மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஓர் ஆலிம் எம்.பி ஆகிறார்
- குளச்சல் ஆசிம், ஜூன் 16-30உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வளர்த்து வந்த வெறுப்புப் பரப்புரையையும், பழிவாங்கும் அரசியலுக்கும் தேர்தல் முடிவுகள் சரியான பேரடியைக் கொடுத்திருக்கிறது. உ.பியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இருவரின் வெற்றி தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

மௌலானா முஹிப்புல்லாஹ் நத்வி, உ.பி ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகர் டெல்லி நாடாளுமன்றம் அருகிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் தலைமை இமாமாக வெள்ளி மேடைகளில் முழங்கிய குரல் இனி நாடாளுமன்ற அவைக்குள் சமூக தீமைகளுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஒலிக்கப் போகிறது.

இளவயது எம்.பி

மேற்கு உத்திரப்பிரதேச பூர்வாஞ்சல் பகுதியில் கைரானா தொகுதியில் பாஜகவின் பலம் வாய்ந்த வேட்பாளரைத் தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் இக்ரா ஹாசன். 27 வயதான இக்ரா ஹாசன் 18ஆவது நாடாளுமன்ற அவையில் மிகவும் இளைய உறுப்பினர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 2014 வரை கைரானாதொகுதியில் இவரது குடும்பத்தினரே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக வெற்றி பெற்றது.

முதல்வர் யோகி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தாயார் தபஸ்ஸும் ஹஸனும், சட்டமன்ற உறுப்பினரான சகோதரர் நாஹித் ஹஸனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலண்டனில் சர்வதேசச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இக்ரா ஹாசன் 2022ஆம் ஆண்டு தாயகம் திரும்பி யோகி ஆதித்யநாத் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டதோடு தற்போது தங்கள் மூதாதையர் இழந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் வாழ்த்துகள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்