ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கத்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் கடந்த 26.08.2022ஆம் நாள்
இறைவனின் பக்கம் மீண்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
(நாம் இறைவனிடமிருந்தே வந்தோம். அவன் பக்கமே மீளக்கூடியவர்களா# இருக்கின்றோம்.)
1992ஆம் ஆண்டு எஸ்.ஐ.ஓ நிகழ்வு ஒன்றில் மௌலானா அவர்களை முதன் முதலாகச் சந்தித்தது நினைவுக்கு வருகின்றது. அப்போது நான் எஞ்சினீயரிங் முதலாம் ஆண்டு மாணவன். அந்த நிகழ்வில் மௌலானா அவர்கள் உரை நிகழ்த்தத் தொடங்கியபோது குரல் எந்த அளவுக்கு மெதுவாக இருந்தது எனில் நெருக்கமாக அமர்ந்திருந்த போதும் கேட்பது சிரமமாக இருந்தது. நாங்கள் எல் லோரும் உடல் அசையாமல் உரையில் ஒன்றிவிட்டோம். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே குரல் உயர்ந்து கொண்டே போனது. உரையி னூடே சில தருணங்களில் உணர்வும் மன எழுச்சியும் ஒரு சேரக் குவிந்தபோது அந்த சன்னமான குரல் அரங்கத்தையே அதிரச் செ# கின்ற கர்ஜனையாக மாறியதையும் பார்த்தோம்.
இந்த இரண்டும் கலந்த பாணி மௌலானாவின் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் இருந்த தோடு மட்டுமின்றி அதுதான் அவருடைய இயல்பிலேயே ஒன்றிப் போன முக்கியமான கூறு என்பதை பிற்பாடு அறிந்து கொண்டேன். உலகம் முழுவதும் மௌலானா அவர்கள் ஒரு மிகப் பெரும் மார்க்க அறிஞராக, தேர்ந்த எழுத்தாளராக, பன்னூலாசிரியராக புகழ் பெற்றிருக்கின்றார். மௌலானா அவர்கள் தொடாத துறையே இல்லை என்கிற அளவுக்குப் பல்வகைப்பட்ட துறைகளில் எழுதி குவித்திருப்பதுதான் அவருடைய எழுத்துச் சேவையின் மிகப் பெரும் சிறப்பு ஆகும். குர்ஆனிய போதனைகள், நபிகளாரின் வர லாறு, நபிமொழிகள், சமூகவியல், வரலாறு, ஃபிக்ஹு, அரசியல் நிலைமைகள், இஸ்லாமிய அழைப்புப் பணி, தஸ்கியா, தர்பியா என எல்லாத் தலைப்புகளிலும் அவர் எழுதிய அரிய, பெரிய படைப்புகளும் ஆக்கங்களும் நிறைந்திருக்கின்றன.
நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வா#ந்த தமிழ்நாட்டின் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் படித்து முடித்ததுமே மௌலானா வுக்கு இஸ்லாமிய இயக்கத்தின் தனிச் சிறப்பு மிக்க முன்னோடிகளின் தோழமையும் நிழலும் கிடைத்துவிட்டன. மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி, மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி, மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வி, மௌலானா சையத் அஹ்மத் உரூஜ் காதிரி என பெரும் பெரும் ஆளுமைகளிலிருந்து அவர் அருளைச் சம்பாதித்துக் கொண்டார். அலீகரிலிருந்து ஆங்கிலத்தில் பி.ஏ பட்டம் பெற்றார்.
மௌலானாவின் ஆக்கங்களில் ஓர் ஆரா#ச்சியாளரின் பரந்துவிரிந்த அறிவும், ஒரு விமர்சகரின் நுட்பமான பார்வை யும், ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கனிவும் சுவையும் கலந்த பாணியும், ஓர் அழைப் பாளரின் அக்கறையும் ஒரே சமயத்தில் எல்லாமே ஒன்று சேர்ந்திருந்தன. குடும்ப மும் பெண்களும் முதல் மனித உரிமைகள் வரை, பொருளாதாரம், அரசியல் முதல் இறைத்தொடர்பு, இதயத் தூ#மை வரை அவர் வகைவகையான தலைப்புகளில் தொடர்ந்து இடைவிடாமல் எழுதினார். மேலும் ஒவ்வொரு தலைப்பிலும் மிகவும் உயர்வான சொத்துகளை விட்டுச் சென்றார்.
மௌலானா அவர்கள் தம்முடைய இளமைப் பருவத்தில் எழுதிய நூல்தான் "நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்'. இந்த நூல் இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மிகப் பெரும் அளவில் மக்களைக் கவர்ந்தது. "இஸ்லாத்தின் பக்கம் அழைப்போம்' நூலோ அந்தத் தலைப்பில் முழுமையான வழிகாட்டுதலை வழங்குகின்ற சிறப்பான நூல் ஆகும். சமகாலத்தின் பல்வேறு முக்கியமான பிரச் னைகள் குறித்தும் மௌலானா அவர்கள் மிக அதிகமாக எழுதியிருக்கின்றார்.
ஃபிக்ஹு, மார்க்க கோணங்களில் முழுமையாக வழிகாட்டி யிருக்கின்றார். நவீன சமூகவியல், பண்பாட்டு பின்னணியில் முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவுகளும் தொடர்புகளும், உடல்நலம், நோ# தொடர்பான விவகாரங்கள், மக்கள் சேவை என பல்வேறு விவகாரங்கள் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட தலைப்பு தொடர் பான தொன்மையான கிளாசிக்கல் நூல்களையும் ஆழமாக வாசித்து வந்தார். மேலும் நவீன சமூகவியல் வல்லுநர்களின் ஆக்கங் களிலிருந்தும் முழுமையாகப் பயனீட்டிக் கொள்வார்.
தலைப்பைக் குறித்தும் அது தொடர்பான நடைமுறை பிரச்னைகள் குறித்தும் முழுமையாக விமர்சிப்பார். அதன் பிறகு தொன்மைக்காலத்து அறிஞர்கள் முதல் பிற்காலத்திய அறிஞர்கள் வரை எல்லாத் தரப்பினரின் வெவ்வேறு வகையான கருத்துகளையும் பட்டியலிடுவார். அந்தக் கருத்துகளை முழுமையாக ஒப்பா#வு செ#த பிறகு குர்ஆன், நபிமொழியின் ஒளியில் தம்மு டைய கருத்தையும் முத்தா#ப்பாகச் சொல்லி முடித்து வைப்பார். மௌலானா அவர்களின் இந்த அரும் öபரும் நூல்களின் ஒரு முக்கியமான தனிச்சிறப்பு என்னவெனில் அவர்கள் இவற்றை ஏதோவொரு அறையில் அமர்ந்து கொண்டோ வெறுமனே பாடமும் வகுப்பும் எடுத்துக்கொண்டோ எழுதி முடிக்கவில்லை. அதற்கு மாறாக ஒரு முழுமையான, நிறைவான, சுறுசுறுப்பான மும்முரமான இயக்கச் செயல்பாடுகளுக்கும் அழைப்புப் பணிகளுக்கும் இடையில் கொடும் பாறைகள் சூழ்ந்த செயற்களத்தில் வியர்வை சிந்தி உழைத்தவாறு இந்த மாபெரும் எழுத்துச் சேவையை ஆற்றி முடித்திருக்கின்றார்கள்.
மௌலானா அவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கும் சாட்சி யாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் இந்த நீண்ட வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திர மாகவும் இருந்தார். 1956இல் புதிய அமைப் புச் சட்டத்தின் ஒளியில் முதல் முறையாக தேர்தல்கள் நடந்தன. அப்போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி அவர்கள் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் காலியான மத்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினருக்கான தேர்தல் நடந்தபோது தாம் முதல் முறையாக மத்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாக மௌலானா அவர்களே ஒருமுறை சொல்லியிருக்கின்றார்.
அப்÷பாது அவருக்கு வயது 21. அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து இடைவிடாமல் 68 ஆண்டுகள் மத்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினராக செயலாற்றி வந்தார்கள். 1986இலிருந்து மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்து வந்தார்கள். நான்கு மீக்காத்கள் அகில இந்தியத் துணைத் தலைவராக இருந்தார்கள். மூன்று மீக்காத்கள் பன்னிரண்டு ஆண்டுகள் அகில இந்தியத் தலைவராக இருந்தார்கள். இந்தத் தருணத்தில் மௌலானாவுடன் சேர்ந்து இயங்கிய தருணங்களும் அவருடைய விரல் பிடித்துக்கொண்டு நாம் இஸ்லாமிய இயக்கத்தில் பயணித்த சந்தர்ப்பங்களும் மறக்க முடியாத, உணர்வும் ஊக்கமும் தருகின்ற நினைவுகளும் மனத்துக்குள் முட்டி மோது கின்றன.
புதிய தலைமுறைக்கு மௌலானா அவர்களின் வாழ்விலிருந்து கிடைக்கின்ற மிகப் பெரும் பாடம் குறிக்கோள் சார்ந்த வாழ்வும், குறிக்கோளின் மீது அனைத்தையும் குவித்து வைத்திருக்கின்ற பாங்கும்தாம். தம்முடைய வாழ்வின் தொடக்க நாள்களிலேயே மௌலானா அவர்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தார். தம்மைத் தாமே இஸ்லாமிய இயக்கத்துக்காக அறிவார்ந்த சேவைகளில் அர்ப்பணித்துவிட்டார். அதன் பிறகு ஒரே ஒரு முறை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இந்த நோக்கத்துக்காக அவர் வறட்சி, வசந்தம் என எல்லாவகையான பருவ நிலைகளையும் இரவு, பகல் என இருபத்தி நான்கு மணி நேரங்களையும் முழுமையாக அர்ப்பணித்துவிட்டார்.
பிறந்த மண்ணிலிருந்து எப்படிப்பட்ட ஹிஜ்ரத் செ#தார் எனில் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகின்ற நினைப்பு எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஜமாஅத்தின் தலைமையகம் ராம்பூரில் இருந்தபோது ராம்பூர்வாசியாகிவிட்டார். பதிப்புத்துறை அலீகருக்கு மாற்றப்பட்ட போது அலீகரில் எந்த அளவுக்கு இரண்டறக் கலந்துவிட்டார் எனில் மக்கள் அவரை அலீகரின் பூர்விகவாசியாகவே நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன்பிறகு மத்தியத் தலைமையகத்தில் பொறுப்புகள் ஏற்றபோது தில்லிவாசி ஆகிவிட்டார்.
வாசிப்பு, ஆ#வு, எழுத்து, பதிப்பு போன்ற பணிகளுக்காக தம்முடைய ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணிப்பதாக தம்முடைய இருபது, இருபத்தியோரு வயதில் முடிவெடுத்த அவர் தம்முடைய எண்பத்தியேழாவது வயது வரை அந்த முடிவைக் குறித்து அலட்சியமாக இருந்ததில்லை. வருமானம், வேலை பற்றிய துக்கம் அவரை ஒருபோதும் இந்தப் பாதையிலிருந்து திருப்பியதில்லை. தலைமைப் பொறுப்பும் அதனோடு கூடிய ஓயாத பணிகளும்கூட அவரை அந்தத் தீர்மானத்திலிருந்து கவனத்தைத் திருப்பவில்லை.
மௌலானா அவர்களின் இறப்பு என்னைப் பொறுத்தவரை மிகப் பெரும் தனிப்பட்ட துயரம் ஆகும். இரண்டாவது முறையாக அநாதையாகிவிட்டதாகவே உணர்கின்றேன். முப்பதாண்டுகாலம் நீடித்த பரிவும் கனிவும் நிறைந்த அவருடைய தோழமையால் நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஏராளம். அவருடைய முறையான மாணவர் ஆவதற்கான சிறப்பு எனக்கு வா#க்கவில்லை என்றா லும் அவருடனான என்னுடைய தொடர்பு எத்தகையதாக இருந்ததெனில் தங்குதடை யின்றி அவரிடமிருந்து அறிவுரையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து பெற்று வந்துள்ளேன்.
பயனடைந்து வந்துள்ளேன். எஸ்.ஐ.ஓ காலத்தில் மாணவர்கள் மத்தியில் அவருக்குத் தனி மரியாதையும் பிணைப்பும் இருந்தன. ஜமாஅத் தலைமையகத்தில் ஏதேனும் வேலை நடக்க வேண்டுமென்றால் அவர் மூலமாக காரியத்தை நகர்த்தினால் நடந்துவிடும் என்கிற நம்பிக்கை நம் மக்கள் மத்தியில் இருந்தது. அவர் தற்காலிக அமீராக அடிக்கடி பொறுப்பேற்பார். அந்தச் சந்தர்ப் பங்களில் அமைப்புக்கான சின்ன, பெரிய தேவைகளுக்காக அவரைத்தான் அணுகு வோம். சாதித்துக் கொள்வோம். எங்களுடைய பயிற்சி முகாம்களில் நிகழ்ச்சிகளிலும் ஒரு முக்கியமான பேச்சாளராக மௌலானா அவர்கள் இருந்து வந்தார்கள்.
அந்தக் காலத்தில் நான் ஃபிக்ஹு, ஹதீஸ் போன்றவற்றை ஆழமாக வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதற்காக மௌலானா அவர்களைத்தான் மீண்டும் மீண்டும் போ#ச் சந்திப்பதற்கான வா#ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. எழுத்துக் களத்தில் நான் மேற்கொண்டு வந்த முயற்சி களிலும் மௌலானா அவர்கள் விமர்சன மும் வழிகாட்டுதலும் அளித்து வந்தார்கள். 2003இல் எஸ்.ஐ.ஓவில் என்னுடைய பணிக்காலம் நிறைவு பெற்ற பிறகு நடந்த பிரிவு உபசார விழாவின்போது மௌலானா அவர்கள் வாழ்த்துரையின் போது சொன்ன வாசகங்கள் இன்றும் என்னுடைய மனத் திரையில் அழுத்தமாகப் பதிந் திருக்கின்றன.
2007இல் மௌலானா அவர்கள் ஜமாஅத்தின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதே ஆண்டு நானும் முதல்முறையாக மத்திய ஆலோச னைக் குழு உறுப்பினராகத் தேர்வானேன். அப்போது எனக்கு வயது 33. மத்திய ஆலோ சனைக் குழுவின் அமர்வுகள் உண்மை யில் என் பயிற்சிக்கான வழிவகைகளாகத்தான் இருந்தன. அந்த நாள்களில் மத்திய ஆலோச னைக் குழு மௌலானா முஹம்மத் சிராஜுல் ஹஸன்(ரஹ்), மௌலானா ஷஃபி முனீஸ்(ரஹ்), டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்), டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி(ரஹ்), டி.கே. அப்துல்லாஹ் மௌலவி(ரஹ்), மௌலானா முஹம்மத் யூசுஃப் இஸ்லாஹி(ரஹ்) என ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த நட்சத்திர மண்டலமாகத்தான் ஜொலித்துக் கொண்டிருந் தது.
மௌலானா அவர்களோ இந்த வட்டத்தின் அவைத் தலைவராக இருந்தார். மௌலானாவும் பிற பெரியோர்களும் வெளிப்படுத்திய பாசத்தாலும் ஊக்கத்தாலும் தான் பெரும் பெரும் மார்க்க அறிஞர்களும் உலகத்தைக் கற்றுத் தேர்ந்த வல்லுநர்களும் கொண்ட அந்த கண்ணியத்துக்குரிய அவை யில் எனக்கும் வா# திறந்து எதனையும் சொல்வதற்குத் தைரியம் வந்தது. அந்தப் பெரியோர்களுக்கு முன்பு என்னுடைய அந்தஸ்து நர்சரி பள்ளிக்கூட மாணவனைப் போன்றதாகக்கூட இருக்கவில்லை. ஆனாலும் ஆலோசனைக் குழுவின் விவாதங்களின்போது அந்த மிகப் பெரும் ஆளுமைகளுக்கு முன்பு நம்முடைய கருத்தை முன் வைப்பதற்கோ, மறுத்துரைப் பதற்கோ எந்தவிதமான சிரமமோ தயக்கமோ ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
நாம் மிகவும் சுதந்திரமாக நம் தரப்பு கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துவைப்போம். பரிந்துரைகளை முன் வைப்போம். மௌலானா ஜலாலுத்தீன் உமரி, பிற பெரியோர்களின் கருத்துகளை ஏற்க மறுப்போம். முரண்படுவோம். சில சமயம் விவாதங்கள் மிகவும் சூடு பிடித்து விடும். காரசாரமாகப் பேசுவோம். ஆனால் அந்தப் பெரியோர்கள் அனைவருமே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஊக்கமும் உற்சாகமும்தாம் அளித்து வந்தார்கள். இந்த உத்தமமான ஜனநாயக பாரம்பர்யம் இஸ்லாமிய இயக்கத்தின் பண்பாட்டின் மிகப் பெரும் தனிச் சிறப்பாகும்.
இது மௌலானா ஜலாலுத்தீன் உமரி போன்ற பரந்து விரிந்த மனப்பான்மையைக் கொண்ட பெரியோர்களின் அருள் ஆகும். முப்பதாண்டுகளாக நீடித்த இந்த பாசப் பிணைப்பின் ஊடே மௌலானாவிடமிருந்து அறிவுக் களத்திலும் இயக்க, அமைப்புத் தளத்திலும் பயன்பெற்று வந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக எளிமை, கடுமையான உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, இக்லாஸ், இறைவனுக்காகவே அனைத்தையும் செ# கின்ற பண்பு என எண்ணற்ற பாடங்களை மௌலானாவின் பாடசாலையிலிருந்து பெற்று வந்தேன்.
ஃபஜர் தொழுகையின் போது விசும் பல்களுடன் கூடிய, கண்ணீர்த் துளிகளால் நனைந்த, இதயத்து நாளங்களை சிலிர்க்கச் செ#கின்ற அவருடைய குர்ஆன் திலாவத், வளமார் ரமளான் மாதத்தில் அவர் நடத்தி வந்த படிப்பினையும் பாடமும் நிறைந்த குர்ஆன் விரிவுரை அமர்வுகள், ஜமாஅத்தின் பயிற்சி முகாம்களில் அவர் அளித்து வந்த பண்பட்ட உரைகள், மேலும் நடக்கும்போதும், அமரும் போதும் எல்லா நேரங்களிலும் அளித்து வந்த சின்னச் சின்ன போதøனகள், ஆலோசனைகள்....! தஸ்கியா, தர்பியத்துக் கான அந்த விலைமதிப்பற்ற அருள்வளத்தின் இழப்பு, திண்ணமாக நம்மைப் போன்ற மக்க ளுக்கு மிகப் பெரும் இழப்பாகும்.
வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் அந்த இழப்பை ஈடு செ#வானாக! மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்களை தன்னுடைய கருணைக் குடிலில் சேர்த்துக் கொள்வானாக! அவர் செ#த மகத்தான தியாகங்களையும் உழைப்பையும் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்வானாக! இஸ்லாமிய இயக்கத்துக்கு நல்லதொரு மாற்றை அருள்வானாக! ஆமீன்.