மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

எஸ்.என். சிக்கந்தருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காயிதேமில்லத் பிறை விருது
, ஜூன் 16-30விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2007ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர், பெரியார், காமராசர், அயோத்திதாசர், காயிதேமில்லத், மார்க்ஸ் பெயரால் பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அத்துடன் செம்மொழி ஞாயிறு விருதையும் வழங்கி வருகிறது. இந்த விருதுடன் பாராட்டுப் பட்டயம், நினைவுக் கேடயம், 50,000 ரூபாய் பொற்கிழியும் வழங்கப்படுகின்றன.

முன்னாள் தமிழ்நாடு முதலைமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெ.நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட 99 ஆளுமைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் S.N.சிக்கந்தர் அவர்களின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக 2024ஆம் ஆண்டிற்கான காயிதேமில்லத் பிறை விருதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2024 மே 25ஆம் நாள் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் வழங்கியது.

2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருது திரைப்படக் கலைஞர் பிரகாஷ் ராஜுக்கும், பெரியார் ஒளி விருது திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கும், காமராசர் கதிர் விருது இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கும், மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர் ராஜ் கௌதமனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது கல்வெட்டியலறிஞர் சுப்பராயலுவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிச் சிறப்பித்தது.

விளிம்பு நிலை மக்களுக்காகப் பாடுபடும் தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப்படுத்தும் விதமாக பலதுறைகளில் மிளிரும் ஆளுமைகளை ஊக்கப்படுத்தி, கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.

விருதுகள் பெற்ற ஆளுமைகள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறது சமரசம். வாழ்த்துகள்..!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்