2025 ஜுன் 12ஆம் தேதி ஏர் இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக அமைந்தது. 242 பயணிகளுடன் இந்தியாவின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமானநிலையம் நோக்கிப் போயிங் 787-8 ட்ரீம் லைனர் விமானம் அந்த மதிய வேளையில் பறக்கத் தொடங்கியது. அதில் 169 இந்தியர்களும், 53 பிரிட்டிஷ் பயணிகளும், 7 போர்ச்சுகீசிய பயணிகளும், ஒரு கனடா பயணியும், 12 விமான ஊழியர்களும் பயணித்தனர். இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பயணித்தார்.
விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே தனது உயரத்தை இழக்க ஆரம்பித்து. அகமதாபாத்தின் மேகானிநகர் பகுதியிலுள்ள குஜராத் அரசு பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் சரியாக மதியம் சுமார் 01.39 மணிக்கு விமானம் மோதி தீப்பிடித்துச் சிதறியது.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களும் சேதமாயின. விமான நிலையத்தின் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பலர் காயமடைந்தனர். விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததால் மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதியில் மோதியது என விபத்தை நேரில் பார்த்த ஹரேஷ்ஷா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். குடியிருப்புப் பகுதியிலுள்ள ஐந்து மாடிக் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களும், இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் காப்பீடு நிறுவனம் தருகின்ற தலா ஒரு கோடி வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்தார். ATC(Air Traffic Control)கூற்றுப்படி, விமானம் அகமதாபாத்தில் இருந்து 13.38 ஐகுகூ நேரத்தில் ஓடுபாதை 23இல் இருந்து புறப்பட்டது. அது ஏடிசிக்கு (அவசர கால அழைப்பு) ஒன்றை வழங்கியது. ஆனால் அதற்குப் பிறகு ஏடிசி செய்த எந்த அழைப்புக்கும் விமானத்திலிருந்து பதில் வரவில்லை. ஓடுபாதை 23ஐ விட்டுப் புறப்பட்ட உடனேயே, விமான நிலையத்தின் அருகிலேயே விமானம் விபத்தில் சிக்கி விட்டது. அங்கிருந்து மிகப்பெரிய கரும்புகை எழுந்தது என்று ஈஎஇஅ அறிக்கை தெரிவித்துள்ளது.
90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசியப் பேரிடர் மீட்புப் படை(NDRF) குழுக்கள் காந்தி நகரிலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்தன. மூன்று குழுக்கள் வதோராவிலிருந்து வந்ததõக NDRF தெரிவித்துள்ளது. இந்த AI 171 விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து விபத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அதன்படி, வணிக விமானங்களை ஓட்டிய பல விமானிகள் பல கேள்விகளைச் சமூக ஊடகங்களில் எழுப்பி உள்ளனர்.
1. விமானம் தரையிறங்கும் கியர் ஏன் பின்வாங்கவில்லை?
2. விமானத்தின் இரட்டை இன்ஜின் செயலிழப்பைச் சந்தித்ததா?
3. எரிபொருள் மாசுபாடு, அல்லது அடைப்புகள் காரணமாக இன்ஜின்கள் இயங்கவில்லையா?
4. புறப்படுவதற்காக இறக்கைகளிலுள்ள மடிப்புகள் தாழ்த்தப்பட்டதா?
5. பறவைகள் மோதியதால் விபத்து நிகழ்ந்திருக்குமா?
எனப் பல கோணங்களில் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. விமானம் புறப்பட்ட ஐந்து வினாடிகளுக்குள் விமானிகள் வழக்கமாகத் தரை இறங்கும் கியரை மேலே ஏற்றி விடுவார்கள் என்கிறார் விமானப் பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித் சிங்.
இயக்குநர்(செயல்பாடுகள்), இயக்குநர் (விமானப் பாதுகாப்பு) பதவிகளை வகித்த ஏர் இந்தியாவின் முன்னாள் அதிகாரி கேப்டன் மனோஜ் ஹாதி, நேர்மறையான ஏறும் விகிதத்தை அடைந்தவுடன், தரையிறங்கும் கியரை மேலே ஏற்றி விடுவார்கள் என்று கூறினார். தாழ்த்தப்பட்ட தரை இறங்கும் கியர் விமானத்தின் இழுவையை அதிகரித்து, எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் விமானத்தின் வேகத்தையும் குறைக்கிறது. தரையிறங்கும் கியரை மேலே உயர்த்துவதால் விமானம் மேலே ஏற சீரான காற்று இயக்க ஓட்டத்தை அனுமதிக்கிறது.
ஆனால் விமானம் 400 அடிகள் உயர்ந்த போதும் தரையிறங்கும் கியர்கள் மேலே உயர்த்தப்படாமல் நீட்டியிருப்பதை வெளியிடப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன. இதற்குக் காரணமாக இரட்டை இன்ஜின் செயல் இழப்பு, பறவைகள் மோதியது அல்லது இரண்டின் கவனச்சிதறலால் விமானிகள் இயக்க மறந்து இருக்கலாம் என்று விமானப் பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித் சிங் கூறியுள்ளார். விமானத்தின் போக்கு உடல் கோணம் ஆகியவற்றைப் பார்க்கும் போது வேக இழப்பு காரணமாக விமானம் விழுந்திருக்கலாம் எனச் சில விமானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்டடங்கள் நிறைந்த ஒரு நெரிசலான பகுதியில் விமானம் சறுக்கிச் செல்வதையும், கீழே இறங்குவதையும் வீடியோ பதிவுகள் காட்டுகின்றன. சில வினாடிகள் கழித்து விமானத்தின் மூக்கு உயர்த்தப்படுகிறது. இதுபோன்ற மூக்கை உயர்த்துவது வான் வேகத்தை இழக்க வைக்கும். AI 171 விமானிகள் நெரிசலான பகுதியில் விமானம் மோதுவதைத் தடுக்க முயற்சித்து இருக்கலாம். அந்த வீடியோவில் விமானம் பார்வையில் இருந்து மறைந்து விபத்துக்குள்ளாவது தெரிகிறது. ‘விமானிகள் மூக்கை மேல் நோக்கிச் செலுத்தியிருக்காவிட்டாலும், தொடர்ந்து சறுக்கி கீழே இறங்கி இறுதியில் விபத்திற்குள்ளாகி இருக்கும்’ என்றும் கேப்டன் அமித் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேரும், தரையில் 33 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து ஏற்படும் முன் விமானி, ‘உந்துதல் அடையப்படவில்லை; விழுகிறது. மேடே மேடே மேடே’ என்று ஆபத்தைக் குறிக்கும் சொற்களைக் கூறியது பதிவாகி இருக்கிறது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை நோக்கிக் கிளம்பிய விமானம் நடுவானில் இன்ஜின் கோளாறு காரணமாகத் திரும்பிச் சென்று தரையிறங்கியது. சவூதி அரேபியா விலிருந்து உத்திரப்பிரதேசம் வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது. நல் வாய்ப்பாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் விமானப் பயணத்திற்கான பாதுகாப்பு அம்சங்களை இன்னும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
போர் விமானங்களில் விபத்து ஏற்படும் போது விமானத்தை இயக்கும் பைலட் தன் இருக்கையை விமானத்திலிருந்து விடுபடச்செய்து பாராசூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பயணிகள் விமானத்தில் அனைத்துத் தொழில்நுட்பங்களும் தோல்வியடைந்து, விபத்து நடப்பது உறுதியாகும் நிலையில், மொத்த விமானப் பயணிகளுக்கும் பாராசூட் வசதியை ஏற்படுத்த முடியுமா என்று ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. விமானம் பயணிக்கும் வேகம், உயரம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அதற்கான சாத்தியமில்லை என்று நிபுணர்கள் நிராகரித்து விட்டனர்.
பயணிகள் ஒவ்வொருவருக்கும் பாராசூட் வழங்கி குதிப்பதற்கு நீண்ட முறையான பயிற்சிகள் தேவை என்பதால் அந்த யோசனையை நிபுணர்கள் நிராகரித்துவிட்டனர். இதுபோன்று ஆபத்துகள் நேரும்போது பைலட், பணிப்பெண்கள், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது எப்படி, அதற்கு விமான வடிவமைப்புகளில் என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதையெல்லாம் நிபுணர்கள் ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் மிகமோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றான இதில் உயிரிழந்திருப்பவர்களின் உடல்களை DNAசோதனை மூலம் அடையாளம் கண்டு உடல்களை அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடல்களை அடையாளம் காணும் செயல் முறை வேகம் குறித்து உறவினர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். DNA பொருத்தத்தை முடிக்க 72 மணி நேரம் ஆகும் எனவும், அதனை இப்போது விரைவுபடுத்தி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முறையான விசாரணையுடன் விபத்துக்கான காரணங்களை அறிய ஒன்றிய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. எதிர்காலத்தில் விமான அவசர நிலைகளைத் தடுப்பதற்கும், கையாள்வதற்கும் நடைமுறைகளை வகுப்பதில் இந்தக்குழு கவனம் செலுத்தும் என சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம் லைனர்கள் முழுவதையும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஏர் இந்தியாவிடம் 26 போயிங் 7877 ரகவிமானங்கள், ஏழு 7879 ட்ரீம் லைனர் விமானங்கள் உள்ளன. இதில் 8 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மீதி விமானங்களும் உடனடி அவசர ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாக சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்தார். நாட்டின் விமானப் போக்குவரத்துச் சங்கம் (IATA) வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தின்படி, 2005 முதல் 2023 வரை நிகழ்ந்த விமான விபத்துகளில், ஓடுதளத்தில் தரையிறங்கும் தருணங்களில் 53% விபத்துகள் நேர்ந்து இருக்கின்றன எனவும், புறப்பட்டுச் செல்லும் தருணங்களில் 8.5% விபத்துகள் நிகழ்ந்து இருக் கின்றன என்பதை அறியமுடிகிறது.
விபத்திற்கு அடுத்த நாள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த கூரையில் இருந்து 12 ஆண்டுகள் பழமையான டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரான கருப்புப் பெட்டியை மீட்டனர். உலகளவில் 1200, போயிங் 787 விமானங்கள் புழக்கத்தில் உள்ளன. மேலும் 16 ஆண்டுகாலச் செயல்பாட்டில் மோசமான விபத்து இது என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து
இரண்டாவது கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இரண்டாவது கருப்புப் பெட்டியான காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்(இஙகீ) மூலம் விமானியின் உரையாடல்கள், ரேடியோ பரிமாற்றங்கள், எச்சரிக்கை அலாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விமானத்தின் உள்ளே உள்ள அனைத்து ஆடியோக்களையும் CVR படம் பிடிக்கிறது. இது இப்போது விமான விபத்து புலனாய்வுப் பணியகம், விமான விபத்து விசாரணைக்குப் பொறுப்பான பிற நிறுவனங்களால் பகுப்பாய்வு செய்யப்படும். இஙகீஇன் தரவு, விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் தீடீரென ஏற்பட்ட விபத்திற்குச் சாத்தியமான தடயங்களை வழங்கக்கூடும்.
இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் அவசரகால வெளியேற்றத்திற்கு அருகில், எக்கனாமி வகுப்பு முதல் வரிசையிலுள்ள ஜன்னல் இருக்கையான 11a இல் அமர்ந்திருந்தார். இவர் அமர்ந்திருந்த விமானத்தின் பக்கவாட்டுப் பகுதி விடுதி கட்டடத்தில் மோதவில்லை. அதனால் அவர் உயிர் தப்பிக்க சிறிது வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறினார். சில காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குஜராத்தின் பரூச்சில் வசிக்கும் பூமிசவு கானின் மனைவி நகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 10 நிமிடம் தாமதமாக வந்து இந்த விமானத்தைத் தவறவிட்டதால் உயிர் தப்பினார். விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய போயிங் குழுவும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின்(AAIB) அதிகாரிகளும் விசாரணை செய்வதற்காக அகமதாபாத்திற்கு வந்துள்ளனர். விசாரணை முறையாக நடந்து உண்மையான தரவுகள் வெளி வர வேண்டும். விமானத்தில் பயணித்த அத்தனை பயணிகளின் கனவுகளும் வானில் ஒரு நொடியில் வெடித்துச் சிதறி இருக்கிறது. இதுபோன்ற விபத்துகள் இனி எதிர்காலங்களில் ஏற்படாமல் தடுக்க அனைத்துவகை முயற்சிகளையும், சரியான திட்டமிடலையும் மேற் கொள்ள வேண்டும்.