மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை

இணையவழிச் சூதாட்டம்: தடைக்கென்ன தயக்கம்?
16-30 SEPTEMBER 2022


2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கி 2014ஆம் ஆண்டில் மெல்ல இந்தியா விற்குள் அறிமுகமான இணையவழிச் சூதாட்டம் 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் இலட்சக்கணக்கானோரை அடிமையாக்கியது. விளையாட்டாகத் தொடங்கிய சூதாடிகளை சூதாட்ட அரக்கன் அடிமையாக்கிக் கொன்றொழித்தான். 2019ஆம் ஆண்டு கணக்குப்படி தினமும் ஒரு நாளைக்கு இலட்சம் பேர் புதிதாக இணையவழிச் சூதாட்டத்திற்கு அடிமையõகியுள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு நவம்பர் வரை 60க்கும் மேற்பட்டோர் இணையவழிச் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செ#து கொண்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.

இந்தியாவில் 132 இணையவழிச் சூதாட்டச் செயலிகள் உள்ளன. இதன் மூலம் சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபா# சம்பாதிக்கின்றன. இளைய தலைமுறையைச் சீரழித்து, குடும்பங்களை நாசப்படுத்தி கொலை, கொள்ளை, தற்கொலைக்கு வித்திடும் இந்த இணையவழிச் சூதாட்டத்தைத் தடைசெ#யக் கோரி பல தரப்பிலிருந்தும் குரல் எழத் தொடங்கின. ஆனால் எந்தவித அறமும் இல்லாமல் சில நடிகர்கள் சூதாட்ட விளம்பரத்தில் இலாபம் பெறலாம் என்ற விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தனர்.

இச்சூழலில் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் இணைய வழிச் சூதாட்டத்தைத் தடைசெ#ய அவசரச் சட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து இணையவழிச் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது வா#ப்புக்கேடானது. இந்தத் தடை நீக்கத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டில் மட்டும் 27 பேர் இணையவழிச் சூதாட்டத்தால் தற்கொலை செ#துள்ளனர்.

கடந்த மாதம் இணையவழிச் சூதாட்டத்திற்குத் தடை விதிப்பது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்தது. இணையவழிச் சூதாட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓ#வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஆ#வறிக்கை சமர்பிக்க அரசு கேட்டதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி அக்குழு ஆ#வறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 18ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணையவழிச் சூதாட் டத்தைத் தடைசெ#ய அவசரச் சட்டம் பிறப்பிக்க தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இணையவழிச் சூதாட்டத்தை முழுமுற்றாகத் தடைசெ#ய தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. எனினும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆ#வு, ஆலோசனை என்று ஓராண்டு கடந்துவிட்டது.

தாமதிக்கின்ற ஒவ்வொரு நாளும் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம். அரசு லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறி 2003ஆம் ஆண்டு லாட்டரி விற்பனையை அன்றைய தமிழ்நாடு அரசு தடை செ#ததைப் போன்று இனியும் தயங்காமல் தாமதிக்காமல் இணையவழிச் சூதாட்டத்திற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் இந்த விசயத்தில் அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுக்கு இடையூறு தராமல் உறுதுணை வழங்க வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்