மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இவை அனைத்தையும் நமக்குத் தருபவை மரங்கள். மரங்கள் உண்ண உணவு, ஒதுங்க நிழல், நோய்க்கு மருந்து, கிடத்தத் தொட்டில், படுக்கக் கட்டில், பாதுகாக்கக் கதவு, ஜன்னல், விலங்குகளுக்கு வீடு, பறவைகளுக்குக் கூடு என அனைத்தையும் தருகிறது. நல்ல காற்றும், வாழ்விற்கு ஆதாரமான மழையும் மரங்களின் வரங்கள். இவ்வளவு பயனுள்ள மரங்களைக் காத்தல் நமது கடமை.
இன்றைய சூழ்நிலையில் நமக்குக் காற்றும் நீரும் கிடைப்பதே அபூர்வம். இனி வரக்கூடிய எதிர்காலத் தலைமுறைக்கு? இக்கால குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு நல்ல காற்றும் நீரும் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மரம் நடும் பரப்புரை. மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் HANDS IN SOIL - HEARTS WITH INDIA என்ற மையக்கருத்தில் குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு Children Islamic Organisation (CIO) தேசிய அளவில் நடத்திய இந்தப் பரப்புரை கடந்த ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை பல பணிகளை மேற்கொண்டது.
ஏன் இந்தத் தலைப்பு?
மரம் வளர்த்தல் என்பது கடமை. அதன் மூலம் இந்தியா செழிப்படைய வேண்டும். மண்ணில் கைகள் என்று சொல்லும்போது விவசாயமும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அறிவதுடன் மரம் வளர்த்தலே எதிர்காலத்திற்கு நன்மை தரும் என்பதையும் பிள்ளைகள் உணர்வர். இந்தியாவில் இதயங்கள் என்று முழக்கமிடும்போது மரம் நடுதல் மூலமாக இந்தியா செழிப்படையும் என்பதையும் நாட்டிற்காக தங்களது பங்களிப்பு வேண்டும் என்பதையும் குழந்தைகள் உணர்வர்.
குழந்தைகள் மூலமாக..
மரம் இருந்தால் மட்டுமே காற்றும் மழையும் கிடைக்கும். இக்காலக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறும்போது அவர்களுக்கு நல்ல காற்றும் மழையும் அவசியம். அந்தக் காற்றும் மழையும் கிடைக்க வேண்டுமானால் மரம் அவசியம். எனவே இக்காலக் குழந்தைகள் தொலைநோக்குப் பார்வையோடு, அவர்களின் எதிர்காலத்திற்காக இப்பரப்புரையை மேற்கொள்கின்றார்கள்.
CIO என்றால்..?
அகில இந்திய அளவில் செயல்படும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் குழந்தைகள் அமைப்பே Children Islamic Organisation (CIO). இந்த சிறார் அமைப்பில் 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் உறுப்பினராகலாம். வரலாறு, நல்லொழுக்கப் போதனைகள், திறமைகளை வளர்க்கும் போட்டிகள் என குழந்தைகளை நல்வழிப்படுதுவதே இஐOவின் நோக்கம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதைக் கருத்தில் கொண்டு குழந்தைகளை நாளைய தலைவர்களாக மாற்றுகிறது CIO.

அறிமுக விழா
தேசிய அளவில் இப்பரப்புரையின் அறிமுக விழா தலைமையகமான புது தில்லியில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் கொடியசைத்து இப்பரப்புரையைத் தொடங்கி வைத்தார். 26.06.2025 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இந்திய துணைத் தலைவர் அமீனுல் ஹசன், CIO செயலாளர் தன்வீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர். 10 இலட்சம் மரக்கன்றுகளை நடுதல் என்ற குறிக்கோளுடன் பரப்புரைப் பயணம் தொடங்கியது.
இது போன்ற அறிமுக விழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் நடைபெற்றது. இப்பரப்புரையை வரவேற்கும் விதமாக, கையில் வண்ணங்களைத் தீட்டி ஒவ்வொரு குழந்தையும் அச்சிட்டு மரம் உருவாக்கினர். பட்டுப்போன மரங்களைத் துளிர்விடச் செய்யும் விதத்தில் கிளைகளை வரைந்து, அதன்மேல் குழந்தைகள் இலைகளை ஒட்டி மகிழ்ந்தனர். பல இடங்களில் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஒரு குழந்தை ஒரு மரம் (One Child One Tree)
அறிமுக விழாவில் கிடைத்த உத்வேகத்துடன், ஒவ்வொரு குழந்தையும் மரம் நட முயற்சி செய்து, தங்கள் கைகளாலேயே மண்ணை நிரப்பி, நீர் ஊற்றி, விதைகள் விதைத் தனர். அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 10000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளிக்கூடங்கள்
பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுக் கூட்டங்களில் பங்குகொண்டு மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. 250 பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பு
முதன்முறையாக குழந்தைகளால் நடத் தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இப்பரப்புரையின் நோக்கம், வழிமுறை எடுத்துச் சொல்லப்பட்டது. கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழந்தைகள் அசராமல் பதிலளித்த முறை அனைவரையும் கவர்ந்தது. இப்பரப்புரையின் மூலம் கையிலெடுத்திருக்கும் பணிகளைப் பட்டியலிட்டபோது பத்திரிகையாளர்கள் வியந்தனர். அனைத்து முதன்மைப் பத்திரி கைகளிலும் செய்தி வெளியானது.
கோவை, எண்ணூர், கும்பகோணம் பகுதிகளில் பல்சமயத் தலைவர்கள், குழந்தைகள் கலந்து கொண்ட மரம் நடும் விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மரம் நடும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விவசாய நிலம் பார்வையிடல்
குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கும்பகோணம், மதுரை, தேனி ஆகிய இடங்களில் குழந்தைகள் விவசாய பூமிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டனர். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
போட்டிகள்
குழந்தைகள் மரத்துடனான தொடர்பை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மரமும் நானும் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. சிறு குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓவியப் போட்டி ஆகியன நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாநில அளவில் ஒரு நிமிட ரீல்ஸ் தயாரித்தல் போட்டியும் நடைபெற்றது. குறிப்பாக, செல்ஃபி போட்டியில் மரத்துடன், விவசாயியுடன் செல்ஃபி எடுத்தது குழந்øதகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
பயிலரங்கம்
மேட்டுப்பாளையம், பட்டாபிராம், எண் ணூர் ஆகிய இடங்களில் சிறப்புப் பயில ரங்குகள் நடைபெற்றன. மாடித்தோட்டம், உரம் தயாரித்தல், செடி பராமரித்தல் குறித்த செய்திகள் பகிரப்பட்டன; நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கு பெற்றனர்.
அதிகாரிகள் சந்திப்பு
அரசு அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிர்வாக அதிகாரிகள் என அனைவருக்கும் இப்பரப்புரை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குழந்தைகள் மரக் கன்றுகளை நினைவுப் பரிசாக வழங்கினர். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றன.
ஊடக நிகழ்ச்சி
அகில இந்திய அளவில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த 6 குழந்தைகள் ZOOM வாயிலாக கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைச் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
பேரணி
‘மரங்கள் எங்கள் சுவாசமே இது CIO வின் முழக்கமே’ என முழங்கி ஆயிரக்கணக்கான குழந்தைகள் பேரணியில் கலந்து கொண்டனர். கோவை, சென்னை, எண்ணூர், மதுரை, கும்பகோணம், திருப்பூர், உடுமலை, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் மரம், காய்கறி போன்று மாறுவேடம் அணிந்து குழந்தைகள் அணிவகுத்து நடந்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. கோவை பேரணியை வனத்துறை அதிகாரி பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரையில் காவல்துறை மகளிர் அதிகாரி சங்கீதா பூபாலன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்து அனைத்துக் குழந்தைகளையும் வாழ்த்திப் பேசினார். பல்சமயத் தலைவர்களுடன் தொடங்கியது கும்பகோணம் பேரணி. இதில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் கலந்து கொண்டது மிகச் சிறப்பு. பேரணியின்போது குழந்தைகள் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்தி கொடி அசைவது போல பேரணியில் வந்தனர்.
முத்துக்கள் சில..
பங்குகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் பூச்சட்டிகள் பரிசாக வழங்கப்பட்டன.
காலை முதல் மழை பெய்து கொண்டிருந்தாலும் குழந்தைகளும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர் கோவை பேரணியில்! அந்த ஆர்வத்துக்கான பரிசாக, இறைவன் சற்று நேரம் மழையை நிறுத்தி வைத்திருந்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலுக்குத் தள்ளியது.
மரம் நமக்கு வரம் என்ற ஒற்றை முழக் கத்துக்காக அனைத்துப் பள்ளிகள் மூலமாக பேரணியில் கலந்து கொண்டனர் குடந்தையில்! நிகழ்ச்சி முடியும் வரை கலையாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டது சிறப்பு.
குழந்தைகளுக்கு பேட்ஜ், தொப்பி, டி ஷர்ட் ஆகியவை வழங்கப்பட்டன. வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து பேரணியில் கலந்து கொண்டது வெள்ளைப் பூக்களை அள்ளித் தெளித்து விட்டது போல இருந்தது.
பொறுப்பாளர்களையும் பெற்றோர்களையும் நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். பேரணியின்போது குழந்தைகளை அலங்காரப்படுத்தி, உரையைச் சொல்லிக் கொடுத்து அதிக சிரத்தை எடுத்திருந்தனர்.
நாளை அல்ல இவர்கள் இன்றைய தலைவர்கள்.
தொகுப்பு: கோவை சலீம்