மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்அரசியல்பொருளாதாரம்பெண்ணுலகம்

ஒருபால் உறவு - சமகாலச் சவால்கள், பிரச்னைகள், தீர்வுகள்
-Dr. M.M. ஸலாஹுத்தீன் MBBS., M.CH, செப்டம்பர் 1-15, 2024


 இந்தியப் பொதுவெளியில் ஒருபால் உறவு(Homosexuality) குறித்த சர்ச்சைகளும், சார்பு, எதிர்நிலைகளும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 377 சார்ந்து நடந்த உச்சநீதிமன்ற வழக்கோடு நிலைபெறத் தொடங்கின. எந்த ஒரு நிலைப்பாட்டிலும் சாதாரண மனிதனின் வாழ்வு எவ்வாறு தொடர்புபட்டுள்ளது, அதன் விளைவுகள் என்ன என்பது முக்கியமானது. சாதாரண மனிதன் இன்று ஒருபால் உறவு குறித்து தனக்குத் தொடர்பில்லாதது எனக் கடந்து விட முடியாது. அது குறித்த தெளிவான ஒரு கண்ணோட்டம் மிகவும் அவசியமாகி விட்டது.

கில்பர்ட் ஹெர்ட் எனும் பிரபல ஆய்வாளர் தன்னுடைய நூலில், ஒருபால் உறவு குறித்து இவ்வாறு பதிவு செய்கிறார். ‘சமகால அமெரிக்காவில் ஒருபால் உறவு என்பது புதுவிதமான நடைமுறையாக இன்று மாறிவிட்டது. அது ஒரு பாலியல் அணுகுதல் (Sexual Orientation). ஒரு சமூக அடையாளம் (Social Identity), ஓர் அரசியல் இயக்கம்(Political Movement) ஆகியவற்றின் கூட்டமைப்பாக மாறிவிட்டது’.

இன்று பொதுவெளிகளில் நாம் காணும் ஒருபால் உறவின் சார்பு நிலையின் வெளிப்பாடுகளை இந்தப் புரிதலோடு அணுக வேண்டும் என்பது முக்கியமானது. LGB எனத் தொடங்கி LGBT என விரிந்து பின் இன்று  LGBTQIA+ என பரந்து வளர்ந்து நிற்கும் வானவில் கூட்டமைப்பு, அடையாளத்தில் தம்மை ஒன்றாகக் காட்டிக் கொண்டாலும், பல்வேறுபட்ட பாலியல் நடைமுறைகளை(Sexual Practice) கொண்ட வேறுபட்ட குழுவினரின் கூட்டமைப்பு என்பது பலருக்குத் தெரியாது. ஏன்? அவர்கள் சார்பாகப் பொதுவெளிகளில் வாதிடும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப்படுபவர்களுக்கே பெரும்பாலும் தெரியாது.  LGBTQIA+இல் உள்ள எழுத்துகள் யாரைக் குறிக்கிறது என கீழே விளக்குகிறேன். நான் சொல்வதன் பொருள் வாசகர்களுக்குப் புரிந்து விடும்.

Lesbian - பெண்ணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்பவர்கள்.

Gay- ஆணும் ஆணும் பாலியல் உறவு கொள்பவர்கள்.

Bisexual-  ஆண்கள் பெண்கள் என இரு சாராரிடமும் பாலியல் உறவு கொள்பவர்கள்.

Transgenders -  இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். திருநங்கை, திருநம்பி என அறியப்படும் இவர்கள் உளரீதியாக, மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட சாத்தியமிருக்கிறது. இவர்கள் ஆணாகவோ பெண்ணாகவே பிறந்தவர்கள். உளவியல் காரணங்களால் அல்லது சூழல் காரணங்களால் தங்கள் பாலினத்தை முழு விருப்பத்துக்கு மாற்றிக் கொண்டவர்கள்.

உளக் கூறுகளால் பாதிப்புக்கு உள்ளான இந்தக் குழுவினர் வாய்ப்புக்கேடாக சமூகத்தால் ஒடுக்கப்படவும், ஒதுக்கப்படவும் செய்யப்பட்ட போது அதனை மிகப் பெரும் அரசியல் வாய்ப்பாகவும், தமது கூட்டமைப்பின் செயற்பாட்டிற்கும், தாம் கோரும் சர்வ பாலியல் உறவு சார்ந்த சுதந்திரத்திற்கும் நியாயம் கற்பிக்கும் காரணியாகவும் வானவில் கூட்டமைப்பினர் ஆக்கிக் கொண்டனர்.

InterSex(இடைபாலினர்) -  இவர்கள் மரபணு  இடணூணிட்ணிண்ணிட்ஞு அல்லது ஹார்மோன் கோளாறுடன் பிறந்தவர்கள். இவர்களின் வெளித்தோற்ற பாலியல் உறுப்பைக் கொண்டு இவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ  அடையாளப்படுத்தப்படுகின்றனர். (உண்மையில் இவர்கள் திருநங்கை திருநம்பி என்று தங்களை அழைத்துக் கொள்வதை விரும்பவில்லை).

Queer (or) Questioning - விந்தையானவர்கள், ஆபத்துக்குள்ளானவர்கள் (புதுப்பாலினர்) தன்னைக் குறித்தும் பிறரைக் குறித்தும் அஞ்சுபவர் என்ற பொருளில் அறியப்படுபவர்கள். தனது பாலியல்  நடைமுறைகளைத் தொடர்ந்து கேள்வி கேட்பவர்களாகவும், தொடர்ந்து பரிசீலித்து வருபவர்களாகவும் இவர்கள் குறித்து கூறப்படுகிறது.

Asexuals-   தன்னைக் குறித்தோ, பிறர் (ஆண் அல்லது பெண்) குறித்தோ பாலியல் கவர்ச்சிக்கு உள்ளாகதவர்கள்.

+(Plus) -  இதுவல்லாத எந்த மாற்று பாலியல் நடைமுறை கொண்டவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது.

இவர்களில் நாம் பொதுவாகக் காணும் அம்சம் இயல்பான இயற்கை சார்ந்த ஆண், பெண் பாலுறவு தவிர அனைத்து விதமான மாற்று பாலியல் நடைமுறைகளையும் பின் பற்றுவதாகும். இதில் திருநங்கை, திருநம்பி எனப்படும் Transgenders பிரிவுகளைத் தவிர மற்ற எல்லோரும் தமது பாலியல் அணுகுமுறை என்று சொல்லும் பொது வழக்கிலான பாலியல் பழக்கத்திற்கு உயிரியல் சார்ந்த அல்லது உயிர் வேதியல் சார்ந்த(Bio Chemical) அல்லது மரபணு(genetic) சார்ந்த எந்த விஞ்ஞானக் காரணத்தையும் சான்றுகளோடு முன்வைக்க முடியாது. உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் இவர்கள் ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள். சூழலில் விளைந்த பழக்கத்திற்கு, ஈர்ப்பிற்கு பாலியல் அணுகுதல் என நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள். சிகரெட், மது, போதை மருந்து போன்ற ஒரு பழக்கம் சார்ந்த தேர்வு இது அல்லாது, தனது இயல்பே இவ்வாறு எனக் கருதச் செய்வதிலேயே இவர்களது வளர்ச்சியும் வெற்றியும் இருக்கிறது. சூழலால் விளைந்த பழக்கத்தையும், பாலியல் பிறழ்வினையும், பாலியல் மாற்று அணுகுதலாகவும், இயல்பானதாகவும் காட்டும் இந்த அரசியல் முயற்சி 1973ஆம் ஆண்டு American Psychiatric Association  மாநாட்டில் உளவியல் நிபுணர்களை  எதிர்கொண்டதிலிருந்து தொடங்கி இன்று சென்னை போன்ற மரபுகளைப் பேணும் பெருநகரங்களிலும் வானவில் கூட்டமைப்பின் ஊர்வலங்கள் வரை வளர்ந்திருக்கிறது. ஒருவருடைய பாலியல் உறவு தேர்வு அல்லது பாலியல் முறைமை எல்லாம் தனிமனித சுதந்திரம்தானே.

இதில் கலாச்சாரமோ, மதமோ, அரசாங்கமோ தலையிட வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.அடிப்படையாக ஒருபால் உறவு, அந்த உறவில் ஈடுபடுபவர்களுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பானது இல்லை என்பதைத் தாண்டி, ஒருபால் உறவினர் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த சவால்களை அன்றாடம் சந்திக்கிறார்கள் என்பதே உண்மை. இனம் புரியாத பயம், ஒருபால் உறவு முறை குறித்த சுய அச்சம் எனத் தொடர்ந்து மனஉளைச்சலுக்கு இவர்கள் உள்ளாகிறார்கள். மதுப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் ஆகியவை இவர்களிடம் மிக அதிகம். ஒருபால் உறவினர்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் விகிதம் பொதுமக்களை விட மிக அதிகம்.

எய்ட்ஸ்(Aids) நோய்க்கிருமி தாக்குதலும் (HIV Infection) அதன் பாதிப்பும், பரவலும் இவர்கள் மத்தியில் மிக அதிகம். பாலியல் சார்ந்த நோய்கள், பெண் உறுப்பு வீக்கம், மலவாய் வீக்கம் ஆகிய நோய்களும் மலவாய் புற்றுநோய் வரும் சாத்தியமும் அதிகம். எய்ட்ஸ் நோய் பாதிப்பு இவர்கள் மத்தியில் எந்த அளவு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள  BBC News தமிழில் வெளிவந்த இந்தப் பதிவு போதுமானது. ‘பாலியல் ரீதியாக தீவிரமாகச் செயல்படும் ஒருபால் உறவு ஆண்கள் இரத்ததானம் செய்வதைத் தடை விதிப்பது நியாயப்படுத்தக் கூடியது தான் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’. (29/04/2015)

2017ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய இரத்ததானம் சார்ந்த National Blood Transfiction Council(NBTC), National AIDS Control Organisation(NACO) கூட்டு அறிவுறுத்தலின் பேரில் ஒருபால் உறவில் ஈடுபடும் குழுவினர் HIV / AIDS, Hepatitis B, Hepatitis C  தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் அவர்களிடம் இரத்ததானம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

தீர்வு

தனிமனித நலன், பொது நலன், நல்லொழுக்கம், நல்லறம் என்று எந்த நோக்கில் பார்த்தாலும் ஒருபால் உறவு நியாயப்படுத்த இயலாததாகவே இருக்கிறது. ஆண், பெண் இருவரும் திருமண உறவில் சங்கமிப்பது அவர்களது வாழ்விற்கு முழுமையையும் நிறைவையும் தருவதால் கொண்டாடப்படுகிறது. இதுதான் மனிதகுல வரலாறு. இயற்கையும் இதைத்தான் போதிக்கின்றது. யானைகள் குடும்பமோ, சிங்கங்கள் குழுமமோ, ஏன் காட்டு நாய்களோ கூட ஒருபால் உறவிலோ, உற்ற உறவுகளான தாயிடமோ, உடன்பிறப்புடனோ, பல நேரங்களில் பிறர் ஜோடியுடனோ பாலியல் உறவில் ஈடுபடுவதில்லை என்பதே இயற்கை தரும் பாடம்.

ஒருபால் உறவினர் தாமும் துன்பத்துக்கு ஆளாகி, தனது குடும்பத்தையும், துன்பத்துக்கு உள்ளாக்குவதோடு சமூக அமைப்பையும் சீர்குலைக்கிறார்கள் என்பதே யதார்த்தம். இந்தப் பிரச்னையை சமூக அளவில் பரிவோடு அணுக வேண்டும். எல்லாம் இயல்பானது எனக் கடந்து போக நினைப்பது பெரும் விளைவுகளுக்கு நாளைய சமூகத்தை உள்ளாக்கும். மாற்றுப் பாலியல் அணுகுதல் இயற்கைக்கு முரணானது; தனிநபர் நலனுக்கும், சமூக நலனுக்கும் எதிரானது என்பதை உணர்தல் அடிப்படையானது. சிகரெட், போதைப் பொருள் பழக்கம் போன்ற ஒரு பழக்கமே இது எனப் புரிந்து கொண்டு இது இயல்பானது என ஒதுங்கி விடாமல் பாதிக்கப்பட்டவரை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அரவணைத்து அவர் வாழ்வை மறு சீரமைப்பு செய்வதே இதற்கான தீர்வாக அமையும்.

பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் குறிப்பாக பெரும் சமூக அரவணைப்பு வேண்டுபவர்கள் திருநங்கை, திருநம்பி, கலப்பு பாலினர் எனப்படும் Transgender , Intersexuals  உள்ளபடியே பெரும் சமூகப் புரிதலும், சமூகத்தின் அங்கத்தினர் என்ற அங்கீகாரமும் பெற வேண்டியவர்கள், ஏற்கனவே அரசாங்கம் ஓரிரு முன்னெடுப்புகளைச் செய் துள்ள போதும், பொதுச் சமூகமும் அரசாங் கமும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான வாழ் வியல் மேம்பாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர்களது தனிமனித, கூட்டு வாழ் வைச் சீர் செய்யவும் முன்வர வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்