நாத்திகம் இன்று உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. நாத்திக சிந்தனை பெரிய அளவில் உருவாகி வரும் காலச் சூழலில் நாத்திகர்களின் சிந்தனை தவறானது என்பதை அவர்களின் மனம் புண்படாமலும் அதே நேரத்தில் தாம் கொண்டுள்ள கொள்கை எவ்வளவு தவறானது என்பதையும் மிக அழகிய முறையில் நாடறிந்த பேச்சாளர், எழுத்தாளர், சமூகவியலாளர் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் கடவுள் உண்டு! கடவுள் ஒன்று! என்ற இந்நூலை எழுதியுள்ளார்.
கிராமம், ஊர், நாடு என எவ்வகை நாத்திகராக இருந்தாலும் அவர்களின் அனைத்து வகையான சிந்தனைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
தந்தை பெரியார் தொடங்கி சர்வதேச அளவில் நாத்திக சிந்தனையாளர்கள் இறைவனைக் குறித்தும், மதம் குறித்தும் பேரண்-டத்தி-ன் படைப்பு குறித்தும் சொன்ன விஷயங்களை ஆரா#ந்து அவற்றிற்-கான பதிலடியாகப் பல தெளிவுகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
இறைமறுப்புக் கொள்கை கடந்து வந்த பாதையும், இந்திய நாத்திகம், தமிழக நாத்திகம் எவ்வாறு உருவானது என்பதையும், இறை நம்பிக்கையாளர்களை நோக்கி விடுக்கப்பட்ட சவால்களையும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? தானாகத் தோன்றினால் துல்லியமாக இயங்குமா?
கடவுளைப் படைத்தவன் யார்? விஞ்ஞானம் என்றால் என்ன? கடவுள் என்பவர் யார்? மனிதன் கடவுளாக முடியுமா எனப் பல்வேறு தலைப்புகளில் அலசி ஆரா#ந்துள்ளார் நூலாசிரியர். இறைவன் உண்டு என்பதை எடுத்தியம்பிய ஆசிரியர் இறைவன் ஒன்றுதான் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகிறார்.
இறைவன் ஏகனா? அநேகனா? எது சரியான கடவுள் கொள்கை? ஓர் இறைக் கோட்பாட்டினால் விளையும் நன்மைகள் என்ன என்பதையும் தெளிவாகக் கூறுகிறார்.
ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் கடவுள் தேவையா? கடவுள் ஏன் பூமிக்கு வருவதில்லை? மதங்கள் மனிதனை அறிவு பெற அனுமதிப்பதில்லை. சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை ஏன்? இரத்தம் சிந்துதல் இறைவனுக்கு உகந்ததா? கடவுளை வணங்-கினால் தீமைகள் போ# விடுமா? என்ற பல்வேறு ஐயங்களை எழுப்பிய ஈ.வெ.ராவின் கேள்விகளுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆசிரியர்.
இறுதியாக இந்தியா, உலக அளவில் மதங்களின் பெயரால் நடந்த கலவரங்களையும் பட்டியலிடுகிறார். இந்நூலில் தொகுக்கப்பட்ட அனைத்திற்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
மதங்களின் பெயரால் மோசடி நடக்கும் போது அவற்றின் மீது கோபம் வருவது இயற்கை. அந்தக் கோபம் கடவுள் மீது திரும்ப வேண்டிய அவசியமில்லை. நாத்திகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் படித்தறிய வேண்டிய நூல்.
இந்நூலினை பரவலாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.