மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

குப்பைத் தொட்டியாக மாறும் உலகம்
கப்ளிசேட், 16 - 31 டிசம்பர் 2024


 


உலகைப் படைத்து அதில் மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன என ஏராளமான படைப்புகளைப் படைத்த இறைவன், இறுதியாக மனிதனைப் படைத்தான். உலகின் அத்தனை பொருட்களையும் மனிதனுக்கு இறைவன் வசப்படுத்தித் தந்தான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


விஞ்ஞான வளர்ச்சிகள் மனித குலத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அவை அறவழியில் இருந்து (Moral route) தவறும் போது அழிவுப்பாதையை நோக்கி மனிதகுலத்தை இழுத்துச் செல்கின்றன. படைப்புகள் அனைத்தும் சமநிலையோடு படைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சமநிலையைச் சீர்குலைக்கும்போது பல்வேறு இழப்புகளுக்கு மனிதன் ஆளாகின்றான். மனிதனின் பல நோய் களுக்கும் இன்றைய பலவகை மாசுக்களே (multi pollution) காரணமாகும். இதனால் உலகமே இன்று கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. காற்று மாசுபாடு(Air pollution),நீர் மாசுபாடு (Soil pollution), மண் மாசுபாடு(குணிடிடூ ணீணிடூடூதtடிணிண) என்று பலவகை மாசுக்களால் உலகமே நோய் களின் கூடாரமாக மாற ஒரு காரணமாக அமைகிறது.

காற்று மாசு

இதில் காற்று மாசுபாடு (Air pollution) உலக அளவில் சுகாதாரச் சிக்கல்கள், இறப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபாடு தெருவோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என அடித்தட்டு மக்களை (Lower Class people) அதிகமாகப் பாதிக்கிறது. 211 நாடுகளில் செய் யப்பட்ட ஆய் வுகள், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் குடிக்கும் நீர், நமது உணவை வளர்க்கப் பயன்படுத்தும் மண், ஒளிரும் வானம், ஒவ்வொரு நாளும் நாம் கேட்கும் அதிகரித்து வரும் சப்தமும் கூட நமது மனநிலைகளையும், உடல் நிலைகளையும் பெரிதும் பாதிக்கும். இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னைகளில் சுற்றுச்சூழல் மாசும் ஒன்றாகும். இதனால் இயற்கை உலகத்திற்கும், மனித குலத்திற்கும் கடுமையான, ஈடுசெய் ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இதில் 32 மையங்களில் காற்று மாசு தரக்குறியீடு 400க்கு மேல் பதிவாகியது. இது மிகமோசமான குறியீடா கும். 334 எனத் தொடங்கி 428 வரை குறியீடு சென்றது. உலகின் பல இடங்களில் ஏற்படும் காற்று மாசுக்கள் சூரிய ஒளியையே மறைக்கின்றன. இது விவசாயத்தில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறது. மகரந்தச் சேர்க்கை போன்றவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. குறைந்த வருமானமுள்ள ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காற்றுமாசு அதிகமுள்ள பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். பல நாடுகள் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்களைப் பெரிதும் நம்பியுள்ளன. காற்று மாசுபாடு மனித ஆரோக்கியம், நல்வாழ்வில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

காற்றின் தரம் ஒவ்வொரு ஆண்டும் வெளிப்புற மாசுபாடுகளால் 4 மில்லியனுக்கு அதிகமான இழப்புகளும், உட்புற மாசுபாடுகளால் 2.3 மில்லியன் மக்களும் இறப்பதாகக் கூறப்படுகிறது. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் இதனால் உற்பத்தித் திறன்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இவை ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்து அறிவுத்திறனைப் பாதிப்பதாகவும் ஆய் வுகள் கூறுகின்றன.

அண்மையில் வெளியான மருத்துவச் சான்றுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல்களை 2021இல் புதுப்பித்து மாசுக்கட்டுப்பாட்டு அளவுகளை நிர்ணயித்துள்ளது. கட்டுப்பாடற்ற வாகனங்களின் பெருக்கங்கள், நெரிசலான போக்குவரத்துக் கட்டமைப்புகள், புதைபடிவ எரிபொருள்கள் (உதாரணமாக நிலக்கரி), வேகமாக வளரும் தொழில்துறை செயல்பாடுகள், விவசாயத் தில் பயன்படுத்தப்படும் வெட்டு, எரிப்பு நடைமுறைகள் ஆகியன காற்று மாசுகளைக் கட்டுப்பாடற்று அதிகரித்துச் செல்கின்றன.காற்று மாசுபாட்டிற்கும், வறுமைக்குமான தொடர்புகள் ஆய் வுக்குரியது. முன்னேறிய நாடுகளில் காற்றுமாசு குறைபாட்டால் பாதிப் பவர்களைவிட ஏழை, நடுத்தர நாடுகளில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அவர்களின் வாழ்க்கைத் தரமும், வருமானங்களும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலகில் ஏற்படும் இறப்புகளில் 40% நீர், காற்று மண் மாசுபாடுகளால் ஏற்படுகின்றன. இது உலகளவில் 37 கோடி மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குக் காரணமாகிறது. காற்று மாசுபாடு என்பது வளர்ந்த, வளரும் நாடுகளிலுள்ள அனைவரையும் பாதிக்கின்ற சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச் னையாகும். இதுபோன்ற கழிவுகளின் உமிழ்வுகள் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான மக்களின் காற்றின் தரம் பெருமளவு குறையும் என்று சுற்றுச்சூழல் ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் மாசு

நீர் என்பது மிக முக்கியமான வளமாகும். வெப்பமயமாதலால், உலகின் நீராதாரங்கள் வறண்டு தண்ணீர் பிரச்னை ஏற்படும். ஆண்டுதோறும் தண்ணீர் மாசுபாடு மிக அதிக அளவில் அதிகரித்து வருவதால், அசுத்தமான பாதுகாப்பற்ற தண்ணீரே நோய் கள், இறப்பிற்குக் காரணமாகும். உலகின் பாதி மருத்துவமனைப் படுக்கைகள் தண்ணீர் தொடர்பான நோய் கள் பாதிக்கப்பட்ட மக்களாலேயே நிரம்பி உள்ளன. மண்ணில் நச்சு இரசாயன மாசுகள் இருப்பதால் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் உண்ணும் உணவுகளால் பாதிக்கப்படுவதோடு, இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணை மலடாக்கி விடுகின்றன.

புவி வெப்பமாதல்

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் ட்ரோபோஸ்பெரிக் ஓசோனின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இது புகை மூட்டத்திற்கான முக்கியக் காரணமாகும். பல நேரங்களில் இதுபோன்ற புகை மூட்டங்களால் விமானங்கள் தரையிறங்குவது, மேலேறுவது தடையாகிறது. குறிப்பாக டெல்லி நகரில் காற்று மாசு அதிகரிப்பால் நவம்பர் மாத மத்தியில் சில நாள்கள் 115 விமானங்களின் வருகையும், 226 விமானங்களின் புறப்பாடும் தாமதமானது. பூமி வெப்பமயமாதலால், பனிப்பாறைகள் மிக வேகமாக உருகத் தொடங்குகின்றன. இது கடல் மட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் 2050ஆம் ஆண்டிற்குள் பல தாழ்வான நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆய் வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் சென்னை உட்பட சில நகரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.வெப்பமயமாதலால் ஏற்படும் வானிலை மாற்றங்கள், மழைப்பொழிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வெள்ளம், வறட்சிக்குக் காரணமாக அமைகிறது. பருவநிலை மாற்றங்களால் ஏராளமான நோய் கள் பரவ வழி ஏற்படுகிறது. இதய நோய் கள், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய் களை இந்தமாசுக்கள் அதிகப்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2021 திருத்தப்பட்ட நுண்துகள்கள் (PM 2.5) அளவிலுள்ளவையால், நேரடியாக உலகிலுள்ள 73 கோடி மக்கள் இந்த நுண்துகள்களால் பாதிப்படைகின்றனர். இதில் 80% மக்கள் நடுத்தர, மிகக்குறைந்த வாழ்க்கைத்தரம் உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகள் காலநிலை மாற்றத்திற்கான முக்கியக் காரணமாகும். புவி வெப்பமடைவதால், அவற்றின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன.

சர்வதேச எரிசக்தி நிறுவனம் (ICH)2050 ஆம் ஆண்டளவில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகள் 130% அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது. மிகவும் மாசுபடுத்தும் நாடுகள் தங்கள் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளைக் குறைக்க வேண்டும் என்று பல நாடுகள் எதிர்பார்க்கின்றன. கியோட்டா நெறிமுறை போன்ற ஒப்பந்தங்கள் இருந்த போதிலும், இந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. உலகில்  அதிக  கார்பன்  டை ஆக்ஸைடை உமிழும் ஐந்து நாடுகளை பட்டியலிட்டால் முதலிடத்தில் சீனா இருக்கிறது. 30% உமிழும் சீனாவிற்கு அதன் தொழில் துறை நிறுவனங்களே காரணமாகி இருக்கின்றன. கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் உமிழும் இரண்டாவது நாடாக (15%) அமெரிக்கா விளங்குகிறது.

மூன்றாவது இடத்தில் 7% உமிழ்வுகளோடு இந்தியா இருக்கிறது. உலகில் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியõவில் உள்ளன. உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 1981ஆம் ஆண்டு முதல் காற்றின் தரத்தைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளது. ஆனால் புதைபடிவ எரிபொருட்களை(நிலக்கரி) எரிப்பது மிக அதிகரித்திருக்கிறது. அதிக வாகனங்களின் பெருக்கத்தினால் வெளிவரும் புகைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 5% உமிழ்வுகளோடு ரஷ்யா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு அதிக அளவில் காடுகள் அழிப்பும், விலங்குகள் வேட்டையாடலும் நிகழ்கிறது. ஆகவே இது இயற்கையின் சமநிலையைக் குலைத்து மாசுக்கள் குவிகிறது.

ஐந்தாவது நாடாக ஜப்பான் 4% வெளியேற்றுகிறது. இந்த நிலைமைக்கு அதன் உயர்மட்ட நகர்ப்புற வளர்ச்சி, சிறிதும் இயற்கையின் மீது அக்கறை காட்டாத தொழில் துறையும் காரணமாகும்.காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு ஆகியவற்றைத் தாண்டி ஒலி மாசு, பிளாஸ்டிக் மாசு என்ற குறிப்பிட்ட மாசுகள் குறித்தும் இன்று பேசும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் மனித ஆரோக்கியத்தில் மட்டுமல்லாது, உலகின் சுற்றுச்சூழல், கடல், நீர் நிலைகள், விலங்குகள், பறவைகள் என அனைத்து நிலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உலகின் தன்மைகளையே மாற்றுவதாக ஆராய் ச்சியாளர்கள் கூறுகின்றனர். காட்டுத்தீ, எரிமலைகள் போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் மாசு ஏற்படுகிறது. பழங்கால நகரங்கள் பெரும்பாலும் மனிதக்கழிவுகள், குப்பைகளால் மாசடைந்துள்ளன.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலம், நீர், காற்று மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வு பொதுமக்களிடையே அதிகரித்தது. இந்த வகை மாறுபாடுகளை குறைக்க இந்தியா முதற்கொண்டு பல நாடுகள் சுத்தமான காற்றுச் சட்டம்(1970), சுத்தமான நீர்ச் சட்டம்(1972 அமெரிக்கா) ஆகியவற்றை இயற்றின. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC)1988இல் உலக வானிலை அமைப்பு (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. 2018இல்   தயாரிக்கப்பட்ட(IPCC) யின் ஒரு சிறப்பு அறிக்கை, தொழில் துறைக்கு முந்தைய காலத்திலிருந்து உலக அளவில்
சராசரி வெப்பநிலை 0.81.2 டிகிரி வரை அதிகரிப்பதற்கும், பெரும்பாலான வெப்பமயமாதலுக்கும் மனிதர்களும், மனித நடவடிக்கைகளும் காரணமாகக் குறிப்
பிட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு இருப்பது மாசுக் கட்டுப்பாட்டின் சிக்கலை அதிகப்படுத்துகிறது.

மாற்று  எரிசக்திகளை  (சூரிய மின்சாரம், காற்று மின்சாரம்) பயன்படுத்த முயற்சிகள்  முன்னெடுக்கப்படுகின்றன இன்றைக்கு வாகனப் புகைகளால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்தவும், எரிபொருள் பிரச்னைகளைச் சமாளிக்கவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுகள் பல வகைகளில் (மானியங்கள், கடன்கள்) ஊக்கு விக்கப்படுகிறது. வாகனங்களின் பெருக்கம், போக்குவரத்து நெருக்கம், வெப்பமாதல், உற்பத்தியில் இருந்து வெளிவரும் துகள்கள், இவ்வாறாக வாயுக்கள் குவிந்து நீடிக்கின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாடுகள் உலக அளவில் அதிகரித்து வருவதால், நிலத்திலும் கடலிலும் பிளாஸ்டிக் மாசுபாடுகளின் பிரச்னை அதிகரித்துள்ளது.

மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு ஆகிய பசுமை இல்ல வாயுக்களின் அதிக உமிழ்வுகள் புவி வெப்பமடைதலைத் தொடர்ந்து இயக்கி, பல்லுயிர், பொது சுகாதாரத்திற்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. விண்வெளியிலும் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. பூமியில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களின் உதிரிபாகங்கள், செயற்கைக்கோளின் பாகங்கள் என விண்வெளியில் குவிந்து கிடக்கின்றன. 1961இல் 1000க்கும் குறைவான துண்டுகள், இப்போது 30,000 துண்டுகளாக அதிகரித்து உள்ளதால், அது விண்வெளிப் பயணம், ஆராய் ச்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது.


மாசுகளைக் கட்டுப்படுத்த உலக அளவில் ஏராளமான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க நாடுகளுக்குள் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் வல்லாதிக்க நாடுகள் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து செயல்படுகின்றன. இன்றைக்குக் குப்பைகள் அழிக்கப்படுபவைகள், மறுசுழற்சி செய் து (Recycling) மீண்டும் பயன்படுத்துபவைகள் எனத் தரம் பிரித்துச் செயல்படுத்தப்படுகின்றன.

ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த அரசாங்கங்கள் தடை விதித்திருக்கின்றன. இதில் மக்கள் முடிந்தளவு விழிப்பு உணர்வோடு செயல்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடக்க முயல வேண்டும். அரசாங்கங்களும் தங்களின் பொருளாதாரக் கணக்கீடுகளை மட்டும் எண்ணாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.அதனால் பல தொடர் நோய் கள், இறப்புகள், காலநிலை மாற்றங்கள், தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் மாசுபடுதல், வெள்ளம், விவசாய உற்பத்தி பாதிப்பு, பல்லுயிர் சமநிலைபாதிப்பு என பல இன்னல்களில் இருந்து விடுபட்டு சுகாதாரமான சூழலில் வாழ வழிவகுக்கும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்