மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தியாவின் மகள்களை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?
அமீன், செப்டம்பர் 1-15, 2024


 

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலைப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்த பெண் மருத்துவர் ஆகஸ்ட் 8ஆம் நாள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். 36 மணி நேரம் தொடர் பணியில் ஈடுபட்டு களைப்புடன் அங்குள்ள கருத்தரங்குக் கூடத்தில்(Seminar Hall) ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.


இக்கொடூரத்தை நிகழ்த்திய கொல்கத்தா போக்குவரத்துக் காவல் தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவன் கைது செ#யப்பட்டுள்ளான். நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் ‘ரிக்ளைம் தி நைட்’ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த கயவர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் தாக்கினர். அங்குள்ள தடயங்களை அழிப்பதற்கே திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரைக் கைது செ#திருக்கிறது மேற்கு வங்கக் காவல்துறை.


இக் கொடூரக்கொலையில் மருத்துவமனையிலுள்ள சில மருத்துவர்களுக்கும், உடன் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களை விசாரிக்கவேண்டும் என பெண்ணின் பெற்றோரும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினரும்(IMA) கோரிக்கை விடுத்-திருக்-கின்றனர். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவமனைத் தலைவர் சந்திப் கோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதே வேளையில் 2024 ஆகஸ்ட் 14ஆம் நாள் உத்தரகாண்டின் நைனிடாலில் தஸ்லிம் ஜஹான் என்ற செவிலியர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கிங்ஸ்லின் மேல்நிலைப் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட வழக்கும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதையடுத்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமை யாக்கப்பட்டன. ஆனாலும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்-துள்ளது. இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாகவும் ஒன்றிய அரசின் NCRB தெரிவிக்கிறது.


ஹத்ராஸ், உன்னா, கதுவா என இந்தியாவின் மகள்கள் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதற்கெல்லாம் தீர்வு என்ன? சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இது மட்டுமே தீர்வல்ல. சிந்தனை மாற்றம் ஏற்படாமல் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறையப் போவதில்லை. ஒழுக்கப் புரட்சியும், சிந்தனை மாற்றமும், இறையச்ச உணர்வும்தான் அத்தகைய நிரந்தரத் தீர்வுக்கு வித்திடும். அதுவரை பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியே!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்