மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை அரசியல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்!
ஆ.சுப்பிரமணி, 1 - 15 September 2022


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த 2020இல் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தம் உள்ள 1,306 சிறைகளில் 4,88,511 பேர் உள்ளனர். அவர்களில் 3,71,846 பேர் விசாரணைக் கைதிகளாகவே இருக்கிறார்கள். இது மொத்தக் கைதிகளின் எண்ணிக்கையில் 76 விழுக்காடாகும். பெண் கைதிகள் 20,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 70 பேரும் இதில் அடக்கம். 1995க்குப் பிறகு மிக அதிகமான விசாரணைக் கைதிகள் 2020இல் உள்ளனர். சிறைச்சாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான கைதிகள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

மத்திய சிறைச்சாலைகளில் 118 விழுக்காடு அதிகமாகவும், மாவட்டச் சிறைச்சாலைகளில் 136 விழுக்காடு அதிகமான கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்தான் அதிகப்படியாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களின் பின்தங்கிய சமூக, பொரு ளாதார, கல்விச் சூழ்நிலைகள் சட்டத்திற்குப் புறம்பான கைதுகளுக்கு வழிவகுக்கிறது. எளிதில் பிணையிலும் வெளிவர முடிவதில்லை.

சிறையில் இருக்கும் மொத்தக் கைதிகளில் 49 விழுக்காட்டினர் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பது அதிர்ச்சியான தகவல். இவர்களில் 29 விழுக்காட்டினர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 50 விழுக்காட்டினர் 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள். ஐந்தில் இரண்டு பேர் (41%) பத்தாம் வகுப்புக்குக் குறைவாகப் படித்தவர்கள். கால்வாசிக்கும் மேல் (26.9%) படிப்பறிவில்லாதவர்கள்.

கைதிகள் விடுதலை

கைதிகள் பொதுவாக பிணை, மேல் முறையீடு, பரிமாற்றம் அல்லது மாறுதல், வேறு நாட்டிற்கு ஒப்படைத்தல், பரோல், நிரபராதி என்று நிரூபணம் ஆகியவற்றால் விடுதலை செ#யப்படுகிறார்கள். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436A கைதிகள் விடுதலைக்கு ஒரு வரையறையை வைத்திருக்கிறது. இந்தப் பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதிகள் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு உரிய தண்டனைக் காலத்தில் பாதியைச் சிறையில் கழித்திருந்தால் அவரை விடுதலை செ#யலாம்.

காவல்துறை, நீதிமன்ற விசாரணைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது என்ப தாலும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் இந்தச் சட்டப் பிரிவு இயற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் 50 விழுக்காடு தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்த விசாரணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பிரிவின் கீழ் விடுதலைக்குத் தகுதியான 1,291 பேரில் வெறும் 442 பேர் மட்டுமே விடுதலை செ#யப்பட்டுள்ளார்கள். இது மொத்தத்தில் 34 விழுக்காடு மட்டுமே.

அரசியல் கைதிகள்

சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசியல் கைதிகள். யார் அரசியல் கைதிகள் என்பதற்கு சர்வதேச அளவில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட விளக்கம்(Definition) எதுவும் இல்லை. ஆனால் சர்வதேச அரங்கில் செயல்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை தன்னார்வ நிறுவனங்கள், ஒரு வரையறையை வகுத்திருக்கிறது. அதன்படி நாட்டில் உள்ள சட்டத்தை மீறாமல், அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்கள், விமர்சகர்கள், மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் அரசியல் கைதிகள் என்று வரையறுத்திருக்கிறது.

இதன்படி பார்த்தால் இந்தியாவில் குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டம், பீமா கோரகான் நிகழ்வு போன்றவற்றில் பங்கெடுத்தவர்கள் பலர் பிணையில் வெளிவர முடியாத உபா(UAPA), தேசத் துரோக வழக்கு(Sedition) ஆகிய கொடுஞ் சட்டங்களின் கீழ் கைது செ#யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967 அல்லது உபா Unlawful Activities Prevention Act(UAPA) இந்திய இறை யாண்மையையும், ஒற்றுமையையும் பாது காக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி அரசு நினைத்தால் எந்த ஒரு தனிநபரையும் தீவிரவாதி என்றும், எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்றும் அறிவிக்க முடியும். அந்த இயக்கத்தின் உறுப் பினர்களும் தீவிரவாதிகளாகக் கருதப்படுவார்கள். குற்றம்சாட்டப்பட்ட நபரை 30 நாள்கள் வரை போலீஸ் காவலிலும், 180 நாள்கள் வரை நீதிமன்றக் காவலிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செ#யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். இவர்கள் எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. 2004, 2008, 2012, 2019 ஆகிய ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் வாயிலாக இந்தச் சட்டம் மிகவும் கடுமை யானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

தேசத் துரோகச் சட்டம் (Sedition Act Sec. 124 A) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசு தல், எழுதுதல், அரசை விமர்சிக்கும் விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத் துரோகமாகக் கருதப்படுகின்றன.

கையெழுத்து இயக்கம் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, அனைத்து அரசியல் விசாரணைக் கைதிகளையும் விடுதலை செ#ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த 19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. இலட்சக் கணக்கான பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

பெறப்பட்ட கையெழுத்துகளுடன் ஒரு மனு இணைக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங் களில் இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, தெரு முனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், துண்டுப் பிரசுர விநியோகம் நடத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்குப் பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

* குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் உடனடி யாகத் தலையிட்டு, அரசாங்கத்தை அறிவுறுத்த வேண்டும்.

* இந்தியாவில் உள்ள அரசியல் விசாரணைக் கைதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

* அப்பாவி அரசியல் விசாரணைக் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செ#ய வேண்டும்.

* குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

* UAPA, NSA, ASFFA, Sedition போன்ற பயங்கரவாத கொடுஞ்சட்டங்களை இரத்து செ#ய வேண்டும்.

* கூட்டாட்சி முறையைக் குழி தோண்டிப் புதைக்கும் NIAவைக் கலைக்க வேண்டும். இந்தக் கையெழுத்து இயக்கத்தின் இறுதி நிகழ்வு தலைநகர் தில்லியில் "மக்கள் தீர்ப்பாயம்' என்ற தலைப்பில் நடைபெறும். இதில் பல்வேறு பொ# வழக்குகளில் கைது செ#யப்பட்டு சிறையில் வாடும் சில முக்கிய அரசியல் கைதிகளின் குடும்பத்தார் தங்கள் தரப்பு வாதங்களை வைப்பார்கள். மூத்த வழக்கறிஞர்கள், ஓ#வுபெற்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்குகளின் மீதான தீர்ப்புகளை வழங்குவார்கள்.

இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றச்சாட்டு உறுதி செ#யப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், அதிகபட்சமாக ஆயுள் தண்டøனயும் வழங்கப்படும். சில சமயங்களில் அபராதமும் விதிக்கப்படும்.

தொடரும் பிரிட்டிஷ் காலனிய சட்டங்கள்

மேற்கண்ட சட்டங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது, அந்த அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர் களை தேசத் துரோகிகளாக அறிவித்து கடுமையான தண்டனைகள் வழங் கப்பட்டு வந்தன. ஆனால் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டு களுக்குப் பிறகு இன்றளவும் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் இருப்பது வியப்பு. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு கூட அவர்களுடைய நாட்டில் இந்தச் சட்டத்தை இரத்து செ#து விட்டார்கள்.

சமூக செயற்பாட்டாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து இந்தச் சட்டங் களின் தவறான பயன்பாட்டை விமர் சித்தாலும், அரசாங்கம் இந்தச் சட்டங்களை இரத்து செ#வதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. அண்மையில் உச்ச நீதிமன்றம் குஞுஞி 124Aஇன் கீழ் பதியப் பட்ட வழக்குகளின் விசாரணை, அனைத்து செயல்பாடுகளையும் அரசு மறுபரிசீலனை செ#யும் வரை நிறுத்தி வைக்கச் சொல்லியிருப்பது ஆறுதலான செ#தி.

குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகள்

கடந்த ஏழு ஆண்டுகளில் (2014 2020) மட்டும் ஆண்டிற்கு 985 உபா (UAPA) வழக்குகள் பதியப்பட்டு 2020 இறுதியில் மொத்தம் 10,552 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் வெறும் 253 வழக்குகள் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு இறுதியில் 4101 வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது. இவை ஐந்து ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ள வழக்குகள்.

அதே போல் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 399 தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டு வெறும் 6 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 99 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கை வழக்குகளே குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பது இந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ப தற்குச் சாட்சியாகக் கொள்ள முடியும்.

பெரும்பாலும் பொ#, புனையப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அரசின் கொள் கைகளை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள், மக்கள் உரிமைகளுக்குப் போராடுபவர்கள் இந்தச் சட்டங்களுக்கு இரையாகிறார்கள்.

குறிவைத்துத் தாக்கப்படும் இஸ்லாமியர்கள்

கடந்த 2020 பிப்ரவரி மாதம் தில்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களுக்குப் பிறகு நடத்தப்பட்ட கலவரத்தில் 54 பேர் இறந்து போனார்கள். 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.

ஷிவ் விஹார் பகுதியில் சிறிய கடை நடத்தும் ஷாநவாஸ் அன்சாரி என்ற 29 வயது இளைஞர் கலவரம் நடந்து கொண்டிருந்த போது வீட்டிற்கு வரும் வழியில் காணாமல் போகிறார். பிறகு மீட்கப்பட்டார். அடுத்த நாள் (24 பிப்ரவரி 2020) அந்தக் கடை தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. மார்ச் 6ஆம் தேதி தீக்கிரையான தங்களின் கடையைப் பார்க்கச் சென்ற ஷாநவாஸை தில்லி போலீஸ் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது. அவருடைய மொபைல் போனை ஆ#வு செ#ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அடுத்த நாள் ஷாநவாஸ், அவரின் சகோதரர் அன்சாரி(20), அவர்களின் தந்தை முஹம்மது ரஷீத் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்றபோது ஷாநவாஸ் கைது செ#யப்படுகிறார். அவர் மீது கொலை, வன்முறை, ஆயுதங்கள் பயன் படுத்தியது என்று 16 வழக்குகள் பதியப் படுகிறது. அவரது சகோதரர் அன்சாரி யிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அன்சாரி, ஒரு வாரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ஷாநவாஸ் சிறையில் உள்ளார். ஒரே நாள் வழக்கில் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செ#யப்பட்டுள்ளது.

இரண்டு மகன்களும் இல்லாமல் இன்று அந்த வயதான பெற்றோர் நோ#வா#ப்பட்டு வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஓர் உதாரணம் மட்டுமே. இந்தியாவில் இஸ்லாமியர்களின் மொத்த மக்கள் தொகையை (20.4 கோடி) ஒப்பிடும் போது சிறையில் இருப்போரின் எண்ணிக்கை (93,774) மிக அதிகமாக உள்ளது. அதாவது 14.2 விழுக்காடு உள்ள இஸ்லாமியர்களில் 19.1% சிறையில் உள்ளனர். அதே போல 16.1 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட தலித்களில் 20.7 விழுக்காட்டினரும், 8.2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட ஆதிவாசிகளில் 11.2 விழுக்காட்டினரும் சிறையில் உள்ளனர். காவல்துறையின் பாரபட்சமும், ஒரு சார்பு நிலையுமே இப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த தலித்கள், ஆதி வாசிகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோர் சிறையில் இருப்பதற்குக் காரண மாக உள்ளது. தீவிரவாதம் என்றாலே அது இஸ்லாமியர்கள், குற்றச்செயல்கள் என்றால் அது தலித்கள், ஆதிவாசிகள் என்று காவல்துறையினர் முன்முடிவு செ#வதாக ஆ#வுகள் தெரிவிக்கின்றன.

சிறைத் துறையின் மனிதாபிமானமற்ற செயல்கள்

சிறை அதிகாரிகள் அரசியல் விசாரணைக் கைதிகளையும், தண்டனைக் கைதிகளுக்கு இணையாகவே நடத்துகிறார்கள். பெரும் பாலான சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் வயது முதிர்ந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமான பேர் அடைத்து வைத்தல் போன்ற காரணங்களால் இவர்கள் கொரோனா பேரிடரில் பாதிக்கப்பட வா#ப்புகள் அதிகம் என்பதைச் சுட்டிக் காட்டி ஐ.நா. சபை, உலக சுகாதார நிறுவனம், விசா ரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். சிறையில் இருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அனைத்து நாடு களுக்கும் அறிவுறுத்தியது.

ஆனால் அதை செவிடன் காதில் ஊதிய சங்காக வழக்கம் போல இந்திய அரசு கண்டுகொள்ள வில்லை. சிஏஏ போராட்டத்தில் பங்கு பெற்ற நடாசா நார்வால் என்ற 32 வயது பெண் Womens Collective என்ற அமைப்பைச் சேர்ந்தவர். தில்லி கலவரத்தில் தொடர்புடை யவர் என்று சொல்லி கைது செ#யப்பட்டார். 71 வயதான அவருடைய தந்தை மஹாவீர் சிங் நார்வால் கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டபோது அவரைப் பார்க்க அளித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது. என் மகள் நீண்ட நாள்கள் சிறையில் இருந் தால் நான் அவளைச் சந்திக்காமலே இறந்து விடுவேன் என்று அந்த ஓ#வுபெற்ற பேராசிரியர் சொன்னது நடந்தே விட்டது. ஆம்! அவர் இறந்து போனார்.

அடுத்த நாள் தான் இறுதிச் சடங்குகள் செ#ய நடாசா வுக்கு மூன்று வார கால பிணை வழங்கப் பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய விசாரணை ஆணையமான NIA, பீமா கோரகான் நிகழ்வில் தொடர்புடையவர்களை, இடது சாரி மாவோயிஸ்டுகள் என்றும், அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்றும், பிரதமரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டிய வர்கள் என்றும் சொல்லி UAPA, Sedition போன்ற சட்டங்களின் கீழ் கைது செ#தது. இதில் ஷானிபாபு, கௌதம் நவலாகா, ஃபாதர் ஸ்டான் சாமி, சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, வரவரராவ் போன்ற 16 பேர் அடங்குவர். இவர்களைப் பொதுவாக 16 BK என்று அழைக்கின்றனர்.

ஜாதி ஒழிப்பு செயற்பாட்டாளரான ஹானிபாபு(தில்லி) பல்கலைக்கழகப் பேராசிரியர். சிறையில் இவருடைய கண்கள் கடுமையான தொற்றுக்கு உள்ளாகி, பார்வை மங்க ஆரம்பித்தது. ஆனால் சிறை நிர்வாகம் சரியான சிகிச்சை அளிக்காததால் தொற்று மேலும் உடலின் பல பாகங்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் மனைவி தெரிவிக்கிறார். இவர் இருக்கும் தலோஜா(மகாராஷ்ட்டிரா) ஜெயில் 2,124 பேர் கொள்ளளவைக் கொண்டது. ஆனால் 3,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கொரோனõவில் 22 வயது இளைஞர் உட்பட பலர் இறந்து போயினர்.

ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக அய ரõது உழைத்த தமிழ்நாட்டை சார்ந்த ஃபாதர் ஸ்டான் சாமி(84) பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர். ஒரு கிளாஸ் டம்ளரைக் கூட கையில் எடுத்து தண்ணீர் குடிக்க முடியாது. சிப்பர் அல்லது ஸ்ட்ரா வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை சிறை நிர்வாகம் மறுத்தது. இறுதியாக அவர் சிறையிலேயே மாண்டு போனார். நவ்லாகா வுக்குக் கண் கண்ணாடி மறுக்கப்படுகிறது. 72 வயதான தும்பே ஆஸ்துமாவால் பாதிக் கப்பட்டவர்.

மாணவச் செயற்பாட்டாளர்கள்

தேவாஸ்கனா காலிதா, நடாசா நார்வால், Womens Collective என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள், அலும்னி கலெக்டிவைச் சேர்ந்த மிஞ்ரா டாட், முன்னாள் காங்கிரஸ் முனிசிபல் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹான், United Against Hate அமைப்பைச் சேர்ந்த காலித் ஷைஃபி, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி ஸபூரா ஜர்கார், ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், சர்ஜில் இமாம் என்று பட்டியல் நீள்கிறது. ஸபூரா ஜர்கார் கர்ப்பிணி என்பதால் மனிதாபிமான அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர்கள் எல்லோரும் பெரும்பாலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். ஆனால் ஆளும் பாஜக அரசு இவர்களைத் தில்லியில் நடந்த கலவரத்தில் தொடர்பு படுத்தி, UAPA தேசத்துரோக வழக்குகளில் கைது செ#திருக்கிறது.

அரசின் கொள்கை களை எதிர்ப்பவர்களை, விமர்சிப்பவர் களை அரசுக்கு எதிரானவர்களாகவும் தேசத்திற்கு எதிரானவர்களாகவும் சித்திரிக் கிறது. உமர் காலித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆரா#ச்சி மாணவர். ஜார்க்கண்டில் வசிக்கும் ஆதிவாசிகளின் நிலையைப் பற்றி ஆரா#வதைத் தன்னுடைய பிஹெச்டி தலைப்பாக எடுத்துள்ளவர். அடித் தட்டு மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுப்பவர், அரசின் பல்வேறு தவறான கொள்கைகளை விமர்சனம் செ#பவர். இவரை வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்திற்குச் சதித்திட்டம் தீட்டினார் என்று சொல்லி UAPA, Sediction சட்டங்களில் கைது செ#துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தத் திட்டமிட்டதாக ஒரு குற்றச்சாட்டு. சட்ட விரோத செயல்பாடுகள், தீவிரவாதச் செயல்பாடு, தீவிரவாதச் செய லுக்கு நிதி வசூல் செ#தது போன்ற புனையப் பட்ட பொ# வழக்குகளின் கீழ் காலித் கைது செ#யப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவாதியில் நடந்த வெல்ஃபேர் கட்சிக் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்றும் ஒரு குற்றச் சாட்டு. ஆனால் கைது செ#து இரண்டு ஆண்டுகள் ஆகியும் காவல்துறை எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. பிணை யும் மறுக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள்

பெரும்பாலான ஊடகங்கள் சோசியல் மீடியா என்று ஆன பிறகு ஒரு சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களுமே உண்மையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் நடந்த ஒரு தலித் பெண்ணின் வன்புணர்வு, கொலையை நேரில் சென்று செ#தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் என்ற ஊடகவியலாளர் UAPAவில் கைது செ#யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு இன்றளவும் சிறையில் உள்ளார். ஆல்ட் நியூஸ் என்ற செ#திகளின் உண்மை நிலையை வெளியிடும் நிறுவனத் தின் துணை நிறுவனர் முஹம்மது ஜுபைர் அண்மையில் கைது செ#யப்பட்டு வியக்கத்தக்க வகையில் பிணையில் வெளிவந் திருக்கிறார். அவர் 2018இல் பதிவு செ#த ஒரு ட்வீட் மதரீதியாக பலரின் மனதைப் புண்படுத்தியதாக அவர்மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.

ஆனால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் வெறுப்புப் பேச்சுகளைப் பேசும் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சுதந்திரமாக, அரசின் பாதுகாப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். Dissents one the safety valve of democeracy என்று சொல்வார்கள். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள், மக்கள் விரோதக் கொள்கை களை எதிர்ப்பவர்கள் அனைவர்மீதும் க்அகஅ தேசத்துரோக வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் என்ற குறளுக்கு ஏற்ப இந்த அரசு தாமாகவே அழியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்