மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஃபலஸ்தீனை விழுங்கும் இஸ்ரேல் - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் நடத்திய கருத்தரங்கம்
ஹபிபுர் ரஹ்மான், நவம்பர் 16 - 30, 2023


ஃபலஸ்தீனை விழுங்கும் இஸ்ரேல் - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் நடத்திய கருத்தரங்கம்

2023 நவம்பர் 8ஆம் தேதி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் பெரம்பூரிலுள்ள இஸ்லாமிய தகவல் மைய (IIC) அரங்கில் ‘ஃபலஸ்தீனை விழுங்கும் இஸ்ரேல்’ என்கிற கருப்பொருளில் கருத்தரங்கை நடத்தியது. மாலை ஆறு மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் ஏழு தொடங்கிய ஃபலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர், அதன் நீட்சியாகத் தொடர்ந்து இஸ்ரேல் செய்துவரும் அத்துமீறல்கள், திட்டமிட்ட இனப்படுகொலை போன்றவற்றைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கருத்தரங்கில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், ஜமாஅத்தே இஸ்லாமி மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் Dr. K.V.S. ஹபீப் முஹம்மத், குருகுலம் இறையியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஜெ.எம்.பி. தாமஸ் பிர்லா, ஊடகவியலாளர் சா.மரிய ரீகன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். JIH சென்னை மாநகரத் தலைவர் அதாவுல்லாஹ் வரவேற்புரை வழங்கினார்.

அருள்திரு ஜெ.எம்.பி. தாமஸ் பிர்லா ‘யுத்தம், போர் என்பது மனித குலத்திற்கு எதிரானது என்ற குரல் கொடுக்க வேண்டும். வன்முறையைக் கட்டமைப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிரான குரல் கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். 1920களின் உலக வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஃபலஸ்தீன் என்கின்ற ஒரு நாடு பெரிய நிலப்பரப்பாகவும் இஸ்ரேல் சிறு புள்ளியாகவும் இருக்கும். ஆண்டுகள் கடக்கக் கடக்க பெரியதாக இருந்த ஃபலஸ்தீன் நிலப்பரப்பு இன்றைக்கு ஒரு புள்ளி போல மாறிவிட்டது. புள்ளியளவில் இருந்த இஸ்ரேல் இன்று ஒரு பெரிய நிலப்பரப்பாக மாறியுள்ளது. அந்த ஃபலஸ்தீன் மக்களின் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம்’ என்று கூறினார். தொடர்ந்து அவர் ஃபலஸ்தீனில் நேரில் கண்ட தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் அருணன் பேசுகையில் ‘அங்கு கடந்த 100 ஆண்டுகளில் பெரும்பான்மையினரே சிறுபான்மையினராக ஆக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இஸ்ரேல் பிரச்னை என்பது கடந்த அக்டோபர் 7 தொடங்கியதா? இல்லை. கடந்த 500 - 600 ஆண்டுகளாக அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்த முஸ்லிம்களை விரட்டி, அடக்கி, ஒடுக்கி 75% இருந்தவர்களை 49% ஆகக் குறைத்து 13% இருந்த இவர்கள் 51% யூதர்கள் ஆன வரலாற்று அதிசயம் என்பது தான் இந்த யுத்தத் திற்கான மூல காரணம்’ எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து வரலாற்று நெடுகிலும் யூதர்கள் செய்த தந்திரங்களையும், அவர்கள் எவ்வாறு தற்போதைய உலக பெருஞ்சக்திகளை கட்டுப் படுத்திருக்கின்றனர் என்பதையும், ஃபலஸ்தீனில் யூதர்கள் தற்போது செய்யும் அட்டூழியங்களையும் விரிவாக விளக்கினார்.

இறுதியாகப் பேசிய Dr. K.V.S. ஹபீப் முஹம்மத், ஃபலஸ்தீன் இஸ்ரேல் பிரச்னைக்கான வரலாற்றுப் பின்னணியையும், ஃபலஸ்தீன் மக்களின் அவல நிலையையும் குறித்து விரிவாகக் கூறினார். 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்