 4:97; 6:93; 16:28; 56:83,94 ஆகிய வசனங்களில் பார்க்கலாம்).
(2) மரணமடைந்ததும் மனிதன் முற்றாக அழிந்து போவதில்லை. அதற்கு மாறாக அவனுடைய உடலிலிருந்து அவனுடைய ஆன்மா வெளியேறி உயிரோடு எஞ்சி இருக்கின்றது என்கிற விவரம் தெளிவாகின்றது. 'மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார்' என்கிற திருக்குர்ஆனின் வாசகம் இந்த யதார்த்தத்துக்குச் சான்றளிக்கின்றது. ஏனெனில் முற்றாக அழிந்து போன யாதொன் றையும் கைப்பற்றிக் கொள்ள முடியாது என்பதும் கைப்பற்றிக் கொள்பவரின் கையில் கைப்பற்றப்பட்ட பொருள் எஞ்சி இருக்கும் என்பதும்தான் நிஜம்.
(3) மரணத்தின் போது மனிதனிடமிருந்து கைப்பற்றப்படுகின்ற பொருள் அவனுடைய உடல்ரீதியான வாழ்வு (Biologi- cal Life) அல்ல. அதற்கு மாறாக அவனுடைய சுயம் (Ego) 'நான்', 'நாம்', 'நீர்' போன்ற - சொற்களால் உருவகப்படுத்தப்படுகின்ற சுயம் தான் அவனிடமிருந்து கைப்பற்றப் படுகின்றது. இந்த சுயத்தைக் கொண்டு ஒருவன் இந்த உலகில் மேற்கொள்கின்ற செயல்களால் அவனுக்கென உருவாகின்ற ஆளுமை உள்ளது உள்ளபடி அவனுடைய பண்புகளில், குணங்களில் கூடுதலோ, குறைவோ எதுவுமின்றி (Intact) எந்தச் சேதாரமும் இல்லாமல் முழுமையாக வெளியேற்றி எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் இந்தச் சுயம் தான் மரணத்துக்குப் பிறகு அதன் அதிபதியிடம் மறுபடியும் ஒப் படைக்கப்படுகின்றது. இந்த சுயத்துக்குத் தான் மறுமையில் புதிய பிறப்பும் புதிய உடலும் தரப்படும். இதன் மீதுதான் வழக்குத் தொடுக்கப்படும். இதனிடம் தான் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் இதுதான் நற்கூலியையோ தண்டனையோ சுவைக்கும்.
22. மனிதனின் இந்த 'சுயம்' இறைவன் தன்னுடைய கணக்கு வழக்கைச் டம் சமர்ப்பிப்பதற்காக அவனுக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்படுதல் தொடர்பான விவரங்கள் இங்கே படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.