மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

சிறுவர் உலகம்

பொறுமைக்குக் கிடைத்த பரிசு
நஷிஹா பின்த் இப்ராஹிம் அலீ, 10ஆம் வகுப்பு, தாருல் இல்ம் மகளிர் அரபிக் கல்லூரி, சேலம், June 16-30, 2025


அது ஓர் அழகிய கிராமம். எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த சூழல். ஆனால் திடீரென மழை இல்லாமல் போனதால் வறட்சியின் காலமானது. வறட்சியின் காரணமாக நெற்பயிறும் கருகியது. பசியும், பட்டினியும் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

ஊர் மக்கள் அந்த ஊர் தலைவரைச் சந்தித்து நாங்கள் பெரியவர்கள் பசியைத் தாங்கிக் கொள்வோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் பசி தாங்காமல் துடிப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. ஆதனால் நீங்கள் தான் எங்கள் பிள்ளைகளுக்காவது உணவு தர வேண்டும் என்று கோரினார்.

ஊர் தலைவரும் அதற்கு ஏற்பாடு செய்து தினமும் எல்லா பிள்ளைச் செல்வங்களுக்கும் பிரட் கிடைக்க ஏற்பாடு செய்தார். தினமும் காலையில் தன் வீட்டு வாசலில் கூடையில் பிரட்களை வைக்குமாறும், குழந்தைகளைக் கணக்கெடுத்துக் கூடவும், குறையவும் இல்லாமல் எல்லோருக்கும் கிடைக்குமாறு செய் என்று பணியாளரிடம் கூறினார்.

அதே போல் தினமும் காலையில் பிரட்டை கூடையில் வைத்து வீட்டு வாசலில் வைத்தார் பணியாள். அதைப் பார்த்ததும் எல்லாக் குழந்தைகளும் பசி தாங்காமல் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் கொள்ளலாயினர்.

ஆனால் அதில் 10 வயதாகிய ஹன்சா மட்டும் அனைவரும் எடுத்துக் கொண்ட பின் இறுதியாக தன் பங்கினை எடுத்துக் கொள்வாள். ஹன்சா தினமும் பொறுமையோடு பிரட்டை எடுத்துக் கொள்வதைக் கவனித்தார் தலைவர்.

ஒரு நாள் பிரட்டிற்குள் ஒரு தங்க மோதிரத்தை  வைத்து கூடையில்  இறுதியாக வைத்து  விட்டார். எப்பவும்  போலவே எல்லோரும்  எடுத்துக் கொண்ட பின் இறுதியில் இருப்பதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் கொடுத்தாள் ஹன்சா.

ஹன்சாவின் தாயாரோ மிகவும் நற்பண்புடையவர்.  பிரட்டிற்குள் தங்கம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை ஊர் தலைவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வருமாறு மகள் ஹன்சாவிடம் சொன்னார்.

ஹன்சாவும் தலைவரிடம் கொண்டு சென்றாள், அவரோ ‘இது உன் பொறு மைக்காக நான் கொடுத்த பரிசுதான்’ எடுத்துக்கொள் ஹன்சா’ என்றார்.

ஹன்சா மிக மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு பசியால் வாடும் தன் தாய் தந்தையிடம் கொடுத்தாள். தாய் தன் மகள் ஹன்சாவின் நெற்றியில் முத்தமிட்டு கண்ணீரோடு வாங்கிக் கொண்டார்.

எனவே நாமும் பொறுமையாகவும் நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசை இம்மையிலும், அல்லாஹ்வின் பரிசை மறுமையிலும் பெறலாம்.

‘அல்லாஹ் பொறுமையாளர்களு டன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:249)

‘அல்லாஹ்  நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே நேசிக்கிறான்’. (திருக்குர்ஆன் 3:146)

‘பொறுமையை  மேற்கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன்  இருக் கின்றான்.’ (திருக்குர்ஆன் 8:46)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்