மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

படுகொலைகளைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதிக்கவில்லை
ஹமாஸின் அரசியல் குழு உறுப்பினர் டாக்டர் பாஸிம் நயீம், 1-15 பிப்ரவரி 2025


படுகொலைகளைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதிக்கவில்லை

- ஹமாஸின் அரசியல் குழு உறுப்பினர் டாக்டர் பாஸிம் நயீம் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்



தற்போது கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கத்தார் பிரதமர் கூறுகையில் டிசம்பர் 2023இல் கத்தாரால் முன்மொழியப்பட்ட கட்டமைப்பின் அடிப்படை யிலேயே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் மே 2024இல் முன் மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது எனக் கூறியிருந்தார். அப்பொழுது முன்மொழியப்பட்டதில் இருந்து இப்பொழுது என்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது?

நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் முதலாவது பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, இடிபாடுகளை ஏற்படுத்தி காஸா மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, மருந்துப் பொருள்களை நிறுத்தியதன் மூலம் பட்டினி, பஞ்சத்தை ஏற்படுத்தியதைத் தவிர நெதன்யாகுவால் அவர் நினைத்த எந்த இலக்கையும் அடைய முடியவில்லை. இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இது மட்டுமின்றி அவருக்கு உள்ளிருந்தே நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்தன. அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பிலும் கூட 80% இஸ்ரேலிய மக்கள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். இதில் பெரும்பாலானோர் வலதுசாரிச் சிந்தனையாளர்கள்.

அமெரிக்க அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் கூட இதற்கு ஒரு காரணம் என நான் நினைக்கிறேன். இரண்டு நிர்வாகத்தின் அணுகுமுறைகளும் வேறாக இருக்கிறது. நெதன்யாகுவால் நடத்தப்பட்ட வற்புறுத்திய இடப்பெயர்ச்சி, இனப்படுகொலை பற்றி நன்றாகவே அறிந்திருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதை நிறுத்த எந்த ஒரு தீவிர அழுத்தமும் தரவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் பைடனும் அவரின் அரசாங்கமும் இதில் உடந்தைதான்.


இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு போர்க் கைதிகளின் குடும்பத்தினருடன் பேசுகையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இரண்டாம் கட்டப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை முழுமையாக முடியும் எனக் கூறியிருந்தார். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இஸ்ரேலியர்கள் இடத்திலிருந்து என்னால் எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. டிரம்ப் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்குச் சில கவலைகள் உள்ளது. என்னதான் டிரம்ப் போர் நிறுத்தத்திற்காக அழுத்தம் தந்திருந்தாலும், அவரின் பதவியேற்பு விழாவிற்கு முன்னரே போர் நிறுத்த ஒப்பந்தம் வர வேண்டுமெனக் கூறி இருந்தாலும், மேற்குக் கரையைப் பொறுத்தவரையில் அவரிடம் மிக ஆபத்தான திட்டங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. மேற்குக்கரையில் உள்ள ஃபலஸ்தீன நிலத்தைக் கையகப்படுத்துவதும் அதில் இஸ்ரேலிய இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காகவும், பிற அரபு நாடுகளுடன் இயல்புநிலை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான கதவுகளைத் திறக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது.


போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் போரை நிறுத்துவது குறித்து நீங்கள் தொடர்ந்து பேசி வருகின்றீர்கள். ஆனால் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அல்லது போர் நிறுத்தத்திற்கான முக்கிய நிபந்தனைகளை மாற்றுவதாகவும் இதனால் தான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைபெறவில்லை எனவும் இஸ்ரேல் கூறுகின்றதே..!

கடந்த ஆண்டு மே 27 அன்றே முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இதைச் செயல்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகத் தான் இருந்தோம். எங்களின் இந்த 5 கோரிக்கைகள் இருக்கு மானால் நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம்.

அவை:

1. நிரந்தரப் போர் நிறுத்தம்.

2. காஸாவில் இருந்து மொத்த இஸ்ரேலிய இராணுவத்தையும் திரும்பப் பெறுதல்.

3. இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதித்தல்.

4. எந்த ஒரு தடையும், நிபந்தனையும் இன்றி உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்ல எல்லைகளைத் திறக்க அனுமதித்தல்.

5. கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளுதல். இவை அனைத்தும் இப்போதைய போர் நிறுத்தத்தில் இடம் பெற்றுள்ளது.


இஸ்ரேல் முதல் கட்ட போர் நிறுத்தத்தைக் கடந்தும் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்யும் என உங்களிடம் ஏதாவது உத்தரவாதம் கொடுத்துள்ளதா..!

இதைத்தான் நாங்கள் முதல் நாளிலிருந்து பேசி வருகிறோம். என்னதான் இந்த ஒப்பந்தம் 3 கட்டங்களாக ஒவ்வொன்றும் 42 நாள்கள் இருந்தாலும் கூட எங்களைப் பொறுத்தவரை இது ஒரே தொகுப்பு தான். அதன் இறுதியில் நாங்கள் கூறியது போல 5 நிபந்தனைகளும் நிறைவேற வேண்டும். மத்தியஸ்தர்கள் இதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். இவை அனைத்தும் ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போதே இரு தரப்பினரும் ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முதல் இறுதிக் கட்டம் வரை நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பேசப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த ஒப்பந்தம் ஐநா பாது காப்பு சபை மூலமாக சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என நம்புகிறேன். இது இந்த ஒப்பந்தத்திற்கு வலுச் சேர்க்கும். நெதன்யாகுவால் படுகொலைகளையும் இடிபாடுகளையும் தவிர வேற எதையும் சாதிக்க முடியவில்லை. அவருக்கு உள்ளிருந்து ஏற்படக்கூடிய அழுத்தங்களால் அவர் மீண்டும் போர் செய்ய விரும்பமாட்டார்.


அக்டோபர் 7 தாக்குதலால் பல உயிரிழப்பையும் சேதங்களையும் சந்தித்த காஸா மக்கள் மிகுந்த கோபத்துடன் இந்தத் தாக்குதலை ஒரு தவறான கணக்கீடு எனச் சொல்லுகின்றனர். சரிதானா?

ஃபலஸ்தீனில் உள்ள அனைத்துக் குழுக்களும் ஒன்றாக அமர்ந்து அக்டோபர் 7 தாக்குதலின் நன்மைகள், தீமைகள், பின்விளைவுகள், இஸ்ரேலியத் தாக்குதலிற்குப் பின் நடந்தவை என அனைத்தையும் விவாதிப்போம். இவை அனைத்தையும் தாண்டி நாம் ஓர் உண்மையைஇங்கே பேச வேண்டி உள்ளது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இந்த ஆக்கிரமிப்பிற்குக் கீழ் வாழ்ந்து வருகிறோம். முற்றுகையில் இருந்து விடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து விட்டோம். நாங்களும் தொடர்ச்சியாக மேற்குக்கரையிலும் ஜெருசலத்திலும் நடந்து கொண்டிருப்பதைக் கவனித்து வருகிறோம். அவர்கள் அல் அக்ஸா பள்ளியின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இங்கு நடப்பதை நம்மால் அமைதி, போருடன் ஒப்பிட முடியாது. ஃபலஸ்தீனர்களுக்கு இரண்டு தேர்வுகளே உள்ளன. ஒன்று ‘சத்தம் இன்றி அமைதியாகப் பலியாவது அல்லது அமெரிக்க இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துச் சண்டை செய்து உயிரை விடுவது’. ஃபஸ்தீனர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கூட அமைதியான செழிப்பான வாழ்வை வாழ முடிவதில்லை.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மேற்குக் கரைøயப் பாருங்கள்! எந்த அக்டோபர் 7 தாக்குதலும் நடத்தப்படவில்லை ஹமாஸும் இல்லை. இருந்தும் கூட பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள். அனைத்து நகரங்களும் கிராமங்களும் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. ஜெருசலம் யூதமயமாக்கப்படுகிறது. அங்கு உள்ள ஃபலஸ்தீனர்கள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். தினம் தினம் அல் அக்ஸா பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மட்டுமன்றி பள்ளிவாசலின் தற்போதைய நிலையை மாற்றுவதற்காக தீவிர வலது சாரி இஸ்ரேலியர்கள் மிக ஆபத்தான முயற்சியை எடுக்கின்றார்கள். இதுவரை இல்லாத அளவில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான யூதர்கள் அல் அக்ஸா பள்ளிவாசலை நோக்கிப் படையெடுத்து வந்து அவர்களின் கொடிகளை ஏற்றுகின்றனர், வணக்க வழிபாடு செய்கின்றனர். மட்டுமின்றி பொது வெளியில் பள்ளிவாசலை இடித்து அங்கே யூதக் கோயில் கட்டுவோம் என முழங்குகின்றனர்.

அக்டோபர் 7இல் நாங்கள் நடத்தியது ஒரு தற்காப்புத் தாக்குதல் தான். ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஒரு சுற்று தான். இது போல நூறாண்டு ஃபலஸ்தீன எதிர்ப்பு வரலாற்றில் சில ஆண்டுகள் ஹமாஸ் மூலமாக, 20, 30 ஆண்டுகள் ஃபத்தாஹ் மூலமாக, இதற்கு முன்னால் PFLP மூலமாக இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மொத்தத்தில் இஸ்ரேலிய ஆதிக்கத்தை எதிர்த்து நல்ல அடிமையாக, பலி ஆடாக இருப்பதை எதிர்த்தும் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டம் தான் இது.


முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவிற்குள் ஹமாஸ் இயக்கம் புகழ்பெற்றிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

ஓர் எதிர்ப்பு இயக்கமான நாங்கள் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போது (LIKE AND SUBSCRIPTION) புகழிற்காகச் செயல்பட முடியாது. மாறாக தேசிய விடுதலை, இறையாண்மை, கண்ணியம் ஆகியவற்றைத் தான் இலக்காக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2006இல் நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் பார்த்தோமேயானால் பெருவாரியான ஃபலஸ்தீன மக்களை ஹமாஸ் பிரதிநிதித் ஃபலஸ்தீனர்களுக்கு இரண்டு தேர்வுகளே உள்ளன. ஒன்று ‘சத்தம் இன்றி அமைதியாகப் பலியாவது அல்லது அமெரிக்க இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துச் சண்டை செய்து உயிரை விடுவது’. ஃபஸ்தீனர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கூட அமைதியான செழிப்பான வாழ்வை வாழ முடிவதில்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மேற்குக்கரையைப் பாருங்கள்! எந்த அக்டோபர் 7 தாக்குதலும் நடத்தப்பட வில்லை ஹமாஸும் இல்லை. இருந்தும் கூட பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

துவப்படுத்துகிறது. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு நல்ல எண்ணிக்கையில் ஆன மக்களின் பிரதிநிதிகளாக இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் பலமுøற கூறியது போல ஒரு வெளிப்படையான, நேர்மையான தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாரõக உள்ளோம். அதில் வரும் முடிவுகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.


கடந்த 15 மாதங்கள் நடைபெற்ற இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன? குறிப்பாக உங்கள் இராணுவத் தளவாடங்களில் ஏற்பட்ட இழப்புகள் என்ன?


நிச்சயமாக ஹமாஸிற்கு மிக ஆழமான பயங்கர பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. ஆம்! நாங்கள் நிறைய தலைவர்களையும், வீரர்களையும், ஆட்களையும், தளவாடங்களையும் இழந்துள்ளோம். ஆனால் மீண்டும் இது ஹமாஸ் பற்றியது அல்ல! இவை அனைத்தும் ஃபலஸ்தீனிய மக்களுக்கும், எதிர்ப்பு இயக்கத்திற்குமானது. ஹமாஸ் என்பது காஸாவில் மட்டும் சுருங்கிய ஒரு சிறிய இயக்கமல்ல. மாறாக மேற்குக்கரை உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் பரவி உள்ள மாபெரும் இயக்கம். நிச்சயமாக நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இது குறித்து ஆய்வு செய்து எங்கள் இயக்கத்தை மறு கட்டமைப்பு செய்வதற்கு முயற்சி செய்வோம். குறிப்பாக காஸாவில்!


முற்றுகையிடப்பட்ட காஸாவில் போரின் போது ஹமாஸ் ஆள்சேர்ப்பு நடத்தியதாகவும் இது ஹமாஸுக்குப் போரில் ஏற்பட்ட இழப்பை ஈடு கட்டிவிடும் என அமெரிக்க மாநிலங்களின் செயலாளர் பிளிங்கன் கூறியிருப்பதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஆம். ஆக்கிரமிப்புகள் இருக்கும் வரை ஹமாஸ் சண்டை போடும். கண்ணியமும் இறையாண்மையும் உடைய சுதந்திர ஃபலஸ்தீன் அமையும் வரை ஃபலஸ்தீன மக்களுக்காக ஹமாஸ் சண்டையிடும். நாங்கள் புதிய ஆள் சேர்ப்புக்கான முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இந்த மிகக்கடுமையான சூழலில் ஹமாஸுடன் சேர்ந்த மக்களே களத்தில் ஹமாஸுக்கு இருக்கும் ஆதரவை எதிரொலிக்கிறது.


இந்தப் போருக்கு பிறகு மத்திய கிழக்கின் வரைபடமே மாற்றப்பட்டு இருப்பதைக் குறித்து ஹமாஸின் நிலைப்பாடு என்ன?

ஹமாஸ் ஒரு தேசிய விடுதலை இயக்கம். எங்கள் இலக்கு என்பது ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு சுதந்திர ஃபலஸ்தீனை அமைப்பது தான். ஆதலால் எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் எங்களுக்கு எங்கள் இலக்கு முக்கியம், என்னதான் அது எங்களைப் பாதிக்கும் என்றாலும் எங்களின் இலக்கே எங்களுக்கு முதன்மையானதாக இருக்கிறது.


ஃபலஸ்தீன ஒற்றுமை, ஃபலஸ்தீனபிளவு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?


ஃபலஸ்தீன ஒற்றுமை என்பது நிபந்தனை அல்ல, கடமை. ஆனால் வேற்றுமையைக் களைந்து ஒற்றுமையை அடைந்து நல்லிணக்கம் பெற மாஸ்கோ, பெய்ஜிங்கில் நிறைய முறை சந்தித்து ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒற்றுமைக்கான ஒரு நல்ல தொடக்கமாக இதை நான் பார்க்கின்றேன். எங்களுக்கு மூன்று இலக்குகள் உள்ளன. முதலில் காஸாவில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்களை ஒருங்கிணைத்து ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுக்குள் மறு கட்டமைப்பு செய்து தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் வேண்டும். செய்ய இரண்டாவதாக காஸாவில் உள்ள பிரிவுகள் ஒன்றாக அமர்ந்து அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கஃOவில் சீர்திருத்தம் செய்வது குறித்தும் விவாதிப்போம். இதன் மூலம் வரும் காலங்களில் ஒட்டுமொத்த காஸா மக்களையும் PLO பிரதிநிதித்துவப் படுத்த உதவும். என்னதான் பொதுவாக PLOசட்டப்படியாக ஃபலஸ்தீனர்களைப் பிரதி நிதித்துவப்படுத்தி இருந்தாலும் உண்மையில் களத்தில் ஃபலஸ்தீனர்களில் ஒரு பகுதியினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எவ்வாறு PLOவை மறுசீரமைப்பு செய்வது, தற்காலிக ஃபலஸ்தீன தேசிய கூட்டுச் சபையை உருவாக்குவது என்பது குறித்து அடுத்த கட்ட நகர்வுகளை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். வாய்ப்புக்கேடாக இதுவரை மற்ற குழுக்களிடமிருந்து எதிர் மறை பதில்களே வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மறுக்கிறார்கள். எந்த அளவுக்கு எனில் போர் முடிந்தவுடன் காஸாவை சுதந்திரக் குழு வழிநடத்துவதைக் கூட மறுக்கின்றனர். இருப்பினும் நாங்கள் நல்ல முடிவுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

போருக்குப் பிறகு காஸாவை ஹமாஸ் ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என இஸ்ரேலிய அரசாங்கம் கூறியது மட்டுமின்றி காஸாவை ஆட்சி செய்ய ஃபலஸ்தீனியன் அத்தாரிட்டி(PLO) தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதற்குப் பின் காஸாவில் உங்களுக்கு என்ன பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

ஹமாஸைப் பொறுத்தவரையில் ஓர் அமைப்பாக நாங்கள் சமூகத்தில் உள்ளார்ந்து பின்னிப் பிணைந்து இருக்கின்றோம். பெருவாரியான ஃபலஸ்தீன மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். மட்டுமன்றி எதிர்ப்புப் போராட்டங்களைக் கடந்து சமூகப் பணிகள், கல்விப் பணிகள், மதம் சார்ந்த பணிகள் இன்னும் பல பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த அடிப்படையில் நாங்கள் காஸாவில் இருப்போம்.

இருக்கின்றோம், ஆனால் அரசாங்கத்தை வழி நடத்துவதைப் பொறுத்தமட்டில் அக்டோபர் 7க்கு பின்பு மட்டுமல்ல இதற்கு முன்னாலும் கூட ஒருங்கிணைந்த ஒற்றுமை அரசாங்கத்திடம் நாங்கள் ஏற்கனவே 2014, 2017இல் செய்தது போல் இதை ஒப்படைக்கத் தயாராகவே உள்ளோம். ஆனால் இதுவரை நடந்த அனைத்து முயற்சிகளிலும் எங்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்து உள்ளது.


ஹமாஸ், ஃபலஸ்தீனியன் அத்தாரிட்டி ஆகிய இரண்டு குழுக்களும் சேர்ந்து போருக்குப் பிறகு அரசாங்கத்தை வழிநடத்த சர்வதேச சமூகங்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று வழிகள் என்னதான் இருக்கின்றது? எதை நோக்கி காஸா சென்று கொண்டிருக்கின்றது? காஸாவில் அரசாங்கத்தை வழி நடத்துவது குறித்து உங்கள் பார்வை என்ன?

அண்மையில் நாங்கள் பரந்த குழுக்களுடன் சந்திப்பை நடத்தி இருந்தோம். அதில் பலதரப்பட்ட ஃபலஸ்தீனக் குழுக்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது மறுக்கப்பட்டால் எவ்வாறு நாம் ஒற்றுமையை அடையும் வரை அனைத்து ஃபலஸ்தீனர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தற்காலிகமான அரசாங்கத்தை வழி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. போர் நிறுத்தம் தொடங்கிய முதல் நாளிலிருந்து காஸாவில் எந்த அரசாங்கம் அமையும் என்ற குழப்பத்தில் விட முடியாது. எங்களுக்கு எங்கள் மக்கள் மீது பொறுப்பும் அக்கறையும் இருக்கின்றது. அனைத்து ஃபலஸ்தீனர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முன் மொழியப்பட்ட ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எங்களிடம் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கல்வித்துறை அமைச்சகம் என இன்னும் பல அமைச்சகங்கள் இருக்கின்றன. அதன் மூலம் நாங்கள் தொடர்ந்து எங்கள் பணிகளைச் செய்து கொண்டே இருப்போம்.

 

தொகுப்பு : ரியாஸ் மொய்தீன்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்