2024ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சன் ஆகியோர் ‘நாடுகளுக்கு இடையே ஏன் இவ்வளவு பெரிய பொருளாதார வேறுபாடுகள் உள்ளன?’ என்பதைப் பற்றிய ஆய்வுகளை வழங்கியுள்ளனர்.‘பல்வேறு அரசியல், சமூக நிறுவனங்களின் உருவாக்கம், சமூக வளர்ச்சியில் அவற்றின் தாக்கம்’ குறித்து இந்த மூன்று பொருளாதார வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஏன் ஏழை நாடுகள் பல ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்த பிறகும் பணக்கார நாடுகளைப் போல வளர்ச்சி அடையவில்லை என்பதைத் தான் இந்த மூன்று பொருளாதார வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.
இவர்கள் முன்வைத்த ஆய்வறிக்கையை நாம் படித்தால், 1526 முதல் 1761 வரை முகலாயர்களின் காலத்தில் செல்வத்தின் காரணமாக ‘தங்கப் பறவை’ என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின்போது ஏன் ஏழை நாடாக மாறியது என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.இவர்கள் தங்கள் ஆய்வுகளில், காலனித்துவவாதிகளால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் நீண்டகால பொருளாதாரத் திட்டத்தைப் பாதித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, காலனித்துவ சக்திகள் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நாட்டில் குடியேற விரும்பாதபோது, அந்த நாட்டு பூர்வகுடி மக்களின் அதிகாரத்தையும் வளங்களையும் ஒரு சிறிய ஆளும் வர்க்கம் அல்லது மேல்தட்டு மக்களின் கைகளில் குவிக்கும் ‘பிரித்தெடுக்கும் நிறுவனங்களை’ (Extractive Institutions) அமைத்தனர். இவை ஆளும் வர்க்கம் உள்ளூர் மக்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை நசுக்க உதவியது. இதுதான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. அதாவது பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் குடியேறாமல், உள்ளூர் வளங்களைச் சுரண்டும் நிறுவனங்களை மட்டும் நிறுவினர். இது எந்த வகையிலும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவில்லை.
கிரேட் பிரிட்டனில் தொழில்துறை புரட்சியைக் (Industrial Revolution) கொண்டு வந்து அதன் செழுமையைக் கூட்ட தேவைப்பட்ட செல்வத்தை இந்தியாவிலிருந்து தான் இங்கிலாந்துக்கு ஆங்கிலேயர்கள் மாற்றினர் என்ற இந்திய வரலாற்றாசிரியர்களின் குற்றச்சாட்டுகளை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்திய மக்களின் இழப்பில் பிரிட்டன் செழிப்பை அடைந்தது, இதனால் இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். ஆங்கிலேயர்கள் சம்பாதித்ததை இந்தியாவிலேயே முதலீடு செய்திருந்தால், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி இன்று பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் இருந்திருக்கும். ஆனால் 200 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது நாம் ஏழையான, திவாலான இந்தியாவைத் தான் பெற்றிருந்தோம்.
முன்னாள் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் கூற்றுப்படி, ஆங்கிலேயர்களின் 200 ஆண்டுகாலச் சுரண்டல், கொள்ளை, அழிவுகள் இந்தியாவை உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாற்றியது. ஆங்கிலேயர்கள் காலத்தின்போது, இந்திய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் வறுமை நிலைக்குக் கீழே வாழ்ந்து வந்தனர். எழுத்தறிவு விகிதம் 17 விழுக்காட்டிற்குக் குறைவாகவும், 1900 முதல் 1947 வரையிலான வளர்ச்சி விகிதம் 0.001% ஆக மட்டுமே இருந்தது.
பெரும்பாலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ஜவுளித் துறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்ததாக தரூர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி பிரிட்டிஷ் வீரர்கள், திட்டமிட்டு தறிகளை அடித்து நொறுக்கினர், அதனால் மக்கள் தங்கள் கைவினைத் தொழிலைச் செய்ய முடியாமல் ஆனது. பிரிட்டிஷ் துணி இறக்குமதி மீதான வரிகளை நீக்கும்போது இந்திய ஜவுளி ஏற்றுமதி மீது தண்டனை வரிகள், அதிக வரிகளை விதித்தனர். ஒரு கட்டத்தில் நெசவாளர்களின் கட்டை விரல்கள் வெட்டப்பட்டன. அதனால் அவர்கள் தறிகளில் செயல்பட முடியாமல் போனது.
முகலாய ஆட்சியின்போது இந்தியாவின் பொருளாதார நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% ஆக இருந்ததாகவும், 18ஆம் நூற்றாண்டில் அது 23% ஆகக் குறைந்ததாகவும் தரூர் கூறுகிறார். முஸ்லிம்களின் ஆட்சியின்போது இந்தியாவின் செழிப்புதான் ஆங்கிலேயர்களையும் மற்ற ஐரோப்பிய சக்திகளையும் இந்தியாவுக்கு ஈர்த்தது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிறுவனங்களின் காரணமாக, மேற்கில் சிந்து முதல் தெற்கில் கேரளா வரை முகலாயர்கள், பிற முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் இந்தியா வளர்ந்தது. முகலாய ஆட்சியாளர்கள் குடியேறி இந்தியாவைத் தங்கள் தாயகமாக ஆக்கியதால், அவர்கள் உருவாக்கிய செல்வத்தை அவர்கள் இந்தியாவிலேயே முதலீடு செய்தனர். இதன் விளைவாகப் பொதுமக்களின் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிரிட்டிஷ்காரர்களைப் போலல்லாமல் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவைத் தங்கள் தாயகமாக ஆக்கியதால் அவர்கள் நிலச் சீர்திருத்தங்கள், சாலைகள், பிற உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற கொள்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வந்தனர், அவை உள்ளூர் மக்களுக்கு வேலைகளை வழங்கியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தியது.
நோபல் பரிசு வென்றவர்களின் கூற்றுப்படி, காலனித்துவ சக்திகள் நீண்ட காலத்திற்குக் குடியேற விரும்பும் நாடுகளில் ‘உள்ளடக்கிய நிறுவனங்களை’ (Inclusive Institutions) அமைத்தன. இந்த உள்ளடக்கிய நிறுவனங்கள் (Inclusive Institutions) தனியார் சொத்துகளுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துகின்றன, பொருளாதாரப் போட்டிக்கு ஒரு சமமான களத்தை வழங்குகின்றன.காலனித்துவவாதிகள், உள்ளூர் மக்களுக்குப் பரந்த அரசியல் பங்கேற்பை அனுமதிக்கின்றன. இது முதலீட்டையும் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இவர்களின் கூற்றுப்படி, அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் நிரந்தரமாகக் குடியேற முடிவுசெய்து, அங்கு நீண்ட கால பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து ‘உள்ளடக்கிய நிறுவனங்களை’ அமைக்க முடிவு செய்திருக்கலாம். எனவேதான் இன்று அமெரிக்கா ஒரு செழுமையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. மேலே கூறிய இரண்டு வகையான காலனித்துவ நிறுவனங்களைப் புரிந்து கொண்டாலே ஏன் இந்தியா ஏழை நாடாகவும் அமெரிக்கா பணக்கார நாடாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நோபல் பரிசுக்காக எடுத்துக் கொள்ளப்படாத ஒரு முக்கியத் தலைப்பு
கடந்த 2023ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், அமெரிக்க கிளாடியா கோல்டின், Womens contributions and role in the Labour Market என்ற தலைப்பில் அவர் செய்த பணிக்காக
அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொழிலாளர் சந்தையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை எடுத்துரைத்து அவர்களின் வருமானம் குறித்த தகவல்களை வழங்கியிருந்தார். 1998ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ஙிஞுடூஞூச்ணூஞு உஞிணிணணிட்டிஞி ச்ணஞீ குணிஞிடிச்டூ இடணிடிஞிஞு கூடஞுணிணூதூ என்ற தனது அறிவார்ந்த ஆராய்ச்சி பங்களிப்புகளுக்காக இந்தக் கௌரவத்தைப் பெற்றார்.
இதேபோல், பொருளாதார வீழ்ச்சியின்போது வங்கித் துறையை மேம்படுத்துவது, மனிதகுலத்தைக் காப்பாற்ற சிறந்த வழிகளைப் பரிந்துரைத்ததற்காக மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு 2022 இல் பரிசு வழங்கப் பட்டது. இந்த நோபல் பரிசு பெற்றவர்களின் விவரங்களிலிருந்து, அவர்கள் மனிதகுலம், சமூகத்தின் நலனை அடைவதில் தங்கள் ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இருப்பினும் மனிதகுலம், சமூகம், அரசின் நலன் தொடர்பான மிக முக்கியமான, அசாதாரணமான ஒரு பிரச்னை அவர்களின் கவனத்திற்கு வரவில்லை அல்லது புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது.அந்தப் பிரச்னை தான் வட்டி. இது பொருளாதார ரீதியாக நாடுகளையும் சமூகங்களையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்தப் பொருளாதாரச் சுரண்டலினால் சாமானியர்கள், குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சில வல்லுநர்கள் வட்டி இல்லாத பொருளாதாரம் என்ற கருத்தில் குறிப்பிடத் தக்க வேலைகளைச் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் பிரச்னையில் பல புத்தகங்கள் உள்ளன. புதுதில்லியில் இந்திய இஸ்லாமிய நிதி மையம் (ICIF) என்ற பிரத்யேக நிறுவனம் இந்தப் பணிக்காக நிறுவப்பட்டுள்ளது. இஸ்லாமிய பொருளாதார நிபுணரும் ICIF பொதுச் செயலாளருமான H.அப்துர் ரகீப், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை அணுகி, ஏழை மக்களின் நிலைமைகளைத் தணிக்க வட்டியில்லாப் பொருளாதார அமைப்பின் நன்மைகளைப் பற்றி அவர்களிடம் தெரிவித்தார்.எவ்வாறாயினும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள வட்டி அடிப்படை யிலான பொருளாதார முறையால், சாமானியர்களின் சமூக, பொருளா தாரச் சுரண்டல் குறித்த கவலைகள் நோபல் பரிசு பெற்றவர்களுக்குத் தெரியுமா என்பதும், நோபல் கமிட்டி இந்தக் கவலையை அங்கீகரிக் கிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வட்டியில்லாப் பொருளாதாரம் குறித்த வாக்குறுதிகளை வழங்க வைத்தது அப்துர் ரகீப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா தளத்தின் (U) முக்கிய தலைவர்களான கே.சி. தியாகி, பிற தலைவர்களுடனும் இந்தக் கோரிக்கைக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு உள்ளார். அப்துர் ரகீபின் நன்கு அறியப்பட்ட புத்தகமான, ’Islamic Economics and Finance in india: Obstacles and Opportunities,’ specifically the chapter ’Difference Between Contempory Finance Systems and Islamic Financial Systems’ (Page 293) என்ற அத்தியாயத்தின் சுருக்கமான ஆய்வு, சமகால பொருளாதார அமைப்பு வட்டி அடிப்படையில் லாபம் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் வட்டியில்லா அமைப்பு லாபம், இழப்பு என்ற கொள்கையில் செயல்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதேபோல், சமகால அமைப்பு செயல்திறன், லாபத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, அதே நேரத்தில் வட்டி இல்லாத அமைப்பு செயல்திறனுடன் நீதி, சமமான கொள்கைகளை வலியுறுத்துகிறது. சமகால அமைப்பு கடன் கொடுத்தவருக்கும் கடனாளிக்கும் இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்டது. அதே சமயம் வட்டியில்லா அமைப்பு நியாயமான ஒத்துழைப்பை நம்பியுள்ளது, இது கடனாளிகளுக்கும் கடன் தேவைப்படுபவர்களுக்கும் இடையில் நிகழ்கிறது.
சமகால அமைப்பின் முதன்மையான உந்து சக்தியாக வட்டி தான் உள்ளது, அங்கு மனித நலன், சமூக நலன் ஆகியவற்றின் உண்மையான அர்த்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இது மதுபானம், லாட்டரிகள், கொடிய ஆயுதங்கள், பலவற்றில் முதலீடுகளுக்கு வழிவகுக்கிறது. வட்டியில்லா அமைப்பின் உந்து சக்தியும் லாபம் தான் என்றாலும், அது மனித நலனுக்கும் சமூக நலனுக்கும் முன்னுரிமை அளிக்கக் கூடியதாக உள்ளது. தற்கால அமைப்பில் முதலீடு என்பது உற்பத்தியுடன் இணைக்கப்படாமல் லாபம் ஈட்டுதல், பணத்தைப் பெருக்குதல் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண் டது. இழப்புகளைப் பற்றிய கவலைகள் எதுவும் இல்லை. இதற்கு நேர்மாறாக வட்டியில்லா அமைப்பு, சாத்தியமான இழப்புகளைப் பொருட்படுத்தாமல், பரஸ்பர ஒத்து ழைப்பை அடிப்படையாகக் கொண்டது. சம கால அமைப்பில், கடன் வாங்கியவர் பணம் செலுத்தத் தவறினால் வட்டி தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும். அதே சமயம் வட்டியில்லா அமைப்பில் செலுத்தாத கடன் தொகைக்கு மேல் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தாது.
உலக நாடுகளைச் சுரண்டும் வட்டி
பொருளாதார அறிவியலுக்கான பரிசுக் குழுவின் தலைவர் ஜேக்கப் ஸ்வென்சன் கூறுகையில், ‘நாடுகளுக்கு இடையேயான வருமானத்தில் உள்ள பெரிய வேறுபாடுகளைக் குறைப்பது நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். பல குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை இன்று வகைப்படுத்தும் பலவீனமான நிறுவனச் சூழல்களின் வரலாற்று வேர்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்’ என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இதற்கு முன்னர் 2006 வரை இல்லாத அளவிற்கு உலகின் 26 ஏழை நாடுகள் கடன்களில் மூழ்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. Debt Justice நிர்வாக இயக்குநர் ஹெய்டி சோவ் கூறினார்: கடன் நெருக்கடியைச் சமாளிக்க பல நாடுகள் ஏற்கனவே அத்தியா வசிய செலவினங்களைக் குறைத்து வருகின்றன. வட்டி விகிதங்கள் அதிகரித்து ஏற்கனவே இருக்கும் ஆபத்தான சூழ்நிலையை இன்னும் மோசமாக்கியது.
அதேபோல இந்திய அரசு 201415இல் கடனுக்கான வட்டியாக ரூ.4.02 லட்சம் கோடியைச் செலுத்தியது. 2021- 22ஆம் ஆண்டில், வட்டி செலுத்து தலுக்காக ரூ.8.14 லட்சம் கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. இது ஆண்டிற்கான அதன் மொத்தச் செலவில் 21.6 விழுக்காடு, வருவாய் வரவுகளில் 39.1 விழுக்காடு ஆகும். 202021 உடன் ஒப்பிடும்போது, வட்டி செலுத்துதல் 19.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி, வட்டி செலுத்துவதற்காக மட்டும் ஒன்றிய அரசு ரூ.9.40 லட்சம் கோடி செலவிட வேண்டும். இது அரசின் மொத்தச் செலவில் 23.8 விழுக்காடாகவும், வருவாய் வரவுகளில் 42.7 விழுக்காடாகவும் இருக்கும். எனவே இது அரசாங்கக் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
என்னதான் அரசாங்கங்கள் அதன் உள்நாட்டு உற்பத்தி (GDP) தாங்கள் செலுத்தும் கடனின் வட்டியை விட அதிகமாக இருப்பதனால் வட்டி கட்டுவது ஒரு பிரச்னை இல்லையென வாதிட்டாலும், இது நாட்டின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும் நிதியை முடக்குவதாக உள்ளது. மொத்தத்தில் வட்டி உலக நாடுகளின் நிலைத்தன்மையையும் பொருளாதாரத் தையும் சுரண்டக் கூடியதாகவும் மக்கள் மீது சுமையை அதிகப்படுத்தக் கூடியதாகவும் தான் உள்ளது. எனவே இதுகுறித்த ஆய்வுகள் அதிகமாக நடத்தப்பட வேண்டும். இந்த ஆய்வுகளை உலக நாட்டு அமைப்புகள் அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும்.
Source: 1. Nobel Prize in Economics 2024: Why is Interest based Economic exploitation not the real issue of society?
2. The 2024 Economic Nobel Prize winners thesis in its history when the British Colonizers quit India in 1947.