மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை பொருளாதாரம்

மது ஒழிப்பிற்கான வழி
டாக்டர் P.A. முஹம்மது இக்பால், 16 - 31 August 2022


படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், சிறுவர், பெரியவர் என எந்தப் பாகு பாடுமின்றி மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்ற மது அடிமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். மது அருந்துபவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது டன், தங்கள் குடும்பத்தையும் நிர்கதியாக்கி, விபத்துகளையும், குற்றங்களையும் விளைவித்து சமூகத்தின் தீங்காகவும் மாறிவிடுகின்றனர். "மது வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர மதுவை அடியோடு ஒழித்துக் கட்ட முன்வருவதில்லை.

குடி மயக்கம் (Drunkeness)

போதைப் பொருள்களை அளவு கடந்து உட்கொள்ளும் போது பெருமூளை, சிறு மூளை, முகுளம், தண்டுவடம் (Brain and Brain Stem) பாதிக்கப்பட்டு செ#வதறியாது போதையில் செயல்படுவர். தான் என்ன செ#கிறோம் என்பதை அறியாது கட்டுப் பாடின்றிச் செயல்படுவர். தனது செயல் தவறா, தவறில்லையா என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை இழப்பர்.

ஒருவரின் அறியாமையைப் பயன்படுத்தி போதைப் பொருள்களை அளவுக்கு அதிகமாகக் கொடுத்து மிகு போதையை ஏற்படுத்தி தனது கொடூரச் செயலுக்கு அவரை உட்படுத்துவர். குடி மயக்கத்தில் ஒருவர் மேற்கொள்ளும் கொடூரச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட் டத்தில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் 85 உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடி மயக்கத்திலுள்ளவர்கள் தனது கட்டுப்பாட்டை மீறி கற்பனை உலகில் சஞ்சிரிப்பர் (Euphoria)

மருந்தடிமை (Drug Dependence)

மருந்தடிமை போதையூட்டக்கூடிய மது (கள், சாராயம், ஆல்கஹால் கலப்புள்ள மதுபானங்கள்), கஞ்சா (Cannabis Sativa) அபின்(Opium Alkaloids) பெத்தடின், ஹெராயின், ஆம்பிடமின் இது தவிர விஸ்கி, பிராந்தி, ரம், பீர், ஜின், போர்ட் போன்ற தயாரிப்புகளில் ஆல்கஹால் கலந்துள்ளது.

அதன் கலப்புத் தன்மைக்கேற்ப போதை ஏற்படும். தொழிலாளர்கள், ஏழ்மை நிலை யிலுள்ளவர்கள், மனச் சுமையை மறக்க (மது) ஆல்கஹால் உட்கொண்டு இறுதியில் பல நோ#களுக்கு உட்படுகின்றனர். சமுதாய இழிநிலைக்கும் புறக்கணிப்பிற்கும் தள்ளப் படுகின்றனர். மூன்று நிலைகள் மதுப்பழக்கம் ஒருவரிடம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும். எப்போதாவது ஜாலியாகக் குடிக்கத் தொடங்குபவர்கள்தாம் இறுதியில் முழு குடிகாரர்களாக மாறி தங்களை அழித்துக் கொள்கின்றனர்.

முதல் நிலை மகிழ்ச்சிக்காகவும், உல்லாசமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் ஒன்றுகூடும் போது (பிறந்தநாள் விழா, திருவிழா, கல்லூரி ஆண்டு விழா, கோவில் திருவிழா, பண்டிகை நாள்களில் உல்லாசமாக இருக்க சிறிதளவில் மது அருந்துவர். (30 மி.லி. முதல் 50 மி.லி. வரை) இவர்களை Social Drinkers என்பர். கிடைத்தால் அருந்துவர். அதற்காக ஆசைப்பட்டு அதிக ஈடுபாடு கொள்ள மாட்டார்கள். குழப்பம் விளைவிக்க மாட்டார்கள்.

இரண்டாம் நிலை பின்னர் மனஅமைதிக்காக மது அருந்துவார்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி, வெறுப்பு, குடும்பச் சிக்கல்கள், கடன் சுமை, பொருளிழப்பு, வறுமையை மறக்க, அதிலிருந்து விடுபட மது அருந்துவர். இவர்கள் குழப்பங்களை ஏற்படுத்த மாட்டார்கள். தனிமையிலிருப்பர். அடிக் கடி குடிப்பர். மதுபாட்டிலுடன் இருப்பர். இவர்களை Problem drinkers என்பர்.

மூன்றாம் நிலை இரண்டாம் நிலையைக் கடந்தவர்கள் தம்மை அறியாமல் மூன்றாம் நிலைக்கு உட்டுப்படுத்தப்படுவர். இவர்கள் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது போல மதுவை அருந்துவர். குடிப்பது ஒன்றே அவர்களுக்குப் பழக்கமாகிவிடும். இவர் களை முழுக் குடிகாரர்கள்(Addicts) என்பர். உணவுகூடத் தேவையில்லை. மது மட்டுமே போதும் என்பர். தனிமையிலிருப்பர். மது அருந்துபவர்கள் தன்னுடைய பொருள்களை எல்லாம் அதற்காகச் செலவிடுவர். பணம் இல்லையென்றால் மனைவி, மக்கள், குழந்தைகளிடம் தரக் குறைவாக நடப்பர்.

வீட்டிலுள்ள பொருள்களை அடகு வைத்து குடிப்பர். கையில் பணம் இல்லையென்றால் பிறரிடம் கடன் வாங்குவர். கடன் வாங்குவதற்கு வழியில்லை என்றால் பிச்சை எடுப்பர். பொ# பித்தலாட்ட நடவடிக்கை களில் ஈடுபடுவர். மது மயக்கத்தில் வீதி ஓரங்களில் வீழ்ந்து கிடப்பர். தன்னிலை பிறழ்ந்துவிடுவர். மானம் இழப்பர். மது மயக்கம் மதுவில் கலந்துள்ள ஆல்கஹால் என்பது பொதுவான வழக்கு மொழிச்சொல்லாகும். வேதியியல் முறையில் இதனை C2H5 OH என்பர்.

மதுபானங்களில் ஆல்கஹால் கலப்பு நிலை(Beverages) வோட்கா 6065%, ரம்(கீதட்) 5060%, விஸ்கி, ஜின், பிராந்தி 4045%, போர்ட், ஜெரி 20%, ஒயின் 1015%, பீர் 48%. உட்கொண்ட மது வா#, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் வழியாக உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலக்கும். ஈரலில் சிதைக்கப்பட்டு, பின் குருதிச் சுற்றோட்டத்தின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கும் செல்லும். உட்கொண்ட 2 முதல் 3 மணித் துளிகளில் இரைப்பை குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு 45 முதல் 90 மணித் துளிகளில் முழுவதும் உறிஞ்சப்பட்டுவிடும். பொதுச் சுற்றோட்டத்தில் கலந்துவிடும். சோடா பானங்களில் கலந்து உட்கொள்ளும்போது விரைவில் உறிஞ்சப்படும். விரைவில் போதையைக் கொடுக்கும்.

வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது விரைவில் ஈர்த்துக் கொள்ளப்படும். உணவு உட்கொண்ட பின் அருந்தினால் மெதுவாக உறிஞ்சப்படும். குருதியில் கலக்க நீண்ட நேரமாகும். போதை நீடிக்கும். உட்கொள்ளும் ஆல்கஹாலின் கலப்பு நிலைக்கும், உட்கொள்ளும் அளவுக்குத் தக்க குருதிக் கலப்புத்தன்மை அமையும். ஆல்கஹால் ஈரலால் சிதைக்கப்படும் சிதைக்கப்பட்ட ஆல்கஹால் நுரையீரல், சிறுநீர் வழியாக வெளிப்படும். இதுதவிர சிறிதளவு ஆல்கஹால் வியர்வை, உமிழ்நீர், கண்ணீர், மலம் வழியாக வெளிப்படும். இச்செயல்கள் அனைத்தும் உடலியங்கியலால், வேதியியல் சிதைவு மாற்றம் ஏற்பட்டு வெளிப்படும். உட்கொண்ட மது 8 முதல் 12 மணி நேரத்தில் சிதைவுப்படும்.

மதுப் பழக்க வழக்கம் உடலுக்குப் பல தீங்குகளை விளைவித்து இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தும். முழுக் குடிகாரர்களை மறுவாழ்வு நிலையங்களில் சேர்த்து மருத்துவ வசதி மேற்கொள்ள வேண்டும். இது போன்ற மருத்துவ நலவாழ்வு மையங்கள் நாட்டின் பல பகுதிகளில் செயல்படுகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல் படுகின்றன. மது ஒழிப்பிற்கான வழி இஸ்லாம் என்பது வழிபாடுகளுடன் நின்றுவிடுவதில்லை. மனித வாழ்வு முழுவதும் வழிகாட்ட வந்த நெறியாகும். இஸ்லாம் நன்மைகளைச் செழித்தோங்கச் செ#கிறது. தீமைகளை அடியோடு ஒழித்துவிட விரும்பு கிறது. மது அருந்துவதை இஸ்லாம் பெரும் தீமையாகக் கருதுகிறது. மதுவிலிருந்து மனிதர்களை விடுவிக்க இஸ்லாம் அழகிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இஸ்லாத்தை நபி(ஸல்) அவர்கள் பரப்புரை செ#த அன்றைய காலத்தில் அரேபியர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தது. அரபு நாட்டில் மணற்பாங்கான பகுதிகளில் ஈச்சமரம் அதிகமாக வளரும். மதுவால் ஏற்படும் தீங்குகள் மது அருந்துவதால் உடலிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் கேடடையும், நோ# ஏற்படும். உயிரிழப்பு கூட ஏற்படும்.

1. இரைப்பைப் புண்(Gastric Ulcer)

2. கல்லீரல் கேடு அடைதல்(Currhosis Liver)

3. குடல் புண்(Ulcerative Colitis)

4. சிறுநீரகச் செயலிழப்பு(Chronic Nephritis)

5. நரம்பு மண்டலச் சீர்கேடு(Neuritis)

6. கண் நரம்பு பாதிப்பு(Optic Neurtis)

7. செவிப்புலன் கேடு(Loss of Hearings)

8. ஐம்புலன்கள் செயலிழத்தல்(Loss of Sense Organs)

9. மூளை செயலிழத்தல்(Brain Function Disturbances)

10. தொடர்நிலையாக பல நோ#கள் உடலைத்  தாக்குதல்(Operturitie Infections) & T.B., STD, AIDS, Diabetic Mellitus) அரபுநாடு பாலைவன பூமியாகும்.

ஈச்சமரப் பாளையிலிருந்து வடியும் நீரை சேகரித்து மது தயாரிப்பர். மது (கள்) போதையூட்டக் கூடியதாகும். அக்கால மக்கள் கள்ளைப் பயன்படுத்தி (மது) போதை இன்பம் கண்டனர் (Euphoria). மதுவில் (கள்) ஆல்கஹால் கலந்திருக்கும். மிகுந்த புளிப்புச் சுவையுடன் ஒரு தனிப்பட்ட மணத்துடன் (நாற்றம்) இருக்கும். இதனை உட்கொண்டால் சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு தன்னிலை பிறழ்ந்து விடுவார்கள். நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படும்.

செயல் தடுமாற்றம் ஏற்படும். மதுமயக்கம், சூதாட்டம், குறிபார்த்தல், வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு பல குழப்பங்களை ஏற்படுத்துவர். மேலும் வட்டி வாங்குதல், கொலைவெறிச் செயல் களில் ஈடுபடல், அம்பு எ#தல், குறி பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிருடன் புதைத்தல் போன்ற தீமைகள் அன்று மலிந்திருந்தன. மது அருந்துவதை அருவருப்புடன் பார்ப்பதுடன் நின்றுவிடாமல், மது அருந்து பவர்களை அதிலிருந்து விடுவிக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்தித்தும் வந்தார்கள்.

தொடக்கத்தில் மது அருந்துவது இஸ்லாத்தில் தடைசெ#யப்படவில்லை. எனவே மது அருந்திய நிலையில் தொழுகைக்கு மக்கள் வரலாயினர். மதுமயக்கத்தில் தொழுகையில் எவ்வாறு ஈடுபட்டிருக்கிறோம் என அறியாது செயல்பட்டார்கள். அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங் களை அருளினான். "மது, சூதாட்டம் (இவற்றிற்குரிய) கட்டளைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்.

நீர் கூறுவீராக! அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கின்றது. அதனால் மக்களுக்கு சிறிய அளவில் பயன் இருந்தாலும், அதனால் ஏற்படும் பாவம் (கேடு) அவற்றின் பயனைவிட அதிகமாக இருக்கின்றது. (திருக்குர்ஆன் 2 : 219) அதன் பிறகு பின்வரும் வசனங்களை இறைவன் இறக்கியருளினான். "இறைநம் பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதை யோடு இருக்கும்போது தொழுகையை நெருங்காதீர்கள். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறியும் போது தான் தொழவேண்டும்.' (திருக்குர்ஆன் 4 : 43) அதற்கு அடுத்த நிலையில் பின்வரும் வசனம் அருளப்பட்டது.

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகி யவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். மது, சூதாட்டம் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும்  தொழுகை யிலிருந்தும் உங்களைத் தடுத்துவிட ஷைத்தான் விரும்புகிறான்.

இதற்குப் பிறகாவது நீங்கள் அவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களாக!' (திருக்குர்ஆன் 5:90) மது அருந்தி மனம் போல வாழ்ந்து மாக்களாகச் செயல்பட்ட மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறை அச்சமூட்டினார்கள். அவர்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தினார்கள். மதுவின் தீமைகளை விளக்கி அதிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

ஒரேயடியாக மதுவைத் தடைசெ#யாமல் படிப்படியாக ஒவ்வொரு நிலையாக தடையை நடைமுறைப்படுத்தினார்கள். குர்ஆன் சொன்ன வாழ்க்கையை உருவாக்கியதன் மூலம் மனிதப் புனிதர்களாக அவர்களை மாற்றிக் காட்டினார்கள். சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். மதுப் பழக்கத்தைப் படிப்படியாகத் தடுத்து நிறுத்தி இறுதியில் முற்றிலும் மதுவை ஒழித்துக் கட்டி மது இல்லா சமுதாயத்தை இஸ்லாம் உலகிற்கு அறிமுகப்படுத்தியது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்