மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

திசை : கொள்கைப் பற்றாளர்கள்
- மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்), ஏப்ரல் 16-30, 2024

கொள்கைப் பற்றாளர்கள்

- மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இஸ்லாம் மட்டுமல்ல, உலகில் எந்த நெறியானாலும் சரி, எந்தத் தத்துவமானாலும் சரி, அதனைப் பின்பற்றுபவர்கள் வாய்மையாக அந்தக் கொள்கைகளைத் தம் வாழ்வு முழுவதிலும் கடைப்பிடிக்கும்போதுதான் அவை மேலோங்குகின்றன. அதற்கு மாறாக, ‘இந்தக் கொள்கைகள் வாழ்வின் ஒரு துறைக்காக மட்டும் தான்; மற்றபடி வாழ்வதும் மடிவதும் மற்றொரு கொள்கைக்காக’ என்ற ரீதியில் அக்கொள்கைகள் பின்பற்றப்பட்டால் அது எப்பொழுதுமே வெற்றிநடை போடுவதில்லை.

தன் உயிர், உடல், உடைமைகள் அனைத்தையும் கொண்டு ஒரு கொள்கையைப் பின்பற்றுபவர்கள்தான் வெற்றிநடை போடுகிறார்கள். அவர்கள் தம்முடைய முழு ஆளுமையையும் அந்தக் கொள்கையில் கரைத்து விடுகிறார்கள். தம்முடைய எந்தப் பொருளையும் அது தனது உயிரானாலும் சரி, குழந்தைகளானாலும் சரி தாம் மேற்கொண்ட கொள்கைகளுக்கெதிராக அவை அதிகப் பிரியமானதாக இருப்பதில்லை.

உலகில் ஒவ்வொரு நெறியும் இத்தகைய வாய்மையானவர்களைத்தான் வேண்டுகிறது. அத்தகைய பண்பு நலன் உடையவர் எந்த நெறிக்குக் கிடைக்கிறாரோ அந்த நெறியின் வெற்றிக் கொடிதான் உலகில் பறக்கிறது!

- இஸ்லாம் வகுக்கும் வாழ்க்கை வழி நூலிலிருந்து..


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்