மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை இஸ்லாம்

நாம் செய்ய வேண்டியது என்ன?
பேரா. முஹம்மத் சலீம் இன்ஜினியர், 16-31 ஜனவரி 2023


கடந்த இதழ் தொடர்ச்சி...

தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் நிகழ்வுகளும் சூழலும் குடும்ப அமைப்பில் பெரிதும் தாக்கம் செலுத்தி குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது. உலகளாவிய நிகழ்வுகளின் விளைவாக செயற்கையாகவே இஸ்லாமிய வெறுப்பு மேலெழுந்து வருகிறது. ஏனெனில் அவர்கள் அரசியல் களத்தில் நிலைத்து நிற்பதற்காக வெறுப்பை விதைப்பது அவர்களுக்குக் கட்டாயம் ஆகிவிட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைப்பது இலகுவாகிவிட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு நினைவூட்ட நான் விரும்புகின்றேன்.

ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதன் பிறகுதான் இது முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் போக்கு என்பது நிரூபணமாகி, பின்னர் நாடாளுமன்றம் வாயிலாக அது தடை செய்யப்பட்டது. அதன் பிறகு விஷயங்கள் இவ்வளவு எளிதாக இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட்டு தன்பாலின ஈர்ப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டு குற்றமற்ற செயல் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் தாக்கம் இந்தியா முழுவதுமுள்ள ஃஎஆகூ இயக்கங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இயக்கங்கள் அமைப்புகளிலும்கூட தென்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புகளும் நாடாளுமன்றச் சட்டங்களும் சாமானிய வெகுஜன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனும் பெயரில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 377 பிரிவை இஸ்லாமிய ஷரீஅத்திற்கு நேர்முரணாக நிறுத்தியிருக்கின்றன. அல்லாஹ் இதனை மிகப் பெரிய இழிசெயல் என திருமறைக் குர்ஆனிலேயே கூறிவிட்ட பிறகு ஒரு முஸ்லிமால் இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதுமட்டுமின்றி இது சமூக, குடும்ப அமைப்புகளில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அரசு துளியும் கவனம் கொள்ளவில்லை. அதுபோலவே திருமணமின்றி கூடி வாழும் (ஃடிதிடிணஞ் கூணிஞ்ஞுtடஞுணூ) முறையும் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இவையனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமானது மட்டுமின்றி வெகுஜன மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்புகளையும் தீங்குகளையும் ஏற்படுத்தவல்லது.

முத்தலாக் விவகாரம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு அதன் மூலமாக முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து சம்பவங்கள் எளிதில் நடந்து விடுகின்றன எனும் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் குர்ஆனின் செய்திகளுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தில் தலாக் விவகாரம் முன்னெடுக்கப்படவில்லை என்பது ஓரளவிற்கு உண்மையாக இருப்பினும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியாக முஸ்லிம் தனியார் சட்டத்தை நிர்மூலமாக்குவதற்கான ஓர் ஏற்பாடாகவே உணர வைக்கிறது. அதுபோலவே கர்நாடகாவில் ஹிஜாப், கேரளாவில் குலா எனத் தோன்றிய பிரச்னைகளையும் அதற்கான உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் பார்க்கின்றபோது மனதில் எழும் கேள்வி இஸ்லாமிய ஷரீஅத், முஸ்லிம் தனியார் சட்டங்கள், மத வேதங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த நீதிமன்றங்களுக்கு உரிமை உள்ளதா? உள்ளது என்றால் அதன் எல்லைகள் என்ன?

இது மிகவும் முக்கியமானதொரு விஷயம். எந்தவொரு மதம், சித்தாந்தமானாலும் அதன் அடிப்படைகள் யாவை, தேவைகள் யாவை, எதற்கு முன்னுரிமை என நிர்ணயிக்கும் உரிமை அந்த மதத்தின் மீதும் சித்தாந்தத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் அதன் அறிஞர்களுக்கும் மட்டுமே உள்ளது. குடிமக்களின் உரிமைகள் நிறைவேற்றப்படுகிறாதா? நீதி நிலைநாட்டப்படுகிறதா? என்று கண்காணிப்பதுதான் நீதிமன்றங்களின் கடமை.

அதற்கு மாற்றமாக குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்த நினைப்பதும், புதுமையான சட்டங்களை வகுப்பதும் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வழிவகுத்துக் கொண்டும் இருக்கிறது.

இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது அவசியமான ஒன்று. குடும்ப அமைப்பில் ஏற்படும் சீர்குலைவைத் தவிர்க்க நம்மால் என்ன செய்ய முடியும்? விவேகமாக நம்மால் எப்படிச் செயல்பட முடியும்? எனும் கேள்விகளை ஆய்வு செய்யும்போது அதற்கான காரணங்களும் தீர்வுகளும் நம் முன் வருகின்றன. அவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தேர்தல் காலங்களில் பொதுச் சிவில் சட்டம் பேசுபொருளாக்கப்பட்டு பூதகரப்படுத்தப்படுகிறது. சில மாநிலங்கள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. அதற்கான ஆய்வுக் குழுக்களும்கூட சில மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளன.

என்ன செய்தால் முஸ்லிம்கள் துன்பப்படுவார்கள், துயரப்படுவார்கள் என்பதை அறிந்து அரசின் கொள்கைகள் செயல்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து இவை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் நலனுக்கு முரணானது என்பதை அறிந்து கொண்டு சாமானிய முஸ்லிம் எப்படிச் செயல்பட வேண்டும்? மார்க்க அறிஞர்கள் என்ன செய்ய வேண்டும்? இஸ்லாமிய இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி சில வழிகாட்டலை முன் வைக்க விரும்புகின்றேன்.

முதலாவதாக நாம் ஷரீஅத்தின் அடிப்படையில் செயல்படத் தொடங்க வேண்டும். அடூடூ ஐணஞீடிச் Mதண்டூடிட் கஞுணூண்ணிணச்டூ ஃச்தீ ஆணிச்ணூஞீ இந்த விஷயத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டேதான் உள்ளது. நம் விவகாரங்களை நமக்குள் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரச்னை எதுவாக இருப்பினும் சரி நமக்குள் முடிந்தளவு தீர்த்துக் கொள்ள முயலவேண்டும். நீதிமன்றங்களின் தலையீடு என்பது வெறும் நீதிபதிகளின் கருத்தோட்டத்துடன் மட்டும் நின்றுவிடாது. பெரும்பான்மை கருத்தோட்டம், உலகளாவியக் கண்ணோட்டம் போன்ற பலதும் தாக்கம் செலுத்துபவைதான் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என்பதும்கூட ஒரு வகையில் நம்மை கவலையில் தள்ளுவதாக உள்ளது.

ஒன்று: முஸ்லிம்கள் இஸ்லாமியக் குடும்ப, சமூக அமைப்பில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதன்படி செயல்பட்டு பிறரையும் செயல்பட ஆர்வமூட்ட வேண்டும். எதையேனும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் அதன்படி செயல்படுவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கிறது. தனியார் சட்டங்களை நாம் பற்றிப் பிடித்து நடந்தால்தான் பிறருக்கும் அதன் நன்மைகளும் நுட்பங்களும் புரிய வரும்.

இரண்டு: இஸ்லாம், இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்புகள் குறித்த தவறான கண்ணோட்டங்களைத் துடைத்தெறிய முழு முயற்சி செய்ய வேண்டும். இஸ்லாமியக் குடும்ப அமைப்பு குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துபவர்கள் உண்மையில் தாங்கள் ஏற்றுக்கொண்ட நெறிக்கு மாற்றமாகவே செயல்படுகிறார்கள். அதேநேரம் இன்னும் சில எழுத்தாளர்கள் கண் முன்னால் நடந்தேறும் உண்மைகளையே எழுதுகிறார்கள். நீதிபதிகளும்கூட சில நேரங்களில் நடப்பவற்றிற்கு ஏற்பவே தீர்ப்புகளை எழுதுகிறார்கள்.

ஆகவே இஸ்லாத்தின் செய்திகளை மெய்ப்பொருள் மாறாமல் எல்லோருக்கும் விளங்கும் மொழியில் முன் வைப்பது அவசியமாகும். இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை மட்டுமல்ல, இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழங்கும் நெறிகளையும் எவ்வித மாற்றமுமின்றி முன் வைக்க வேண்டும். இது போன்ற முன் வைப்புகளினாலேயே தீர்வுகள் கிடைக்கும்.

இஸ்லாம் ஒருபோதும் விவாகரத்தைச் சாதாரணமான ஒன்றாகக் கருதவில்லை. இறைவனால் அனுமதிக்கப்பட்டு இறைவனாலேயே அதிகமாக வெறுக்கப்பட்டது விவாகரத்துதான். ஆகவே உறவுகள் உடையாமல் இருக்க குடும்பங்களும் சமூகமும் முயற்சி செய்ய வேண்டும்.

இன்று நீதிமன்றங்களில் குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகளும் இழுத்தடிப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இது போன்ற வேளையில் இஸ்லாம் முன்வைக்கும் விவாகரத்துச் சட்டமும் முஸ்லிம் தனியார் சட்டமும் பொதுவெளியில் பேசுபொருளாக்கப்பட்டால் மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

தமிழில்: சையத் ஷகீல் அஹமத்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்