மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஜெர்மனில் ஒளிரும் ரமளான்
- குளச்சல் ஆசிம், 1-15 ஏப்ரல், 2024




ஜெர்மன் வரலாற்றில் முதல் முறையாக ரமளான் மாதம் முழுவதும் அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

RAMADAN TARHIB என்ற அறிவிப்புடன் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரின் மத்தியிலுள்ள பிரதான வீதி இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு வீதி முழுவதும் சமாதான வார்த்தைகளுடன் கூடிய பதாகைகள், அலங்கார விளக்குகள், HAPPY RAMADAN என்று ஒளிரும் ஸ்டிக்கர்கள் தொங்க விடப்பட்டுள்ளன. ரமளான் மாதம் முழுவதும் அந்த வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உணவு விற்பனை ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டு இலட்சம் மக்கள் தொகை கொண்ட பிராங்க்பர்ட் நகரில் வசிக்கும் பத்து விழுக்காட்டு முஸ்லிம்கள் ரமளான் நோன்பிருக்கும் நேரத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ள சிட்டி கவுன்சில் சேர்மன் ஹைலம் அர்ஸ் லேனர் இதற்காக பிராங்க்பர்ட் நகர நிர்வாகம் 75000 யூரோ ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஃபலஸ்தீன பிரதேசம் போர்ப் பதட்டங்களை எதிர்கொள்ளும் வேளையில் இனவெறி, இனப் பாகுபாடு, மதவெறிக்கு எதிராக ஜெர்மன் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ரமளான் தர்ஹீப் அமைந்துள்ளது என்று பிராங்க்பர்ட் சிட்டி மேயர் நர்கஸ் எஸ்கன்தரி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்