மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

முழுமை

ரயில் விபத்தும் விடை தேடும் வினாக்களும்
16-30 June 2023


2023 ஜூன் 02ஆம் நாள் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்தின் அருகே சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் இத்துடன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரும் விபத்தாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம், பீகாரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த இளம் புலம்பெயர் தொழி லாளர்கள். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும், உதவி யும் வழங்கிவரும் நேரத்தில் இதுபோன்று மீண்டும் ஒரு விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால் நாம் எழுப்பும் சில வினாக்களுக்கான விடையை உரியவர்கள் வழங்க வேண்டும்.

  • கடந்த பிப்ரவரி மாதமே சிக்னல் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதாகவும், இன்டர்லாக் அமைப்பின் தோல்வி குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி தென்மேற்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் கடிதம் எழுதி எச்சரித்திருந்தும் அது குறித்த எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
  • விபத்துகளைத் தடுக்கும் கவாச் பாதுகாப்புக் கருவியை பரிசோதித்து வெற்றிகரமாக நிறுவிய பிறகும் 1300 இரயில்களில் 65 இரயில்களைத் தவிர மற்ற இரயில்களில் கவாச் பொருத்தப்படவில்லையே ஏன்? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வே கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவில் நான்கு விழுக்காடு வழித்தடங்கள் தவிர வேறு வழித்தடங்களில் இந்த ஏற்பாடு இல்லையே ஏன்?
  • விபத்து தடுப்புக்கான ஆண்டி கொலிஷன் சிஸ்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 943 கோடியில் தென்கிழக்கு ரயில்வே கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பைசாவைக்கூடச் செலவழிக்கவில்லை. ரயில் இருப்புப்பாதைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை ஏன்? இருப்புப் பாதை சீரமைப்புக்கான நிதியை முறையாக ஒதுக்கி பயன்படுத்தாது ஏன்?
  • எந்த ஒரு ரயில் விபத்தையும் முதலில் ரயில்வே ஆணையர்தான் விசாரிக்க வேண்டும். அவருடைய அறிக்கையைப் பெற்று ரயில்வே உயர்மட்டக் குழு ஆ#வு செ#யும். ரயில்வே துறை ஆ#வை சமர்ப்பிக்கும் முன்பே இந்த விபத்தை சிபிஐ விசாரிப்பது உண்மைக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வா#ப்பாக இருக்காதா? 2016 நவம்பரில் இந்தூர் பாட்னா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2017 ஜனவரியில் இந்த விபத்து குறித்து Nஐஅ விசாரித்தது. 2018 அக்டோபரில் இந்த விபத்து குறித்து Nஐஅ எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செ#யாது என்று கூறினார்கள். இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இப்போது சிபிஐ விசாரித்தாலும் இதே நிலை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
  • ரயில்வே விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய ரயில்வே அமைச்சர், "ரயில்வேயின் இப்போதைய தொழில்நுட்ப மென்பொருளில் யாரோ வேண்டு மென்றே மாற்றம் செ#திருக்கின்றார்கள்' என்று கூறியிருப்பது இந்த வழக்கை முற்றிலும் மடைமாற்றம் செ#துவிடாதா?
  • விபத்துக்கான உண்மையான காரணம் சிக்னல் கோளாறா? மின்னணு இன்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறா? மனிதத் தவறுகள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளன என்பதைப் பற்றி விசாரிக்காமல் விபத்தின் பின்னணியில் சதிவேலை இருக்கக்கூடும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதற்கான ஆதாரங்களை அவர் வெளியிடுவாரா?
  • ரயில்வேயிலுள்ள 14 இலட்சத்து 75 ஆயிரத்து 623 பணியிடங்களில் 3.11 இலட்சம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. லோகோ பைலட்கள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்களுக்குப் பணிப்பளு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் விடுப்போ, ஓ#வோ இல்லாமல் மிகக்கடுமையாக வேலை செ#ய வேண்டிய நிர்பந்தத்தைச் சுட்டிக்காட்டி வரும் நிலையில் இந்தப் பணியிடங்கள் ஒன்பது ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?
  • விபத்து நடந்த பிறகு தீவிரமாக மீட்புப் பணிகளில் இறங்கிய நவீன் பட்நாயக் அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதற்கான கண்ணியமான முறையில் நடந்தப்படவில்லை ஏன்? டெம்போக்களில் தூக்கிப் போடப்பட்ட உடல்கள், துணியால் மூடப்படாமல் உடல்களைத் திடலில் வைக்கப்பட்டது தவறில்லையா? இந்தளவா அடிப்படை மருத்துவக் கட்டமைப்புகளில் பின் தங்கியுள்ளோம்?
  • மயக்கமுற்று உயிருடன் உள்ளவரையும் பிணவறையில் இறந்த உடல்களுடன் வைக்கும் அளவுக்கு அலட்சியம் ஏன்? இதுவரை அடையாளம் காணப்படாத உடல்களுக் குப் பலரும் சொந்தம் கொண்டாடி வரும் அவலச் சூழலில் விபத்து நடந்த பகுதியில் மனிதாபிமானமின்றி கொள்ளையடிப்பவர்களை நாம் என்ன செ#யப்போகிறோம்?
  • போதிய ரயில் வசதிகள் இல்லாமல் முன்பதிவு செ#யப்படாத வகுப்பில் நெருக்கி யடித்து பயணித்தவர்கள் அதிகமாகப் பலியாகிவிட்டார்கள். முறைப்படுத்தப்பட்ட பயணம், பயணிகள் குறித்த விவரங்கள், கூடுதல் ரயில் வசதிகள் இருந்தால் இந்த இறப்பின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் இல்லையா?
  • தனியார் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் வண்ணம் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது ஏன்? தனியாருக்குத் தாரை வார்த்தால்தான் விபத்து களிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும் என்றால் அரசு எதற்கு?
  • இதுபோன்று மீண்டும் ஒரு விபத்து நடைபெறா வண்ணம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செ#ய அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது? இந்த வினாக்களுக்கு விடையளிப்பவர்களைப் பொறுத்தவரை இது ஒரு விபத்து. ஆனால் சற்றேறக்குறைய ஆயிரம் குடும்பங்கள் சீரழிந்து நிற்கின்றன. நாட்டு மக்கள் மீது துளியும் அக்கறையற்ற ஆட்சியாளர்கள் இருக்கும்போது இந்த வினாக்களுக்கான விடை களைத் தருவது யார்?

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்