மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

குர்ஆன் கூறும் கடல்கள்
உஸ்தாத் மு. ஃபரீத் அஹ்மத் அஸ்ஸித்தீகி ஜாமிஆ ஜைனுல் உலூம் அரபிக்கல்லூரி, பண்டாரவாடைச, செப்டம்பர் 16-30, 2025


ஏக இறைவன் அல்லாஹ் படைப்பினத்திற்குச் செய்த அருட்கொடைகளை எண்ணித் தீர்க்க முடியாது.

‘அல்லாஹ்வின்  அருட்கொடைகளை  நீங்கள்  எண்ணிட  முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்’.
(திருக்குர்ஆன் 16:18).

அதேபோல் அல்லாஹ் எதையெல்லாம் படைத்தானோ அதை வீணாகவோ, தேவையின்றியோ படைக்கவில்லை.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான். ‘எங்கள் இறைவனே! இவைஅனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன்..’
(திருக்குர்ஆன் 3:191)

இரு கடல்கள்

இறைவன் கடலைக் குறித்து இவ்வாறு கூறுகின்றான்: ‘அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்; ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை’ (திருக்குர்ஆன் 55:19,20).

‘மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக் குமிடையே ஒரு திரை, ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது’. (திருக்குர்ஆன் 25:53)

‘..மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்?  அல்லாஹ்வுடன்  வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்
களாய் இருக்கின்றார்கள்’ (திருக்குர்ஆன்27:61)

‘உப்புத்தன்மை அதிகம் கொண்ட கடலிலும், இனிப்புத் தன்மை அதிகம் கொண்ட கடலிலும், அல்லாஹ் தனது வல்லமையால் ஒரு மாபெரும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளான். ஒரு கடலின் நீர் மற்றொரு கடலின் நீரோடு கலந்திடாத வகையில் ஆக்கியுள்ளான். அப்படி இல்லை என்றால் ஒன்று மற்றொன்றோடு கலந்து பாழாகி விடக் கூடும். அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏற்படாமல் போய்விடக்கூடும்’ (தப்ஸீர் இப்னு ஜரீர்)

அட்லாண்டிக் பெருங்கடல் (ATLANTIC OCEAN), மத்திய தரைக்கடல் (MEDITERRANEAN SEA) இந்த இரண்டு கடல்களின் தன்மைகளை ஆய்ந்தால், அட்லாண்டிக் பெருங்கடல் 36 விழுக்காடு உப்புத்தன்மை குறைவாக உள்ள கடல் நீராகும். மத்திய தரைக் கடல் 36.5 விழுக்காடு உப்புத்தன்மை அதிகம் நிறைந்ததாகும். இந்த இரு கடல்களின் ஆழம், முகத்துவாரம், வெப்பநிலை, உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவைகளும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடும்போது மாறுபடு கின்றது.

கடலின் இனிப்பான நீர், உப்புத்தன்மை கொண்ட கடலில் கலக்கும் போது ஒரு விதமான மாற்றம் ஏற்படுகிறது. அந்த இரு கடலின் தண்ணீரின் வகையும் இணையும் இடத்தில் கலக்காமல் வேறு வேறாகத்தான் இருக்கும். இனிப்பான கடல் நீரும், உப்புத் தன்மை கொண்ட நீரும் இணையும் இடத்தில் ஒரு வித அடர்த்தித் தன்மை கண்கூடாகத் தெரியும். அதற்கு PYCNOCLINE ZONE எனப்படுகிறது. இரு கடல்களின் அலைகள் மோதும் போது அது தெளிவாகின்றது. அந்தப் பகுதியில் தண்ணீரின் சுவைகளும் அதற்கு ஏற்ப மாற்றமாகவே இருக்கும். இவ்விதமான பேராற்றல்கள் கொண்ட விஷயத்தை எகிப்தின் நைல் நதிக்கும், Rome Sea (ரோம் கடலில்)ஏற்படுகிறது. (THE QURAN MODERN SCIENCE).

LAPLAND SEA RED SEA

  • ஃபின்லாந்து (FINLAND)இல் இருக்கும் லேப் லேண்ட் கடற்கரையின்(LAPLAND SEA) நீர் மிகவும் இனிப்பானதாக இருக்கின்றது.
  • அதேபோல்  பாரசீக  வளைகுடா பகுதியில்(PERSIAN GULF REGION) இருக்கும்செங்கடல்(RED SEA) 40 விழுக்காடு உப்புத் தன்மை அதிகம் கொண்டவை ஆகும்.

கடலின் ஒளி, இருளில் அளவுகள்

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: ‘அல்லது (நிராகரிப்பாளர்களின் செயல்கள்) ஆழ்கடலில் இருள்களைப் போன்று உள்ளன. அந்தக் கடலை ஓர் அலை மூடியுள்ளது; அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேல் மேகம்! (இப்படியாக) இருளுக்கு மேல் இருள் என எங்கும் இருள்மயம்! மனிதன் தனது கையை நீட்டினால் அதைக்கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை வழங்கவில்லையோ பிறகு அவனுக்கு வேறு எந்த ஒளியுமில்லை!’ (திருக்குர்ஆன் 24:40)

கடல் அலைகளின் பாகங்கள்

1. CREST(முகடு புறம்) உயர் நீளமான அலை.

2. TROUGH(கீழ்ப்புறம்) தாழ்வான உள் செல்லும் அலை.

3. WAVE LENGHT(அலைகளின் நீளம்) இரு அலைகளுக்கு மத்தியில் உள்ள நீள அளவை.

4. AMPLITUDE(வீச்சு) அலைகளின் உயரத்திலோ அல்லது ஆழத்திலோ அதிர்வலைகளின் நீளத்தில் 1/2 பங்கு.

5. FREQUENCY (அதிர்வெண் அல்லது அலை வெண்) ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நிலையான அளவைக் கடந்து செல்லும் அலைகளின் எண்ணிக்கை.

FACT SHEET, DEEP OCEAN EDUCATION PROJECT.

கடலில் சூரிய ஒளியின் தொலைதூரப் பயணங்கள்

* EUPHOTIC(சூரிய ஒளி) மண்டலம்

இது கடல் பரப்பிலிருந்து 200 மீட்டர் வரை எடுத்துக் கொள்ளும் பகுதி. சூரிய ஒளி இந்த மண்டலத்திற்கு அப்பால் அரிதாகவே ஊடுருவுகிறது.

* DYSPHOTIC(அந்தி) மண்டலம்

இந்தப் பகுதி 200 மீட்டரில் இருந்து ஆயிரம் மீட்டர் வரை இருக்கும் பகுதி.
ஆழத்துடன் சூரிய ஒளி வேகமாகக் குறைகிறது. ஒளிச்சேர்க்கை இங்கு சாத்திய
மில்லை.

* APHOTIC சூரிய ஒளி ஊடுருவாது.

இது ஆயிரம் மீட்டருக்கு கீழ் உள்ள பகுதி. இந்த மண்டலம் இருளில் மூழ்கியுள்ளது. சூரியன் ஒளி அறவே ஊடுருவாத அகஏOகூஐஇ ஙூONஉ மூன்று வகைப்படுகிறது.

* 1000 - 4000 மீட்டருக்கு இடையிலான பகுதிக்கு ஆஅகூஏஙுஅகஉஃஅஎஐஇ மண்டலம் என்றும்,

* 4000 - 6000 மீட்டருக்கு இடையிலான பகுதிக்கு அஆஙுகுகுOகஉஃஅஎஐஇ மண்டலம் என்றும்,

* 6000 மீட்டர், அதற்கு மேற்பட்ட ஆழத்தில் உள்ள பகுதிக்கு HADOPE LAGIC (HADAL) என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

DYSPHOTIC (TWILIGHT) அந்தி மண்டலத்தில் மனிதர்களின் கண்கள்

டிஸ்போடிக் அல்லது அந்தி மண்டலம் என்று அழைக்கப்படும் இடத்தில், மேற்பரப்பிலிருந்து மிகக் குறைந்த ஒளி 200 முதல் 1,000 மீட்டர் வரை ஊடுருவுகிறது. நாம் சுமார் 1,000 மீட்டர் ஆழத்தை அடைந்ததும், மேலிருந்து வரும் ஒளி முற்றிலும் மறைந்துவிடும். இந்த சூரிய ஒளியற்ற பகுதி அபோடிக்(APHOTIC) மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களும் உயிரினங்களும் எவ்வளவு பார்க்கின்றன என்பதை ஒளி நிலைமைகள் பாதிக்கின்றன. சில ஆழ்கடல் உயிரினங்களின் கண்கள் குறைந்த வெளிச்சத்தில் தங்கள் பார்வையை மேம்படுத்த முடியும். அவை மனிதக் கண்களை விட 10 முதல் 100 மடங்கு அதிக ஒளி உணர்திறன் கொண்டதாக இருக்கலாம். இது அவை உயிர் வாழ உதவும். அவற்றின் அற்புதமான தகவல்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கிடையில், வேறு சில ஆழ் கடல் விலங்குகள் பார்க்கும் திறனை முற்றிலுமாக இழந்து விடுகிறது. அதற்குப் பதிலாக அவை மற்ற புலன்களை நம்பி இருக்கும்.

பேராசிரியர் துர்கா ராவ் கடல் புவியியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர் ஆவார். ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார். பேராசிரியர் துர்கா ராவ், ‘1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண மனிதனால் இந்த நிகழ்வை இவ்வளவு விரிவாக விளக்க முடியவில்லை. எனவே இந்தத் தகவல் இயற்கைக்கு அப்பாற்பட்ட மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

திருக்குர்ஆன் கடலைக் குறித்துக் கூறும் செய்திகளை அறிவியல் நோக்கில் ஆய்ந் தால் இறைவனின் உள்ளமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சிந்திப்பீர் என்கிறது திருமறை. சிந்திப்போம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்