அரை நூற்றாண்டுகள் முன்பு நாங்க ஒன்னாங்கிளாஸ் படிக்கும்போது தினம் தினம் பள்ளிக்குச் செல்வதற்கு சேமியா ஐஸ் மீது கொண்ட விருப்பும் ஒரு காரணம் எனலாம்.
ஆரஞ்சு ஐஸ், பால் ஐஸ் என்று கலர் கலராக பலவிதமான ஐஸ் இருந்தாலும் அந்த வகைகளின் வரிசையில் சேமியா ஐஸ் மிகச் சிறப்பு. எலந்தப் பழம், எலந்த வடை, குச்சி குத்திய உருளைக் கிழங்கு, கடலை மிட்டாய், பொரி உருண்டை எல்லாம் சேர்ந்து தின்போம்.
பள்ளிக்குப் போகும் வரும் வழியில் புளியங்காய், புளியம்பழம், இலுப்பைப்பழம், நுணாப்பழம் எல்லாம் பொறுக்கித் தின்போம். பண்டிகைக் கால பலகாரம் எல்லாம் பைக்குள்ளே வைப்போம்.
வகுப்பு நடக்கும் போதே வாத்தியாருக்குத் தெரியாம எடுத்துகூட்டாளிக்கும் தந்து தின்போம்.
விடுமுறைக் காலமெல்லாம் நொங்கு வண்டி, பாண்டி ஆட்டம், சைக்கிள் டயர் வண்டி, பம்பரம், கோலி அடிச்சும் விளையாடுவோம்! பச்சைக் குதிரை, சாக்கு மூட்டை, கண்ணாமூச்சி விளை யாட்டுன்னு விதவிதமாய், வகை வகையாய் மன மகிழ்வாய் விளையாடுவோம்.நீங்களும் இதுபோன்று மகிழ்வாய் விளையாட வீதிக்கு வரவேண்டும். விளையாடுங்கள். மகிழ்ந்திருங்கள்.!