மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

அரசியல்

மனநோயாளிகளின் கூடாரமாகிறதா இந்தியா?
வி.எஸ்.முஹம்மத் அமீன், Aug 16 - 31 2023


16. August 16-31, 2023_page-0007.jpg

2023 ஜூலை 31ஆம் நாள் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தை அதிகாலையில் நெருங்கியபோது இரயில்வே பாதுகாப்புப் படை(RPF) காவலர் சேத்தன் சிங் சவுத்ரி காவல் துணை உதவி ஆய்வாளரான பழங்குடி இனத்தைச் சேர்ந்த டிக்காராம் மீனாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். அடுத்தடுத்த பெட்டிகளுக்குச் சென்று இஸ்லாமிய அடையாளங்களுடன் இருந்த மூன்று இஸ்லாமியப் பயணிகளை வெறியுடன் சுட்டுக் கொன்றான்.

அத்துடன் அவனுடைய வெறி அடங்கவில்லை. ‘இந்துஸ்தானில் வாழ வேண்டுமானால் மோடி, யோகி இருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’ என்று சேத்தன் சிங் அங்கு பேசிய காணொலி வெளியாகியுள்ளது. இது மதவெறி கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்தான் என்பதை அவனுடன் பணியாற்றும் காவலர் கன்ஷிராம் ஆச்சார்யாவின் வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சேத்தன் சிங் மனநோயாளி என்ற காரணம் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட மதத்தினரைத் தேடிச் சுட்டுக் கொல்லும் என்னவகையான மனநோய் இது? இந்த வெறுப்பு மனநோய் இந்தியா முழுவதும் வெகுவேகமாக வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் அதே ஜூலை 31ஆம் நாள் ஹரியானாவில் நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்த் பரிஷத் தாங்கள் நடத்திய மதவெறி ஊர்வலத்தின் போது அஞ்சுமன் ஜாமிஆ பள்ளிவாசலுக்குத் தீ வைத்ததுடன் 19 வயது இமாம் மௌலவி ஹாபிஸ் சஅதைச் சுட்டுக் கொன்றது.

இந்த மதவெறி மனநோய் முற்றிப்போனதால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் புல்டோசரால் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோரின் ஆணைக்கிணங்க இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சந்தவாலியா, ஹர்ப்ரீத் கவ்ர் ஜீவன் இந்த இடிப்பு நடவடிக்கைக்குத் தடைவிதித்ததுடன் இன அழிப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதிகாரிகள், அரசு மட்டங்கள், ஆட்சியாளர்கள், கல்வியாளார்கள், ஊடகவியலாளர்கள் என்று பரவிய இந்த வெறுப்பு மனநோய் இன்று பொதுமக்களிடமும் வெகு வேகமாக ஊடுருவத் தொடங்கிவிட்டது. இந்த மனநோயை உடனடியாகக் குணப்படுத்தவில்லை என்றால் இந்தியா மனநோயாளிகளின் கூடாரமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

பெரும்பான்மை இந்துச் சகோதரர்கள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் இந்த நாட்டில் மிகச் சிறு அளவிலான இந்துத்துவா மதவெறிக் கும்பலின் வெறுப்புப் பரப்புரைக்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது. வகுப்புவாதிகளிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் நாடு என்ன நிலையை அடையும் என்பதை மக்கள் எண்ணிப்பார்த்து நேர்மையாக முடிவு செ#ய வேண்டிய நேரம் இது. இந்தியா கூட்டணி இன்னும் பலமுடன் களமாடுவதுடன் எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கும் இந்த வெறுப்பைத் துடைக்கவும் முன்வர வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்