மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

புறக்கணிப்பு ஆயுதம் BDS
ரிஃபாயுதீன், அக்டோபர் 16-31, 2025


அண்மைக் காலமாக பி.டி.எஸ். (BDS Boycott, Divestment, and Sanctions) இயக் கம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக  2024 ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேலின் பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, பன்னாட்டுப் பங்குதாரர்கள் மீதான இந்தப் புறக்கணிப்பு, முதலீட்டைத் திரும்பிக் கொள்ளும் நடவடிக்கைகள் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

BDS என்றால் என்ன?

BDS என்பது புறக்கணிப்பு ( Boycott), முதலீட்டைத் திரும்பப் பெறுதல் ( Divestment), தடைசெய்தல் (Sanctions) எனப்படும் மூன்று பகுதிகளை உள்ளடக்கிய, இஸ்ரேலின்  இனவெறி (Apartheid), பயங்கரவாதக் கொடூரங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.

பி.டி.எஸ். (BDS) இயக்கத்தின் தாக்கம்: இஸ்ரேல் பொருளாதாரம் 2024க்குப் பிறகு..

2024இல் பத்திரிகைகள், பன்னாட்டு அமைப்புகள், நிதிநிலை நிறுவனங்கள் இஸ்ரேலில் எதிர்பாராத வீழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளன. Moody's, SP போன்ற உலக  பிரபல  மதிப்பீடு  நிறுவனங்கள் இஸ்ரேலின் கிரெடிட் ரேட்டிங்கைக் குறைத்ததுடன், 2024இல் ஜிடிபி வளர்ச்சி 0% என்றும் 2025இல் மேலும் குறையும் எனவும் கணித்து உள்ளன.

இஸ்ரேலின் கடன் 2022இல் இருந்த நிலைமையைவிட 2024இல் 20% உயர்ந்து, 340 பில்லியனைத் தொட்டுள்ளது.

புதிய முதலீடுகள் 2023 முதல் 90% குறைந் துள்ளன.

அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) 2024இல் 1.5% என்பதே இஸ்ரேலின் பொருளாதார வீழ்ச்சியைக் காட்டுகிறது.

60,000 நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் மூடப்பட்டுள்ளன.

உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான முடிவுகள்

2024இல் ஐ.நா, வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி, கலைத்துறைகள் உள்ளிட்ட பலவகை அமைப்புகள் இஸ்ரேலுடன் தங்கள் தொடர்புகளைத் துண்டித்து பி.டி.எஸ் அழைப்புக்கு ஆதரவு அளித்தன.

நார்வேயின் பெரிய நிதியகங்கள் (இஸ்ரேலின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம்) Sovereign Wealth Fund -Bezeqஇல் செய்திருந்த முதலீட்டை முற்றி லும் நிறுத்தி விட்டது.

UK,  ஜெர்மனி,  பிரான்ஸ், ஸ்பெயின், அரபு நாடுகள் அரசாங் கம், கம்பெனி நிலவரங்களில் புறக்கணிப்பு, தடைச் செயல்கள் அதிகரித்துள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் BDS புயல்

McDonald's, Carrefour, Chevron, 7Eleven, AXA, Storebrand போன்ற நிறுவனங்கள்  புறக்கணிப்பு, முதலீட்டைத்  திரும்பப்பெறும் அழுத்தம் காரணமாகப் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன.

2024இல்  McDonald's  உலகளாவிய விற்பனை 1.5% குறைந்துள்ளது, 7 Eleven இஸ்ரேலில் அனைத்து கிளைகளையும் மூடின, அஙீஅ நிறுவனமும் இஸ்ரேல் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

BDS இயக்கம் வெறும் அரசியல் தலைவர்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் அதில் பங்கு வகிக்க வேண்டும். இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் உணவு, உடை, தொழில்நுட்பம், ஆன்லைன் சேவைகள், வங்கிகள் அனைத்தையும் புறக்கணிக்க சிறு முயற்சி போதும்.

உங்கள் நண்பர்கள், குடும்பம், சமூக வட்டங்களில் இது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள், BDS ஏற்படுத்திய தாக்கங்களை விளக்குங்கள்.

இந்திய நாடு என்பது மிகபெரும் சந்தையாகப் பார்க்கப்படுகிறது. இங்கு நாம் புறக்கணிக்கும் ஒவ்வொரு பொருளும் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இஸ்ரேலை ஆதரிக்கும் பெரும்பான்மை சந்தைப் பொருட்கள், மார்க்கெட் பங்குகள், ஸ்டாக் முதலீடுகள், தொழில்நுட்ப சேவைகளைத்  தவிர்க்க  வேண்டும், மாற்றுத் தேர்வுகளை எதிர்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப்,  சமூக  ஊடகங்களில் உங்கள் உரிமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துங்கள்.

Zionist நிறுவனங்கள் குறித்த பட்டியலை ஆய்ந்து,  அலைப்பேசியில்  கட்டுரைகளைப்  பகிர்ந்து,  ஊடகவியலாளர்கள்,  கல்வியாளர்கள் தொழில்நுட்பப் பய னாளர்களாக உருவாகுங்கள்.

இந்தியாவில்  விற்கப்படும் தயாரிப்புகளில், McDonald's,Nestle, Puma, Booking.com, HP, Ahava, SodaStream, AXA போன்ற  நிறுவனங்களை தவிர்ப்பது உங்கள் புறக்கணிப்புப் போராட்டம் ஆகும்.

No Thanks App மூலம் இஸ்ரேலுக்கு உதவும் நிறுவனங்களை அறிந்து அவற்றைப் புறக்கணிக்க முடியும்.

இஸ்ரேலியப் பொருள்களைப் புறக்கணிப்போம்

BDS இயக்கம், சியோனிசத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. அதன் பொருளாதார  தாக்கங்கள் இஸ்ரேலை  பலவீனப்படுத்துகின்றன. அதேநேரம் அமெரிக்க நிதி உதவிகள் அப்பாவி ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களைத் தொடரச் செய்கின்றன.

எனவே ஃபலஸ்தீன் மீதான இன அழிப்புப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இஸ்ரேலிய தயாரிப்பு, இஸ்ரேலுக்குப் பொருளாதார உதவிகள் செய்யும் நிறுவனங்களைத் தோல்வியுறச் செய்ய நாம் இந்த புறக்கணிப்பு ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்பதை விட நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்