மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை அரசியல்

கேள்விக்குறியான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை!
சேயன் இப்ராகிம், 1 - 15 September 2022


அண்மையில் நடந்து முடிந்துள்ள குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களான திரௌபதி முர்முவும், ஜெகதீப் தன்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு களை ஏற்றுள்ளனர். பாஜகவின் வேட் பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சுமார் ஒன்றரை விழுக்காடு வாக்குகளே குறைவாக இருந்தன.

ஒரிசாவின் ஜனதா தளமும், ஆந்திராவின் ஒ#எஸ்ஆர் காங்கிரஸும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால், அக்கட்சி வேட்பாளரின் வெற்றி உறுதி செ#யப்பட்டிருந்தது. குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலைப் பொறுத்தளவில், பாஜகவுக்கு நாடாளு மன்றத்திலும், மாநிலங்களவையிலும் பெரும் பான்மை இருந்ததால், அக்கட்சி வேட்பாளரின் வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தே தேர்தலில் போட்டி யிட்டன. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான போட்டி இருக்கவேண்டும் என்று அக் கட்சிகள் நினைத்ததில் தவறு இல்லை.

பொதுவாகவே, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற கட்சி இது போன்ற உயர் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செ#யும்போது, எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி, ஒரு பொதுக்கருத்தை எட்ட முயற்சிப்பது வழக்கம். ஆனால், இம்முறை பாஜக அத்தகைய முன்முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. எனவே சரத்பவார், மம்தா பானர்ஜி தலைமையில் கூடிய 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செ#தனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவையும், அடுத்து மகாத்மா காந்திஜியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ணன் காந்தியையும் நிறுத்த முயற் சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் போட்டியிட மறுத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் வேறு ஒரு தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கூடி ஆலோ சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது சம்மதத்துடன் அறிவித்தனர். இந்த இரண்டாவது கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாதது எதிர்க் கட்சித் தலைவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தனது கட்சியின் வேட்பாளராக ஒரிசா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி இனத்தைச் சார்ந்த திரௌபதி முர்முவை அறிவித்தது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்பாளர்களை அறிவித்தன.

பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒருவர் இதுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்ததில்லை. அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் உயர் பதவிக்கு நிறுத்தியிருக்கிறோம். எனவே அவரை எதிர்ப்பது பழங்குடி இன மக்களை அவமதிப்பதாகும் என பாஜக தலைவர்கள் பரப்புரை செ#ய ஆரம்பித்தனர். இது எதிர்க் கட்சித் தலைவர்களைச் சற்று சங்கடப்பட வைத்தது. எங்களைக் கலந்து ஆலோசித்திருந்தால் நாங்கள் அவருக்கு எதிராக வேட் பாளரை நிறுத்தியிருக்க மாட்டோம் என்ற ரீதியில் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது வும் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றியைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்கியது. எனினும் பின்னர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவுக்கு தனது கட்சியின் ஆதரவைத் தெரி வித்தார். எதிர்க்கட்சித் தலைவர் களின் கூட்டத்தில் கலந்து கொள் ளாத தெலுங்கானாவின் தெலுங் கானா ராஷ்டிரிய சமிதியும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு தங்களது ஆதர வைத் தெரிவித்தன. அதே நேரத்தில், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும், அகாலி தளமும் பாஜக வேட் பாளருக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த நேரத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவினர் ஆட்சியைக் கவிழ்த்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்த சம்பவமும் நடந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக சிவசேனாவின் இரண்டு அணிகளுமே பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தன. இது பாஜக வேட்பாள ருக்கான ஆதரவை மேலும் அதிகரித்தது. பாஜகவின் வேட்பாளர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்பதால், அந்த இனத்தவரைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கின்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச் சாவும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவை அளித்தது. (இந்தக் கட்சி ஜார்கண்ட் மாநிலத் தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது.) இது எதிர்க்கட்சிகளின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியது.

இறுதியில், பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு 64 விழுக்காடு வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா 35 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் பலவீன மடைந்தது. பாஜக தனது வேட்பாளராக மேற்கு வங்காளத்தில் கவர்னராகயிருந்த ஜெகதீப் தன்கரை அறிவித்தது. இவர் மேற்கு வங்க கவர்னராகயிருந்தபோது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நாளும் பொழுதும் பிரச்னைகளைக் கொடுத்து வந்தவர். அரசியல் சாசன மரபுகளை மீறி மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டவர்.

இந்த உயர்பதவிக்கு இப்படிப்பட்ட ஒருவரை பாஜக அறிவித்தது. இது ஜனநாயக மாண்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலேயன்றி வேறில்லை. எதிர்க்கட்சிகள் மீண்டும் சரத்பவார் தலைமையில் கலந்தாலோசித்து தங்களது பொது வேட்பாளராகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மார்க்ரேட் ஆல்வாவை அறிவித்தன. இந்த எதிர்க்கட்சிகள் கூட் டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாதது மட்டுமல்ல, தன்னைக் கலந்தாலோ சிக்காமல் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது; எனவே திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பார்கள் என அதிரடியாக அறிவித்தார்.

இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மட்டு மல்ல; மம்தாவின் பாஜக எதிர்ப்பையே கேள்விக்குறியாக்கியது. தனது அரசோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த ஜெகதீப் தன்கருக்கு எதிராக நிற்காமல் அவருக்கு மறைமுகமாக மம்தா பானர்ஜி ஆதரவு வழங்கி விட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மார்க்க ரேட் ஆல்வா, மம்தா பானர்ஜியின் ஆதரவைக் கேட்டு வெளிப்படையாக அறிக்கை விட்ட போதிலும், மம்தா பானர்ஜி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

அறிவித்தபடியே, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப் பினர்கள் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலைப் புறக்கணித்தனர். அக்கட்சியினரின் 39 வாக்குகள் கிடைக்காமலேயே, மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். பாஜகவின் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல்களில் இரண்டு செ#திகள் வெளிப்பட்டன. ஒன்று எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை. மற்றொன்று பாஜகவின் கட்டுப்பாடான அமைப்பு முறை. குடியரசுத் துணைத்தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றிய வெங்க#யா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவராகும் வா#ப்பினை பாஜக வழங்கவில்லை.

எனினும் அதற்காக அவர் வருத்தமடைய வில்லை. கட்சியின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய பாஜ கவின் முன்னணித் தலைவர்களுக்கு இது போன்ற வா#ப்புகள் மறுக்கப்பட்ட போதும் அவர்களும் எந்தவிதமான முணுமுணுப்பு மின்றி கட்சியின் முடிவை ஏற்றுக் கொண்டனர். பல மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் கட்சியின் ஆணைப்படி பதவியிலிருந்து விலகி புதியவர்கள் வர வழிவிட்டுள்ளனர். இது போன்ற ஒரு கட்டுப்பாடு எதிர்க்கட்சிகளிடம் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இல்லை.

தற்போது மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. பெயர் தாங்கி முஸ்லிமாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப் பினர் பதவி வழங்கப்படாததால், அவர் அமைச்சரவையிலிருந்து விலகினார். அவ ருக்கோ அல்லது இன்னொரு பெயர் தாங்கி முஸ்லிமான கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கோ குடியரசுத் துணைத்தலைவர் வா#ப்பு வழங்கப்படலாமென பத்திரிகைகள் செ#தி வெளியிட்டன. ஆனால் பாஜக அவருக்கு வா#ப்பு வழங்காமல் ஏற்கனவே ஆளுநராகப் பொறுப்பிலிருந்த ஜெகதீப் தன்கருக்கு வா#ப்பு வழங்கியது.

இது குறித்தும் அந்தக் கட்சியில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் குடியரசுத் தலைவர் வா#ப்பு வழங்கப் படவில்லை என்ற அதிருப்தியில் நெஜ்மா ஹெப்துல்லா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்ற செ#தி தற்போது நமது நினைவிற்கு வருகிறது. பாஜகவிடம் எதிர்க்கட்சிகள் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

பாஜக கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சீர்குலைத்து, அனைத்துவிதமான அரசு, அரசு சாரா நிறுவனங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நிர்வாகத்துறை, நீதித்துறை யிலும் தனது வல்லாண்மையை நிலைநாட்டி வருகின்ற இந்தச் சூழலில்கூட எதிர்க்கட்சி கள் ஒன்றுபட்டுச் செயல்படாமல் இருப்பது நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக, மதச்ச õர்பற்ற சக்திகளையும் கவலை கொள்ள வைக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற நிலையிலிருந்து மாறி எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி பாஜக முன்னேறிச் செல்லும்போது எதிர்க்கட்சிகள் அந்த ஆபத்தை உணராமல் இருப் பது ஏன் என்று நமக்குப் புரியவில்லை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்