இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட கைவினைத் திறன் பற்றாக்குறையின் காரணமாக ஐகூஐ தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவை பள்ளி மாண வர்களுக்குத் தொழிற்கல்வியை வழங்குகின்றன. வேலையின்மைப் பிரச்னையை நீக்குவதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பணி செய்யும் திறனை மேம்படுத்துவது, புதிய தெழில்நுட்பங்களை மாணவர்களுக்கு வழங்கி வேலைக்குத் தயாராக்குவது, தொழிற்சாலைகளுக்குத் தேவையானவர்களை பயிற்றுவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். தனித்திறன்களை வளர்ப்பதன் மூலமாக சுயவேலை வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. கல்விக்கும் தொழிற்சாலைக்கும் பாலமாக இவை விளங்குகின்றன.
உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் பற்றாக்குறை, சிறந்த பயிற்சியாளர்கள் இன்மை, புதிய தொழில்நுட்பங்களைப் பாடமுறையில் கொண்டுவருவதில் தாமதம், போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியது, கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலையின் தேவைக்கும் உள்ள இடைவெளி, அரசு நிதி ஒதுக்குவதிலும் செலவு செய்வதிலும் உள்ள குறைபாடுகள் என பல பிரச்னைகள் ITIயில் உள்ளன.
இப்பொழுது என்.சி.வி.டி. எடுத்த முயற்சியால் புதிய தொழில் நுட்பங்களான AI, ட்ரோன் பயிற்சி போன்றவை ITIயில் சேர்க்கப்பட்டுள்ளன. 202425இல் 12,700 ஐகூஐகளின் தரம் 4 என்கிற குறியீட்டைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் 11,900 ஐகூஐ நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தரத்தில் இருந்தன.
ITI தரவரிசை
1. இந்தியாவில் முதல் இடத்தில் ஐகூஐ பானி பட்டில் உள்ள பெண்கள் தேசியப் பயிற்சி நிறுவனம் உள்ளது. சிறந்த பயிற்சியாளர்கள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், ஏர் கண்டிஷன் வசதி போன்றவை இதன் சிறப்புகளாகும். இதில் சேரவேண்டும் என்றால் ஏ.ஐ.சி.இ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்வை டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் டிரைனிங் நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ஒடிசாவிலுள்ள பார்பில் அரசு தொழில் பயிற்சி நிறுவனம். இது 1964இல் தொடங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
3. பஞ்சாபின் பனுரிலுள்ள அரசு தொழிற் சாலை பயிற்சி நிறுவனம். வேலைவாய்ப்பை மையப்படுத்திய தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குகிறது.
4. ஆந்திராவின் நெல்லூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனம். குறிப்பிடத்தக்க பிற முக்கியமான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உத்திரப்பிரதேசத்தின் சாம்பல்புரிலும், ஆந்திராவின் கர்நுலிலும் உள்ளன.
முன்பு கட்டுமானப் பணிகள், துணி தொழிற்சாலை, உணவு பானம் போன்ற தொழிற் தேவைகளைப் பூர்த்தி செய்தது. தற்பொழுது கணினி மென்பொருள் போன்ற சேவைத்துறைகளிலும் பயன்படுகிறது. காலத்திற்கேற்ற அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. குறைவான கல்வி கற்றவர்கள் வசதி குறைந்தவர்களுக்கான வாய்ப்புகள் இங்குள்ளன. எனினும் அரசு கொள்கை ரீதியான மாற்றங்களைச் செய்து உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி மாணவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் குலக்கல்வியின் மற்றொரு வடிவமாக ஐகூஐகள் மாறிவிடும் அபாயமுள்ளது. எனவே தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் சேவைத் துறைக்கேற்ற புதிய பாடத்திட்டங்ளைக் கொண்டு வர வேண்டும்.