
பாலஸ்தீனத்தில் கடந்த 700 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய ஜியோனிச அரசு இனஅழிப்பை உலக நாடுகளின் உதவியோடு மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் 64,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எந்த பாலஸ்தீனத்தை அடையாளம் இல்லாமல் அடியோடு அழித்துவிட வேண்டும் என எண்ணி அவர்கள் செயல்பட்டு வருகின்றார்களோ, பாலஸ்தீனியர்களின் குரல்களை நசுக்கிவிட வேண்டும் என எண்ணுகின்றார்களோ, அதே பாலஸ்தீனத்தின் ஆதரவுக் குரல்கள் உலகின் மூலைமுடுக்குகளில்லாம் ஒழித்த வண்ணம் உள்ளன. நாளுக்கு நாள் ஆதரவு பெறுகிவருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) சார்பாக "வெல்லட்டும் பாலஸ்தீனம்! வீழட்டும் ஜியோனிச பயங்கரவாதம்!" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் சகோ. முஹம்மது எஹியா பாஷா அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஜனாப். முஹம்மது ரியாஸ் அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். மௌலவி நாசர் புஹாரி அவர்களும், SIO முன்னால் மாநிலப் பொதுச்செயலாளர் ஜனாப். பீர் முஹம்மது அவர்களும் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் மழைக் குறிக்கிட்ட போது பாலஸ்தீனத்தில் பொழியும் குண்டு மழைகளைக் குறித்து SIO மாநிலத் தலைவர் நினைவுக்கூர்ந்தார். கொட்டும் மழையிலும் இடியாய் முழங்கிய சிறப்பு அழைப்பாளர்களின் பாலஸ்தீனத்தைப் பற்றிய உரை மக்களை நாற்களைவிட்டு எழுந்துசெல்ல விடவில்லை.
SIO மணவர்களின் ஊமை நாடகம் அரங்கேற்றம் நடைபெற்றது. பாலஸ்தீன மக்களின் துயரம் மற்றும் உலக நாடுகளின் போக்கு பற்றி நாடகத்தில் கருத்துகள் வைக்கப்பட்டது. வெருமனே பாலஸ்தீனத்தை நினைவுக்கூர்ந்து அந்த கஷ்டங்களை நினைத்து வருந்திக் கொண்டு மட்டும் சென்றுவிடாமல், செயல் ரீதியாக நாம் என்ன செய்ய முடியும் என்ற கோணத்தில் இந்தப் போதுக்கூட்டாத்தில் கருத்துகள் முன் வைக்கப்பட்டது.