மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

பாஜக ஆட்சியில் பறிபோகும் ஊடக சுதந்திரம்
K. ரியாஸ் மொய்தீன், June 16-30, 2025


உலகின்  மிகப்  பெரிய  ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த நெருக்கடிகள் தீவிரம் அடைந்துள்ளது.

ஆளுங்கட்சியின் குற்றங்களை அம்பலப்படுத்துகின்ற அல்லது விமர்சனப் பகுப்பாய்வு செய்கின்ற ஊடகங்களை தேசபக்தி, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி பாஜக அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதேவேளையில் ஆளும் அரசின் ஊதுகுழலாக பொய்களையும், வெறுப்பையும் பரப்பும் ஊடகங்களுக்கு உரிய சன்மானமும், அங்கீகாரமும் கிடைக்கின்றன.

ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண்களாக மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் சேவையை விட்டு விட்டு பெரும் முதலாளிகளின் பணம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் தவறுகளையும், குற்றங்களையும் கேள்வி எழுப்ப வேண்டிய மைய ஊடகங்கள் (Mainstream Media) தங்கள் கடமையிலிருந்து தவறுகின்றன. அந்தப் பணியை மக்களால் செயல்படக்கூடிய சில டிஜிட்டல் மீடியாக்கள் செய்கின்றன. அதில் பிரபல்யமான சில சுதந்திர ஊடகங்களாக Maktoob, The wire,The quint, The News Minute செயல்பட்டு வருகின்றன.

மைய ஊடகங்கள் பேச மறுத்த, தவறிய பல செய்திகளை இந்த சுதந்திர ஊடகங்கள் மக்கள் முன் தொடர்ச்சியாகப் பேசுகின்றன. எனவே இவை அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிடுகின்றன. காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்தியாவிற்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாக பாகிஸ்தான், துருக்கி, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல ஊடகங்கள், தனிநபர் வலைதள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டன. இதில் இந்திய அரசு சில இந்திய ஊடகங்களையும் சேர்த்துக் கொண்டன.

The wire இணையதளம்

இந்தியாவின் முக்கிய சுதந்திர ஊடகங்களில் ஒன்றான The wire 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் பெரு முதலாளிகள் எனப் பலரிடமிருந்தும் பல வழக்குகளைச் சந்தித்து மீண்டு வந்துள்ளது. இருப்பினும் 2025 மே 9 அன்று The wire இணையதளம் அரசாங்கத்தின் ஆணைப்
படி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி இணையதளத்திற்குத் தடை விதித்தபோது, எந்தக் கட்டுரை சட்டத்திற்கு எதிராக உள்ளது என்பது குறித்து விளக்கம் கேட்டு உரிய துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதினார் The wire நிறுவனர். அதற்குப் பதில் அளித்த அமைச்சகம் இந்தியாவின் ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது குறித்த கட்டுரையை நீக்குமாறு பதில் அளித்து.

இது குறித்து கூறிய The wire இதே செய்தியை வெளியிட்ட CNN போன்ற சர்வதேச ஊடகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

The Maktoob இணையதளம்

நான்கு இளங்கலை மாணவர்களால் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக ஒலித்து வருகிறது கூடஞு Maktoob இணையதளம். 2025 மே 8, Maktoob ஊடகத்தின் X வலைதளப்பக்கம் இந்திய அரசாங்கத்தின் ஆணைப்படி எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. பின்னர் 2025 மே 17 இந்தத் தடை விலக்கப்பட்டது.

காஷ்மீர் ஊடகங்கள்

The kashmiriyat, Free Press Kashmir, Kashmir Life போன்ற காஷ்மீர் ஊடகங்கள் மிக நெருக்கடியான காஷ்மீர் சூழலில் செயல்பட்டு வந்தன. அதிலும் அணூtடிஞிடூஞு 370 ரத்தான பிறகு சமூக வலைதளங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் என அனைத்தும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன.

இந்தச் சூழலில் பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசின் ஆணைப்படி The kashmiriyat, Free Press Kashmir, Kashmir Life ஆகிய ஊடகங்களின் சமூக வலைதள பக்கங்கள் தடை செய்யப்பட்டது. மே 17 அன்று The kashmiriyat X வலைதளப் பக்கத்தின் தடை நீக்கப்பட்டது.

தொடரும் தடைகள்

The Outlook, BBC Urdu என இதேபோல் 8000 X வலைதளப் பக்கங்கள் இந்திய அரசாங்கத்தின் ஆணைப்படி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு பக்கங்கள் மட்டுமன்றி இந்தியாவில் உள்ள சில கணக்குகளும் அடங்கும்.

விகடன் இணையதள முடக்கம்

தேசப் பாதுகாப்பிற்காக மட்டுமே இந்த தடைகள் நிகழ்த்தப்படுவதாகக் கூறும் இவர்கள் இதற்கு முன்னாலும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் அமெரிக்காவில் உள்ள அகதிகளை அந்தந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பும் வேலையைத் தீவிரப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவிற்கும் அகதிகள் வந்து இறங்கினர். அவர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்குகளால் கட்டப்பட்டு இருந்தன. இது கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அதன் தொடர்ச்சியாக 2025 பிப்ரவரி 10 விகடன் அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்திய பிரதமர் மோடியும் அமர்ந்திருந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியின் கை, கால்களில் சங்கிலிகளால் விலங்கிட்ட ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டு இருந்தது. இதைக் கண்டித்து பாஜகவின் அன்றைய தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை Minister of Information and Broadcasting (MIB)யில் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 2025 பிப்ரவரி 15, விகடன் வலைதளம் முடக்கப்பட்டது. பின்னர் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்று தடையைத் தகர்த்தது விகடன்.

இது மட்டுமன்றி ஆளும் ஃபாசிஸ பாஜக அரசு தொடர்ச்சியாகவே ஊடகங்கள், திரைப்படங்கள் என அனைத்திலும் தங்களுக்கு எதிரா கப் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டாக BBCயின் குஜராத் இனப் படுகொலை குறித்த ஆவணப்படத் தடை, கேரளாவின் Media One தடை, பாஜகவிற்கு எதிராகப் பேசும் ஊடகவியலாளர்கள் கைது எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்மையில்  Reporters Without Boarders(RWB) என்ற அமைப்பு வெளியிட்ட பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் 180 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 151ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகமாக இருந்தாலும் கூட இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரம் மிக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டே வருகிறது.

பொய்யும் அரசின் முழு ஆதரவும்

தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக பல சுதந்திர ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் பல மைய ஊடகங்கள் (Mainstream Media) பஹல்காம் தாக்குதலுக்குப் பின் அதிகமாகப் பொய்யையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி வருகின்றன. எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர்கள் பரப்பிய மூன்று முக்கியப் பொய்கள்:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்

இந்திய இராணுவமோ பாகிஸ்தான் இராணுவமோ கூட அறிவிக்காததை இந்த ஊடகங்கள் தங்கள் சுய நலனிற்காக கூகீகக்காக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த கூடிய பொய்ச் செய்திகளைப் பரப்பின. இந்திய இராணுவமே கூட இந்த எதிர்த் தாக்குதலை ஒரு இராணுவ நடவடிக்கைதான் எனக் கூறியது. ஆனால் இந்த ஊடகங்கள் இதற்கு முற்றிலும் மாறான செய்தியைப் பரப்பின.

தாக்கப்பட்ட கராச்சி துறைமுகம்

Operation Sindoorயை நடத்திய பின்னர் அது குறித்த அறிக்கையை வெளியிட்ட இந்திய இராணுவம் மிகத் தெளிவாக தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத் தவிர்த்து எந்த ஒரு இராணுவத் தளவாடங்கள், இராணுவம் சார்ந்த நிலையங்களிலும் தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்தியாவின் INS Vikrant விமானம் தாங்கிக் கப்பலால் கராச்சி துறைமுகம் தாக்கப்பட்டதாகப் பொய்யைப் பரப்பின.

தாக்கப்பட்ட பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்

இஸ்லாமாபாத்  தாக்கப்பட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பின. மக்கள் மத்தியில் பாகிஸ்தான் மீதான வெறுப்பையும், மக்கள் மத்தியில் தொடர் கவனத்தையும் பெரும் நோக்கில் இவ்வாறான அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்டு வந்தன மைய ஊடகங்கள். சமூகத்தில் இந்து முஸ்லிம் பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் செய்திகள் மடை மாற்றப்பட்டன. இவ்வாறாக தேச ஒற்றுமையை, பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையில் பொய்ச் செய்திகளை பரப்பிய மைய ஊடகங்கள் மீது இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்