மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

வெறுப்பு நெருப்பில் மணிப்பூர் மௌனம் சாதிக்கும் பிரதமர்
July 1-15 2023


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 மே 3ஆம் தேதி மெ#தி, குக்கி சமூகங்களுக்கு இடையே எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 390 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், 250 தேவாலயங்கள், 17 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூர் வரலாற்றிலேயே சாதிய வன்முறைகளுக்கு வழிபாட்டுத் தலங்கள் இலக்காவது இதுவே முதல் முறை. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிப் பிடங்களை இழந்து காடுகளிலும், 272 தற்காலிக முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

நாடு விடுதலை பெற்ற பின், கிறித்தவ மதத்தைப் பின்பற்றும் குக்கி சமூகத்தினர் பழங் குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றும் மெ#தி சமூகத்தினருக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இதனால் குக்கி சமூகத்தினரிடம் உள்ள காடுகளிலுள்ள நிலங்களை மெ#தி சமூகத்தினர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெ#தி சமூகத்தினர் தங்களைப் பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் சூழலில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் மெ#தி இன மக்களை எஸ்.டி பிரிவில் இணைப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அண்மையில் வழங்கிய உத்தரவு குக்கி, நாகா சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியையும், தங்களின் நிலம் பறிபோ#விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி பேரணி மேற்கொண்டபோதுதான் இருதரப்பினரும் மோதிக்கொள்ள பெரும் கலவரமாக மாறி மணிப்பூரே பற்றி எரிந்தது.

உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் பின்னர் சாதி, மத ரீதியிலான வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிக்கு இந்த இரு சமூகத்தினரும் பலிகடாவாகியிருக்கின்றனர் என்பதே உண்மை. ஒருமாதத்தைக் கடந்து வன்முறை நீடித்த போதும் பிரதமர் மோடி இதுகுறித்து அடர்த்தியான மௌனம் சாதித்துவருகிறார். 102ஆவது மன் கீ பாத் வானொலி உரையில் கூட பிரதமர் மோடி இதுகுறித்து வா# திறக்கவில்லை. கர்நாடகத் தேர்தல் பரப்புரை முடிந்து மிகத் தாமதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று வந்த பின்னரும் கலவரம் ஓ#ந்த பாடில்லை. மணிப்பூரில் ஆளுங்கட்சியான பா.ஜ.கவைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏக்கள், மாநில அரசின் நிர்வாகத்தின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.

பிரதமரிடம் கலவரம் குறித்துப் பேச 10 எதிர்க்கட்சிகள் சார்பில் கடிதம் எழுதியும் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்காமல் மோடி அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நீண்ட காலமாக மத இன வேறுபாடின்றி வாழ்ந்த மணிப்பூர் பழங்குடியின மக்களிடையே மத, சாதி வெறுப்பை பாஜக தொடர்ந்து ஊட்டி வந்ததன் விளைவையே அங்கு காண முடிகிறது. இந்த வெறுப்பும், நெருப்பும் வகுப்புவாதிகளின் அரசியல் ஆதாயத்திற்கு மிகவும் தேவை என்பதால் பிரதமர் மௌனம் சாதிக்கிறார். அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த நெருப்பு இன்னும் சில தினங்களில் அணையக்கூடும். ஆனால் இந்த வெறுப்பை எப்படி அணைக்கப் போகிறோம்?


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்