மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

இணையமும் சுதந்திரமும்
- A.R. கமருன்னிசா ஜாஃபர் அலீ, செப்டம்பர் 1-15, 2024


 


Like, comment, subscribe கிடைக்கும் என எண்ணி நம்மில் பலர் களமிறங்கினாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான். பிறர் தம்மைப் பார்த்து நீங்க அழகா இருக்கீங்க உங்கள் மிமிக்ரி, Dubmash அழகா இருக்கு என்று சொல்வதற்காகப் பெண்கள் தங்களைத் தாங்களே காட்சிப்பொருளாக்கி இணைய உலகில் வலம் வரும் நிலை கூடிக் கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள், பெண் கடத்தல், கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறுதல், கூட்டு வன்புணர்வுப் படுகொலை, ஒருபால் உறவு என தீமைகள் புயலாய் வீசிக் கொண்டிருக்கிறது.


சுதந்திரம் எனது பிறப்புரிமை, பெண்ணுரிமை என முழங்கிக் கொண்டே தெளிவான நேரான வழியை விடுத்து தீயவழியைத் தேர்ந்தெடுத்து
அதில் தங்களை அறிவு ஜீவிகளாக எண்ணிப் பயணித்து மானம் இழக்கின்றனர். கட்டுப்பாட்டுடன் வாழ்வதே சுதந்திரம் என்பதை மறந்து பயணிக்கின்றனர்.
தன்னைத் தானே கட்டுப்படுத்தி ஒழுக்க வாழ்வைப் பெற முடியாத மனிதன் வேறு எங்கும் நன்மையை அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே! ஆதலால் தான் ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் உயர்வானதாகப் போற்றப்படுகிறது’.

தீமைகள் பலவிதம்

சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புக் கேட்கும் பெண்களை அனுபவிக்க அழைக்கும் ஈனத்தனம் நிலவுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ய்metoo என்ற அடிக் குறிப்புடன் நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


இந்தத் தீமையிலிருந்து ஒருவரை ஒருவர் பாதுகாப்பது ஆண் பெண் இருவர் மீதும் கடமையாக இருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளரும் பாதுகாவலரும் ஆவர். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பில் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி வினவப்படுவீர்கள். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். மனைவி தன் கற்பு, கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில்  ஒப்படைக்கப்பட்டவற்றைப் பற்றி விசாரிக்கப்படும். சுயநலம், புகழ் வெறி அளவுகடந்த பணமோகம் ஆகியவற்றால் பெண்களில் சிலர் விளம்பர போதையில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்
வெட்க உணர்வு என்பது இறைநம்பிக்கையின் அளவுகோல் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈமானும் வெட்கமும் ஒருவருக்கொருவர் தோழர்களே! ஒன்று போய்விட்டால் அடுத்தது இருக்கவே முடியாது.

அல்லாஹ் ஒரு மனிதனை அழிக்க நாடினால் அந்த மனிதரிடமிருந்து வெட்கத்தை எடுத்து விடுகின்றான். வெட்கத்தை இழந்துவிட்ட மனிதன் வெறுக்கத்தக்க மனிதனாகி விடுகிறான். அவன் நம்பகத்தன்மையும் நேர்மையும் இழந்து விட்டான் என்றால் அவன் ஏமாற்றுக்காரன் ஆகிவிடுகிறான். அல்லாஹ்வின் அருள் அவனிடம் இருந்து பறிக்கப்பட்டு விடுகிறது அவன் மிகவும் கேவலமான சாபத்துக்குரியவன் ஆகிவிடுகின்றான். இணையதள பயன்பாட்டினால் எழும் மனநலப் பிரச்னைகள் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடல்நலப் பிரச்னைகள், எதிர்மறைச் சிந்தனை, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குப் பெண்கள் உள்ளாகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் அலைப்பேசியைப் பயன்படுத்துவதால் வாழ்க்கையில் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் குறைகிறது.


இஸ்லாமும் சுதந்திரமும்


இஸ்லாம் பெண்களுக்குத் திருமணம், சொத்துரிமை என அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு, அவர்களைச் சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறது. சுதந்திரத்தின் கடிவாளம் ஒழுக்கமே ஆகும். உண்மையான அறிவின் நிலைப்பாடு என்பது ஏக இறைவனால் வழங்கப்பட்ட கேட்கும் திறன், பார்வைத் திறன், பேச்சுத் திறன் போன்ற அனைத்து அருட்கொடைகளையும் இறைவழியில் செலவிடுவதாகும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற இறைக் கட்டளைகளைப் பேணுவதைப் போல தங்கள் நடை, உடை, பாவனை, பேச்சு, பார்வை, செயல் போன்றவற்றிலும் இறைக் கட்டளைகளைப் பேண வேண்டும். அதைப் பற்றிய அறிவும் தெளிவும் உடையவர்களாகத் திகழ வேண்டும்.

தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் இறைக் கட்டளையை அலட்சியப்படுத்தியதால் இன்று பல குடும்பங்கள் இறை வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஒரு பெண்ணுக்கு ஆடையில் மட்டுமல்ல ஹிஜாப்! அவளுடைய பேச்சு, பார்வை, நடை, செயல் அனைத்திலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பது இறைக் கட்டளை. அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களும் எனது தந்தை அபூபக்கர்(ரலி) அவர்களும் மரணித்து என்னுடைய வீட்டில் அடக்கம் செய்யப்பட்ட போது அந்த அறைக்குள் நான் போர்த்திக் கொள்ளாமல் செல்வேன். ஆனால் அதே இடத்தில் உமர்(ரலி) அவர்கள் அடக்கம் செய்த பிறகு அந்த அறைக்குள் நான் போர்த்திக் கொள்ளாமல் செல்வதில்லை’.

உம்மு ஜுபைர்(ரலி) வலிப்பு நோயின் காரணமாகத் தன் உணர்வு இல்லாத போது தன்னுடைய துணி கரண்டைக் காலுக்கு மேல் உயர்ந்து விடுகிறது. அதற்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். அந்தப் பெண்மணி சுவனத்துக்குரியவள் என நபிகளார் கூறினார்கள். இந்தப் பண்புகளைப் பின்பற்றி வாழ்ந்தால் ஈருலக வெற்றியை அடைய முடியும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்