‘பக்கீர்கள் இந்திய விடுதலைக்காக, இந்நாட்டு மக்களின் நலனுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர்’ ஈரோடு ஸ்ரீனிவாச கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் பி. சின்னையன் 1982இல் வெளியிட்ட The Vellore Mutiny 1806 என்ற நூலில் பக்கம் 14 முதல் 35 வரை தென்னகத்தில் பக்கீர்கள் நடத்திய புரட்சி பற்றி விவரித்துள்ளார்.
ஜேம்ஸ் டபிளயூ ஹுவர்
James W.Hoover, Men without Hats Dialogue, Discipline and Discontent in the Madras Army 1806 1807 என்ற நூல் 2007இல் மனாகர் கம்பெனியரால் டில்லியிலிருந்து 314 பக்கங்களில் வெளியிடப்பட்டது. இதில் பக்கீர்களின் புரட்சி பற்றி விரிவாகப் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
தென்னாட்டின் போர்வாள் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் சிம்ம சொப்பனம் தீரன் திப்பு சுல்தான் காலத்திய பக்கீர்கள் குறித்த செய்தி காணக்கிடைக்கிறது. திப்பு சுல்தான் அரசாங்கத்தில் மீர் அஸப்பாகப் (உயர் பொறுப்பு) பணியாற்றியவர் அப்துல்லாகான். இவர் தென்னகத்தில் நேரடியாகப் பக்கீர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். பீர்ஜாதா என்ற பக்கீர் இயக்கத்தலைவர் திப்பு சுல்தானிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
திப்பு சுல்தான் படையில் சுபேதாராகப் பணியாற்றிய அப்துல் காதிர் பக்கீர் இயக்க நடவடிக்கையில் பங்கேற்றார். சிப்பாய் முஹம்மது சாலி தீரன் திப்பு சுல்தானிடம் பணியாற்றிய பக்கீர் ஆவார். ஷேக் முஹம்மது, முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் தீரன்திப்பு சுல்தானிடம் பணியாற்றிய பக்கீர்கள் ஆவர்.
வேலூரில் வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமியப் பக்கீர்கள் அதிகம் பேர் சுற்றித் திரிந்தனர். A Mohamedan Fakir for many days walked publicly about the town announcing the approaching destruction of the English. G Arthur F.Cox. A Mannal of the North Presidency of Madras, 1881, Page 81-87
இந்த நூல் அண்மையில் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. சீறாப்புராணம் கிசுறத்துக் காண்டம் பாத்திமா(ரலி) திருமணப் படலத்தில் 197ஆவது பாடலில் உமறுப்புலவர் ‘நாயகியெதிர்ந்து பக்கீரை நன்குற’ என்று பாடியுள்ளார். 12ஆம் நூற்றாண்டில் பாக்தாத் நகரில் தோன்றிய பக்கீர்ஷா இயக்கம் தென்தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை எட்டிப் பார்த்தது.
(தொ.பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், நாகர்கோவில், 2001, பக்கம் 70)
வேலூர் வீதிகளில் வீரமிக்க இஸ்லாமியப் பக்கீர் ஒய்யாரமாக உலாவி ஒளிவு மறைவின்றி புரட்சிக் குரல் கொடுத்தார். ‘ஆங்கில ஆட்சியே! உன் அந்திக் காலம் நெருங்கிவிட்டது’ என்று வேலூர் புரட்சிக்கு (1806) சில தினங்களுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பக்கீர் ஆவார். (ந. சஞ்சீவி, வேலூர்ப் புரட்சி சென்னை, 1956, பக்கங்கள் 52,53.)
வேலூர் புரட்சிக்கான வதந்தி பரவிய போது ரஸ்தம் அலீ என்ற பக்கீர் ஐரோப்பியர் கள் பொது வீதிகளில் கொல்லப்படுவார்கள் என்று திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருந்தார். வேலூரில் அதிக அளவில் பக்கீர்கள் நடமாட்டம் இருந்தது. எண்ணற்ற பக்கீர்கள் வேலூர் புரட்சிக்குத் தயாரான போது அங்கே கூடி வாழ்ந்தார்கள். As Vellore was numerous fakeers already ripe for a rebellion already gathered and resided there. GHenry Beveridge, A Comprehensive History of India,London, Book vi, Chaptar IX, Page 816.
வேலூரின் வீதிகளில், இராணுவப் பாசறைகளில் இஸ்லாமியப் பக்கீர்கள் செய்த பரப்புரை படைவீரர்களைப் புரட்சியில் பங்கேற்க வைத்தது. (வேலூர் புரட்சி 1806 நூலினை காலச்சுவடு பதிப்பகமும் VIT நிறுவனமும் இணைந்து தமிழில் 2021இல் வெளியிட்டது)
Vellore Revolt 1806
VIT University Allied Publishers இணைந்து 2007இல் வெளியிட்ட நூல் அது. 84 முதல் 90 பக்கங்கள் வரையிலும் 47 முதல் 51 வரையிலும் இஸ்லாமியப் பக்கீர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து இயக்கம் நடத்திய செய்தியை விவரித்துள்ளார்.
வாலாஜாபாத்தில் வேலூர் புரட்சியில் வீரச்சாவைத் தழுவிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முஸ்லிம் பக்கீர் வீட்டில் கூட்டம் நடைபெற்றது என்று முகமது சையதுகான் தெரிவித்துள்ளார். GSecret Sundries, Volume 33, Pages 1569 - 1570.
இரண்டு முஸ்லிம் பக்கீர்களுக்கு இரண்டு போர் வீரர்கள் மூலம் உதவியதாக சுபேதார் வெங்கடநாயக் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பணியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் தீரன் திப்புசுல்தானின் படையில் பணியாற்றியவர் என்று மாயா குப்தா (Maya
Gupta) தனது நூலில் தெரிவித்துள்ளார். (Maya Gupta, Vellore Mutiny 1806 Defying Death: Struggles Against Imperialism and Feudalism. New Delhi, 2001.)
1806 ஐதராபாத்தில் வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற புரட்சியில் சுபேதார் சித்திக் ஹூசைன், 15ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த காதர்பேக், உமர்அலீ ஆகியோர் நாடு கடத்தப்பட்டு பினாங்கிற்கு அனுப்பப்பட்டனர்.
22ஆம் படை முதலாம் பிரிவு ஜமேதார் ஷேக் சுல்தானை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு பின்னர் வாழ்நாள் முழுவதும் நாடு கடத்தல் தண்டனையாக மாற்றப்பட்டது.
The Company's Sepoys and The Hydera Badi Umara என்ற தலைப்பின் கீழ் ஜேம்ஸ் டபிள்யூ ஹுவர் 163ஆவது பக்கம் முதல் 168ஆம் பக்கம் வரை இதுகுறித்து விவரித்துள்ளார். (நூல் 314 பக்கங்கள்)
பக்கீர்கள் புரட்சியின்போது பிரியுத்தீன் ஷாவின் பங்களிப்பும் பெருமளவில் இருந்தது. இமாம் முஹியித்தீன்கான் பக்கீர்கள் புரட்சியில் சம்பந்தப்பட்டவர் ஆவார். நந்தி துர்க்கத்தில் முஸ்லிம் பக்கீர்களின் செல்வாக்கு அதிக அளவில் இருந்தது. ஆங்கிலேயரைக் கொலை செய்ய முஸ்லிம் பக்கீர்கள் இந்து சன்னியாசிகள் இணைந்து செயல்பட்டனர் என்று ஜேம்ஸ் டபிள்யூ ஹுவர் தனது நூலில் பக்கம் 194இல் விவரித்துள்ளார்.
ஜமேதார் ஷேக்தாவூது அவரது கூட்டாளி ஷேக் அஹமது, முகம்மது சாரா நந்தி துர்க்கத்தில் பக்கீர்களது பரப்புரையில் பறங்கியரை எதிர்த்தனர்.
பக்கீர்கள் வேடத்தில்..
நந்தி துர்க்கம், பெங்களூரில் கிடைத்த தகவல்களின்படி முஸ்லிம்கள் பக்கீர்கள் வேடத்தில் பலர் கிழக்கிந்தியக் கம்பெனி படையினரின் மனதைக் கெடுத்ததாக அன் றைய அரசாங்க அறிக்கை கூறுகிறது. G James W. Hoover Men Without Hats Pages 196 - 197
ஜமேதார் செய்யது ஹூசைன் நந்தி துர்க்கப் புரட்சிக்கு முன்னரே இன்னும் பத்து நாள்களில் ஐரோப்பியர்கள் கொல்லப்படுவர் என்று அறிவித்தார். நாயக் முஹம்மது உஸ்மான் ராசா நந்தி துர்க்கத்தில் தனது சகோதரர் முஹம்மது ராசா கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்க, தான் முக்கிய ஆங்கிலேயர் ஒருவரைக் கொல்வேன் என்றார் என்று ஜேம்ஸ் டபுள்யூ ஹுவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
பெல்லாரியில் பக்கீர்கள் எழுச்சி பறங்கியருக்கு எதிராக இருந்தது. ஆலம் அலீ ஷா வேலூர் புரட்சிக்கு முன் பெல்லாரிக்கு வந்த பக்கீர் ஆவார். இவருடன் நூர் கலீல் ஷாவும் பெல்லாரியில் பக்கீர்களோடு பங் கேற்றவர்.
லெப்டினன்ட் கர்னல் ஜார்ஜ் மார்ட்டின் அப்துல் நபி பக்கீர்கள் ஆலம் அலீ ஷா, நூர்கலில் ஷா சிப்பாய் அப்துல் நபி, சுபேதார் மீர் பக்கீர் போன்றவர்களின் பேராதரவுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக ஜேம்ஸ் டபிள்யூ ஹுவர் தனது நூலில் 233ஆவது பக்கத்தில் கூறியுள்ளார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் சுபேதார் மீர்பக்கீர் படையிலிருந்து விலக்கப்பட்டார். பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திரப் போர் என்ற கட்டுரையை எண்ண அலைகளிலேயே தந்துள்ளேன். இதனைப்பற்றிய செய்திகளை கர்னல் வெல்ஸின் இன்னொரு நூலில் விரிவாகக் காணமுடிகிறது.
தொடரும்