மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

புதிய நம்பிக்கை; புத்தம் புது உற்சாகம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள் மாநாடு, 16-30 SEPTEMBER 2022


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு, புதுச்சேரி உறுப்பினர்களுக்கான மூன்று நாள்
மாநாடு 2022 செப்டம்பர் 2,3,4 ஆகிய நாள்களில் திருச்சி இனாம்குளத்தூர் அஸ்ஸலாம்
அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி, அகில இந்தியப் பொதுச்
செயலாளர் T.ஆரிஃப் அலீ, தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா
மன்பயீ, மாநிலத் துணைத் தலைவர் K.M.சிராஜ் அஹ்மத், மத்திய HRD துறை இயக்குநர்
ஐ.கரீமுல்லாஹ், முன்னாள் மாநிலத் தலைவர்கள் H.அப்துர் ரகீப், A.ஷப்பீர் அஹமது,
மாநிலச் செயலாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழக ஜமாஅத்தே
இஸ்லாமி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மௌலவி முஹையதீன் குட்டி உமரியின் திருமறை விரிவுரையுடன் தொடங்கிய இந்த
மாநாட்டில் இஸ்லாமிய தர்பியாவும் சமகாலத் தேட்டங்களும், நஃப்ஸைச் செம்மைப்
படுத்துதல், சமகாலச் சூழலில் இகாமத்தே தீன், இளைஞர்களின் மனோபாவமும் நமது
அணுகுமுறைகளும், சூழலைப் பண்படுத்துதல், தனிநபர் பொருளாதாரத் திட்டமிடல்
போன்ற ஆழமான விரிவான தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கருத்தரங்கம் மாநில அழைப்பியல் துறைச் செயலாளர் வி.எஸ். முஹம்மத் அமீன் தலைமையில் "தமிழக மக்களின் மத, பண்பõட்டு சமூகத் தேவைகளைப் பற்றிய புரிதலும், அவற்றை அணுகும் முறைகளும்' என்ற தலைப்பில் மிகச் செறிவான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஃபக்ருத்தீன், முனைவர் சையத் அபூதாஹிர், சகோதரி ஃபாத்திமா ஆகியோர் பங்கேற்று ஆழிய பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். தமிழ்நாட்டு மக்களின் மத நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள், மொழி, சமூக நிலைகள் இக்கருத்தரங்கில் விரிவாக அலசப்பட்டன.

கலந்துரையாடல் மாநில கல்வித்துறைச் செயலாளர் முனைவர் ஹஜ் முகையதீன் தலைமையில் "தொடர்புகளை வலுப்படுத்தலும், தகவல் தொடர்பும்' எனும் கருப்பொருளில் மிகச் சிறப்பான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இஸ்லாமிய இயக்கத்துடன் இஸ்லாமிய சமுதாயச் சொந்தங்களின் தொடர்புகள், அவற்றில்  ஏற்படும்   பிரச்னைகள், இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுபவர் களுக்கான பணிச்சூழல், தொடர் தொடர் புக்கான வழிகள், சிந்தனை மாற்றத்திற்கான சூழல் என பல கோணங்களில் இந்தக் கலந் துரையாடல் நிகழ்வு விறுவிறுப்பாகவும், மிகப் பயனுள்ளதாகவும் அமைந்தது.

இந்தக் கலந் துரையாடல் நிகழ்வில் கோவை பெருநகரத் தலைவர் பி.எஸ்.உமர் ஃபாரூக், சென்னை மாநகரத் தலைவர் என்.அதாவுல்லாஹ், சகோதரி ராபியா பஸரி, சகோதரி மும்தாஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை அழகிய முறையில் எடுத்துரைத்தனர். விஷன் 2030 ஜ ம õ அ த் ÷ த இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு, புதுச் சேரி 2030 ஆம் ஆண்டு இலக்கை நிர்ணயித்து, அதற் கான திட்டமிட லைத் தீட்டியிருந்தது.

ஒவ்வொரு கிளை வட்டமும் 2030ஆம் ஆண்டிற்கான தூர நோக்குடனான திட்டங்களை முன்வைத்து பதாகைகள் தயாரித்திருந்தன. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பதாகைகள் மாநாட்டு அரங்கில் கண்காட்சியாக ஏற்பாடு செ#யப்பட்டிருந் தது. இக்கண்காட்சியைப் பார்வையிட்ட உறுப்பினர்களுக்கு புதுத் தெம்பையும், எதிர்கால நம்பிக்கையையும் விதைத்த தாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விஷன் 2030 குறித்த பவர் பா#ண்ட் பிரஷண்டேஷன் நிகழ்வில் வழங்கப்பட்டது. மாநில தர்பியா, HRD துறைச் செயலாளர் யூசுஃப் பாஷா திட்டங்கள் குறித்த விரிவான பார்வையை எடுத்துவைத்தார். அறிக்கை 2019  2022 ஜ ம õ அ த் ÷ த இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலத்தின் மூன்று ஆண்டு கால அறிக்கையை மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலா லுத்தீன் பவர் பா#ண்ட் பிரஷண்டேஷன் மூலம் வழங்கினார்.

அழைப்பியல் துறை, இஸ்லாமிய சமூகம், இந்திய சமூகம் பாதுகாப்பு, மக்கள் சேவை, கல்வி, ஊடகம், அமைப்பு, மகளிர் அணி, ஜி.ஐ.ஓ, சாலிடாரிட்டி என ஒவ்வொரு பிரிவின் கீழ் நடந்த பணி களை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங் கினார். திருக்குர்ஆன் கூட்டா#வு நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒரு தலைமையின் கீழ் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை ஆ#வு செ#தனர். ஆ#வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய வசனங்கள் முன்னரே கொடுக்கப்பட்டதால் உறுப்பினர்கள் தயாரிப்புடன் கலந்துகொண்டு விவாதித்தனர். ஆ#வு முடிவுகளை ஒவ்வொரு குழுத் தலைவரும் மிகச் சிறப்பாக வழங்கினர். இந்த அமர்வை மௌலவி சமீயுல்லாஹ் உமரி தொகுத்து வழங்கினார்.

சிறப்புரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் மௌலவி முஹம்மது சித்தீக் மதனி, மாநில மக்கள் சேவைத் துறைச் செயலாளர் ஐ.ஜலாலுதீன், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் பி.முஹம்மத் யூசுஃப் ஆகியோர் உரைகளை மிகச் சிறப்பாக வழங்கினர். அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி அவர்கள் உருதுவில் ஆற்றிய உரையை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் மிகத் திறம்பட உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கினார்.

அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ஆரிஃப் அலீ அவர்கள் மலையாளத்தில் நிகழ்த்திய உரைகளை கோவை சலீம் மிக நேர்த்தியாக உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கினார். நெறியாளர்களாக மண்டல அமைப்பாளர்கள் மூன்றுநாள் மாநாட்டின் ஒன்பது அமர்வுகளையும் மண்டல அமைப்பாளர்கள் வழி நடத்தினார்கள். முதல் அமர்வை திருச்சி மண்டல அமைப்பாளர் சையத் முஹம்மதுவும், அதனைத் தொடர்ந்த அமர்வுகளை கடலூர் மண்டல அமைப்பாளர் அப்துல் ஹமீது, மதுரை மண்டல அமைப்பாளர் முஹம்மது அப்பாஸ், கோவை மண்டல அமைப்பாளர் கே.எம்.முஹம்மத், செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர். அப்துல் நாஸர், வேலூர் மண்டல அமைப்பாளர் அப்துல்லாஹ் நாஸர், திருவாரூர் மண்டல அமைப்பாளர் டி.ஈ. நாஸார் ஆகியோர் மிகச் சிறப்பாக அமர்வுகளை நெறியாளுகை செ#தனர். அரங்கு, உணவு, தங்கும் ஏற்பாடுகள் அஸ்ஸலாம் கல்லூரி வளாகத்தில் ஒருபகுதி மாநாட்டு அரங்கமாகவும், மற்றொரு பகுதியில் ஆண், பெண்களுக்கõன தனித்தனி அரங்கமாக உணவு ஏற்பாடு செ#யப்பட்டது.

காலை, மதியம், இரவு வேளைகள் மட்டுமின்றி தேநீர் ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக அமைந்தது. ஆண்கள் பெண்களுக்கான தனித்தனி தங்குமிடம், வழி ஏற்பாடுகள் மிகத் திட்டமிடலுடன் அமைக்கப் பட்டிருந்தது. அஸ்ஸலாம் கல்லூரி வளாகத் தில் அமைந்துள்ள புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் உம்மு ஸாதிக் தொழுகைக்கான அழகிய வச திகளுடன் அமைந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ பேருரையை மௌலவி முஹம்மத் நூஹ் மஹ்ழரி வழங்கினார். இஹ்லாஸ் எனும் தலைப்பில் அமைந்த உரை உறுப்பினர்களுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது.

மாநாட்டின் இறுதிநாளில் அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி நகரத் தலைவர் முனைவர் ஹஜ் முஹையதீன் தலைமையில் கூ.உ.நாஸர், கமாலுத்தீன், ஐ.ஜலாலுதீன், முஹம்மது ஃபாரூக், மீரான், ஹைதர், சுல்தான், சலாஹுத் தீன் ஆகியோர் கொண்ட குழு மாநாட்டின் ஒவ்வொரு ஏற்பாட்டையும் மிகச் சிறப்பாகச் செ#திருந்தனர். ஜமாஅத் ஊழியர்கள், மகளிரணி, எஸ்.ஐ.ஓ, சாலிடாரிட்டி, ஜி.ஐ.ஓ ஊழியர்களும் தன்னார்வலர்களாக சிறப்பாகப் பணியாற்றினர்.

குறிப்பாக அஸ்ஸலாம் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் தன்னார்வலர்களாக சுறுசுறுப்புடன் மிகத் திறம்பட பணியாற்றினார்கள். கலை இரவு உறுப்பினர்களிடையே உற்சாகத்தை பெருக்கெடுக்கச் செ#த கலை இரவில் கவிதை, பாடல், நகைச்சுவை என பல திறமைகளை உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். மௌலவி இஸ்மாயீல் இம்தாதி, சையத் அபூதாஹிர், மௌலவி முஹம்மது அலீ ஸலாமி, வி.அதீகுர் ரஹ்மான் ஆகியோர் பாடல்களை பாடி அசத்தினர். வி.எஸ்.முஹம்மத் அமீன் கவிதை வாசித்தார். பி.சையத் இப்ராஹீம், அபூதாஹிர் ராஜா நகைச்சுவைத் துணுக்கு களை வழங்கினர்.

நினைவேந்தல் நிகழ்வாக அமைந்த இறுதி அமர்வு உறுப்பினர்களிடையே உற்சாகத்தையும், மகிழ்வையும் நிரப்பிய இந்த மாநாட்டின் இறுதிநாள் காலை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி.அப்துர் ரஹீம் அவர்களின் இழப்பால் சோகம் நிரம்பியது. மாநாட்டு அரங்கிலேயே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. இறுதி அமர்வின் வழக்கமான நிகழ்வுகள் இரத்து செ#யப்பட்டதுடன் இறுதி அமர்வு நினைவேந்தல் நிகழ்வாக மாறியது. அப்துர் ரஹீம் அவர்களுடன் நெருங்கிப் பழகிய தோழமைகள் அவர்களுடனான தமது நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். அகில இந்தியத் தலைவரின் மாநாட்டு நிறைவுரையும் இதனை மையப் படுத்தியே அமைந்தது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்